சியாச்சின் வீரர்களுக்கான உடைகள் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சியாச்சின் வீரர்களுக்கான உடைகள்
உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு

புதுடில்லி : 'உலகின் மிக உயரமான போர்க்களமான, சியாச்சினில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் நாட்டு வீரர்களுக்கான, உடைகள் உள்ளிட்ட பொருட்களை, விரைவில் உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

Indian soldiers,Siachen,special indigenous clothing,equipment,சியாச்சின்,வீரர்களுக்கான உடைகள்,உள்நாட்டிலேயே,தயாரிக்க,முடிவு


இமயமலையில், கரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில், தரையிலிருந்து, 18 ஆயிரத்து, 875 அடி உயரத்தில், சியாச்சின் பனிச்சிகரம் உள்ளது. இதுதான், உலகிலேயே மிக உயரமான போர்க்களமாக கருதப்படுகிறது. இங்கு பாதுகாப்பு பணியில், நம் ராணுவ வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.

குளிர் மற்றும் பனியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு, பிரத்யேக ஆடைகள் உள்ளிட்ட தேவையான பொருட்களை, ராணுவம் வழங்கி வருகிறது.

இந்த பொருட்கள் அனைத்தும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து, இறக்குமதி செய்யப்படுகின்றன. இதற்காக, ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய்க்கு மேல், ராணுவம் செலவு செய்கிறது. இந்நிலையில், சியாச்சினில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கான உடைமைகளை, இந்தியாவிலேயே தயாரிக்க, ராணுவம் முடிவு செய்துள்ளது.

இது பற்றி ராணுவ வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், ராணுவத்துக்கு தேவையான பொருட்களை, இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. சியாச்சின் வீரர்களுக்கு தேவையான உடைகள், படுக்கைகள் உட்பட முக்கியமான பொருட்களை, இந்தியாவிலேயே

Advertisement

தயாரிக்க, 10 ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவம் திட்டமிட்டு வருகிறது.

இப்போது, தனியார் துறைகள் மூலம், இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, விரைவில் பணிகள் துவங்க உள்ளன. இதனால், ராணுவத்துக்கு ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமாகும். டோக்லாம் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கும், தேவையான உடைமைகள், பொருட்கள் வழங்கப்படும். இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
13-ஆக-201820:18:05 IST Report Abuse

Sathish 800 கோடி என்ன அதற்க்கு மேல் ஆனாலும் செலவு செய்து வீரர்களுக்கு தரமான உடைகளை வாங்கித் தரவேண்டும் அரசு. இந்தியாவில் தயாரித்தால் அதில் ஊழல் செய்து அந்த தரமில்லாத துணியை அணிந்து நம் அணியும்போது உடல் உறைந்து உயிருக்கே ஆபத்தாகும். கோடி கோடியா கொள்ளையடிக்கிறார்கள் அதில் வராத நஷ்டம் இந்த மகான்களுக்காக வாங்கப்படும் அந்த தரமான உடைகளினால் அரசுக்கு நஷ்டம் வருகிறதா?

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஆக-201817:07:44 IST Report Abuse

இந்தியன் kumarதரமான பொருளை இந்தியாவிலும் தயாரிக்க முடியும்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
13-ஆக-201815:51:07 IST Report Abuse

ganapati sbமனோகர் பரிகார ராணுவத்திற்கான பல விஷயங்களை நுணுக்கமாக பார்த்து இந்தியாவில் தயாரிக்க முயற்சிகளை மேற்கொண்டார் என அப்போது சமூக வலைதள செய்தி ஒன்று படித்தேன் உதாரணத்திற்கு தரமான காலனி ஒன்று அயல்நாட்டிலிருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்ய பட்டு கொண்டிருந்ததாம் அதை பற்றி விசாரித்தபோது அது இந்தியாவில் குறைந்த விலையில் தயாராகி வெளிநாட்டுக்கு சென்று பின் இந்தியாவிற்கே அதிக விலையில் அதே திரும்பி வருவதை கண்டறிந்து அதை நேரடியாக இந்தியாவிலிருந்தே பெற்று செலவை பல மடங்கு குறைத்தாராம் அனால் தயாரிப்பாளர் அயல் நாடு நிறுவனம் உடனடியாக பணத்தை தரும் ராணுவம் படிப்படியாக தருகிறது என குறை கூற அந்த பிரச்சனையையும் சரி செய்தாராம் பாரிக்கர் அதுபோல இந்த உடுப்புகளும் தளவாடங்களும் இந்தியாவில் தயாராகும் பொது குறைந்த விலையில் நிறைந்த தரத்தோடு உற்பத்தி செய்யலாம் திறமையான நிர்மலா அதை செவ்வனே செய்து முடிப்பார்

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X