பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பச்சைக்கொடி!
அதிகபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி
குறித்த நேரத்தில் இலக்கை அடைய ரயில்வே திட்டம்

புதுடில்லி : ரயில் பயணத்தின்போது தாமதம் ஏற்பட்டால், கால இழப்பை ஈடுசெய்ய, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் ரயில்களை செலுத்தும்படி, ரயில் டிரைவர்களை, ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம், குறித்த நேரத்தில், குறிப்பிட்ட ஸ்டேஷன்களுக்கு, ரயில்கள் சென்றடைய முடியும்.

பச்சைக்கொடி,அதிகபட்ச வேகம்,ரயில்களை இயக்க,அனுமதி


கடந்த, 2000ல், ரயில்வே பிறப்பித்த உத்தரவுப்படி, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் ரயில்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தவறு இழைக்கும் ரயில் டிரைவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனால், அதிகபட்ச வேகத்தில் சென்றால், தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், ரயில் டிரைவர்கள், மிதமான வேகத்தில் ரயில் ஓட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால், நாடு முழுவதும், பெரும்பாலும், குறித்த நேரத்தில் ரயில்கள் செல்வது கிடையாது. இதுகுறித்து, ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதையடுத்து, ரயில் டிரைவர்களுக்கு, ரயில்வே அமைச்சகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், ரயில் பயணத்தின்போது தாமதம் ஏற்பட்டால், கால இழப்பை ஈடுசெய்ய, அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தில் ரயில்களை செலுத்தும்படி, ரயில் டிரைவர்களை, ரயில்வே அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம், குறித்த நேரத்தில், செல்ல வேண்டிய இடத்துக்கு ரயில்கள் சென்றடையும் என, ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து, வரும், 15ல், ரயில்வே வெளியிடும் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்படும்.

மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச வேகம், மணிக்கு, 110 கி.மீ., ஆனால், அவை, சராசரியாக, 40 - 50 கி.மீ., வேகத்தில், தற்போது செல்கின்றன. உயர் பிரிவு ரயில்களான, ராஜ்தானி, சதாப்தி ஆகியவற்றின் அனுமதிக்கப்பட்ட உச்சபட்ச வேகம், மணிக்கு, 130 கி.மீ., இவற்றின் சராசரி வேகம், தற்போது, 80 - 90 கி.மீ., ஆக உள்ளது.

இதுகுறித்து, ரயில் டிரைவர் ஒருவர் கூறியதாவது: இதுவரை அனுமதிக்கப்பட்ட வேகம், அதிகமாக இருந்தபோதும், தண்டனைக்கு ஆளாவோம் என்ற அச்சத்தில் ரயில் டிரைவர்கள், ரயில்களை குறைந்த வேகத்தில் செலுத்தி வந்தனர்.

தற்போது, சாதாரண வேகமே, மணிக்கு, 105 கி.மீ., ஆக நிர்ணயம் செய்யப்படுவதால், பல்வேறு காரணங்களால் ஏற்படும் கால தாமதத்தை ஈடுசெய்யும் வகையில், அதிகபட்ச வேகத்தில் ரயில்களை செலுத்த முடியும். இதனால், தாமதம் ஈடுசெய்யப்பட்டு குறித்த நேரத்தில் செல்ல வேண்டிய ரயில் நிலையங்களை சென்றடைய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

ரூ.1.82 லட்சம் கோடி கூடுதலாக தேவை:

நாடு முழுவதும் நிறைவேற்றப்பட்டு வரும், 200க்கும் மேற்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு, மதிப்பீட்டை விட கூடுதலாக, 1.82 லட்சம் கோடி ரூபாய் செலவாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அரசு அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசு, 343 திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இவற்றில், 204 திட்டங்கள் ரயில்வே தொடர்பானவை. ரயில்வே திட்டங்களுக்கு ஏற்கனவே செய்யப்பட்ட மதிப்பீட்டை விட கூடுதலாக, 1.82 லட்சம் கோடி ரூபாய் செலவாகி வருகிறது. நடப்பாண்டு, ஏப்ரல் வரை, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள, 204 ரயில்வே திட்டங்களுக்கு, 1.29 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் என, மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு வகைகளில், இந்த திட்டங்களுக்கான செலவுகள் அபரிமிதமாக அதிகரித்து வருகின்றன. இதனால், இத்திட்டங்களை நிறைவேற்றி முடிக்க, 3.12 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. செலவு அதிகரிப்பால், 141 சதவீதம் அல்லது, 1.82 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Welcome Back to 1900AD - korkai,இந்தியா
13-ஆக-201818:33:53 IST Report Abuse

Welcome Back to 1900ADwithout crossing delay,without halt delay,they can maintain an average speed of 80km/hr which is much enough to reach the destination on time. For example guruvayoor train reaches Kovilpatti at 6.35PM(Actual Arrival time 5.45PM).But it can reach Trivandrum central on time 11:15PM which is not possible by Bus transport.no need for speed increase, So Guruvayoor express is my favourite express.

Rate this:
BoochiMarunthu - Paradise papers,பனாமா
13-ஆக-201817:04:50 IST Report Abuse

BoochiMarunthuகுரங்கு கையில் பூமாலை . இந்த ரயில்வே மந்திரியை மாத்தவேண்டும் .

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-ஆக-201821:03:27 IST Report Abuse

Manianஉன்னைப் போலவே மந்திரியையும் பார்க்கும் உன் உள்ளம் போற்றத்தக்கதே. ...

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
13-ஆக-201815:39:11 IST Report Abuse

ganapati sbஅணைத்து தண்டவாளங்களை சிறப்பாக பராமரித்து அணைத்து ரயில்களையும் ஒருங்கே அதிவேகமாக இயக்கினால் இது சாத்தியமானதே

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-ஆக-201823:56:51 IST Report Abuse

Manianஆனால் பழைய தொழில் முறையில் அமைந்த தண்டவாளலங்கள், இணைப்புக்கள், சினல்கள் எல்லாம் மாற்ற பல காலம் ஆகும். அதைவிட எல்லவரையும் தற்போதய தொழில் நுட்பத்தில் மாற்றுவதுவதே சரி. ஆனால், மத்திய அரசாங்கத்தை கொள்ளை அடிக்க முயற்சிக்கும் சந்த்ர பாபு நாயுடு போன்றவர்கள் இருக்கும் அவரை தேச நன்மை கிடைக்காதே நான் போடியில் பக்தன் இல்லை. இருந்தாலும், உண்மையையம் சொல்லாமல் விடுவது தவறு. ...

Rate this:
மேலும் 29 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X