பொது செய்தி

தமிழ்நாடு

'சமூக வலைதளங்களில் ஆதாரை பதிய வேண்டாம்'

Added : ஆக 12, 2018
Advertisement

புதுடில்லி : 'பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், ஆதார் எண்ணை பதிவிட வேண்டாம்' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அட்டை வழங்கும் ஆணையம், பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
'டிராய்' எனப்படும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர், சர்மா, தன் ஆதார் எண்ணை, சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதை வைத்து, சிலர், அவரது வங்கி கணக்கு, முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், யு.ஐ.டி.ஏ.ஐ.,யின் தலைமை நிர்வாகி, பூஷண் பாண்டே கூறியதாவது:ஆதார் எண்ணை, மக்கள் சுதந்திரமாக, எந்தவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம். ஆதார் எண்ணை, எங்கு தெரிவிக்கலாம், எங்கு தெரிவிக்க கூடாது என்பது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், ஆதார் எண்ணை பதிவிடக் கூடாது. எனினும், ஆதார் எண்ணை, அடையாளம் தொடர்பான எந்த விஷயத்துக்கும் தைரியமாக பயன்படுத்தலாம். ஆதார் எண்ணை மட்டும் வைத்து, ஒருவர் பற்றிய எந்த விபரங்களையும், யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X