நாளை செயற்குழு கூட்டம்; தி.மு.க.,வில், 'திக்... திக்...' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நாளை செயற்குழு கூட்டம்
தி.மு.க.,வில், 'திக்... திக்...'

தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின், கட்சியின் செயற்குழு கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நாளை நடக்கிறது. இதன் பின், என்ன நடக்குமோ என, முக்கிய நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

D.M.K,DMK,தி.மு.க,திராவிட முன்னேற்றக் கழகம்,செயற்குழு கூட்டம்


தி.மு.க., தலைவர் கருணாநிதி, வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால், ஆக., 7ல் காலமானார். அவரது உடல், மெரினாவில் உள்ள அண்ணாதுரை நினைவிடத்தில்,

நல்லடக்கம் செய்யப்பட்டது. நினைவிடத்திற்கு, தினமும் ஏராளமான தொண்டர்கள், பொதுமக்கள் வந்து, அஞ்சலி செலுத்தி செல்கின்றனர்.

இந்நிலையில், தி.மு.க., செயற்குழு கூட்டம், செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அறிவாலயத்தில், நாளை நடக்கிறது. இந்த கூட்டத்தில், கருணாநிதியின் மறைவிற்கு, மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. முக்கிய நிர்வாகிகள், கருணாநிதிக்கு புகழ் அஞ்சலி செலுத்த உள்ளனர். அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

செயற்குழு கூட்டத்திற்கு பின், பொதுக்குழுவை கூட்டுதல், தலைவராக ஸ்டாலினை தேர்வு செய்தல் மற்றும் கட்சி நிர்வாகிகளை மாற்றி

Advertisement

அமைத்தல் உட்பட, பல விஷயங்கள் குறித்து, அடுத்தடுத்து ஆலோசிக்கப்படலாம் என, கூறப்படுகிறது. இதனால், செயற்குழுவிற்கு பின், எந்த மாதிரியான மாற்றங்கள் வருமோ என, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (95)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
14-ஆக-201814:25:22 IST Report Abuse

balஇனி கட்டுமரம் பேரை சொல்லி தில்லு முல்லு பண்ண முடியாது...சொந்த புத்தியும் கிடையாது...கூட ஒரு அல்லக்கை துரை இருந்து கொண்டு குழப்பும்....

Rate this:

ஸ்ரீனிவாசன்,COIMBATOREஸ்டாலின் எப்போதோ தலைவர் ஆகிவிட்டார். இந்த நிலையில் JUST a FORMALITY to rationalize the Process..!! 😎

Rate this:

மக்கள்தீர்ப்புகட்டுமரம் ஆரம்ப காலங்களில் (1972 ) மக்களின் அடிப்படை தேவைக்கு சேமித்து பின் ரேஷனில் வினியொக்கிக்க பட இருந்த அரிசி, சர்க்கரை போன்ற வற்றில் ஊழல் செய்து கொள்ளையடித்தது. பின் சிறிது சிறிதாக (வாழ்கையில் அல்ல) முன்னேறி ஊழல் துறைகளை மாற்றி பொது பணி துறையில் சாலை அமைத்தல், அணை கட்டுதல், பாலம் போடுதல் என்று தொடங்கி மணற் கொள்ளை, கிரானைட் கொள்ளை, 2 G என்று கோடிகளை லட்சக்கணக்கில் செய்து ஊழலhன் சிகரத்தையே தொட்டது. இதையெல்லாம் பிறரை அடித்து வாங்கப்பட்ட வீடு, நிலம் , கலைஞர் TV, sun TV, எர்லைன்ஸ் போன்ற பிஸ்னஸ்களில் தன் குடும்பத்தார்கள் பெயரில் முதலீடு செய்தாகிவிட்டது. 100 தலைமுறைக்கு சொத்து விட்டு மறைந்தது தியாக செம்மல் கட்டுமரம். மீண்டும் தன் குடும்பத்தார் அரசியல் செய்து(அதாவது ஊரான் காசை decentடாக பிச்சை எடுத்து) பசியாற்ற வேண்டும் என்ற நிலையில் வைத்து விட்டு கட்டுமரம் போகவில்லை. பிறகு அரசியலில் என்ன வேலை? Tata,Birla, Ambani போன்று பிஸ்னஸை கவனித்துக் கொன்டு போக வேண்டியதுதானே. திக், திக் , திக் என்று திக்கு தெரியாமல் திண்டாட வேண்டாம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. ஆகவே சுடலை & Co திருட்டு முன்னேற்ற கழகத்தை நிரந்திரமாக கலைத்துவிட்டு போய் அவரவர் பிஸ்னஸை கவனிக்குமாறு தமிழ் மக்கள் தீர்ப்பு வழங்கிறார்கள்.

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஆக-201821:56:26 IST Report Abuse

Panneerselvam Chinnasamyஇவ்வளவு சொல்லுகிறீர்கள் பின் ஏன் அவர் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி தரவில்லை? அம்மையார் ஜெயலலிதா கூட பூதக்கண்ணாடி போட்டு தேடியும் ஒரு தவறும் கிடைக்கவில்லையே? பொய் வழக்கு போட்டு மூக்குடைபட்டார்... அவதூறு பேசும் வாய்களுக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்... 13 முறை MLA , ஐந்து முறை முதல்வராக இருந்த தவர் கலைஞர்... அவர் 95 வருடத்தில் ஆட்சியில் இருந்தது என்னவோ வெறும் 19ஆண்டுகள்தான்... மற்றநாட்களில் அவர் சும்மா இருக்கவில்லை... திரைப்படம் .பத்திரிகை , புத்தக வெளியீடு என்று சுறுப்பாக இயங்கிக்கொண்டுதான் இருந்தார்... ஆடம்பர வாழ்வு வாழாமல் சிக்கனமாக வாழ்ந்தார்... படிப்படியாக முன்னேறி SUNTV ஆரம்பித்தபின்தான் அவர்கள் பொருளாதாரத்தில் பெரும் முன்னேற்றம் கண்டார்கள் ... கடந்தவருடம் மட்டும் 975 கோடி லாபம் ஈட்டி உள்ளது SUNTV குழுமம் . அவர்கள் முதன்முதலில் ஆரம்பிக்காதிருந்திருந்தால் யாரோ ஒரு வடநாட்டு சேட்டு ஆரம்பித்து இதைவிட அதிகம் லாபம் அடித்து போய் இருப்பான்... உழைத்து வாழ்வில் முன்னேறலாம்... ஊழல் செய்துதான் பணமீட்டக்கூடாது... எனவே அவர்களை நிந்திப்பதைவிட்டுவிட்டு யார் வந்தால் தமிழகத்திற்கு நல்லது , தமிழக மாநில உரிமை காத்து, ஊழல் செய்யாமல் நல்லாட்சி வழங்க முடியும் என்பதை உணர்ந்து, "KNOWN DEVIL IS BETTER THAN UNKNOWN ANGEL " என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள், அது போல "TIME TESTED" திமுக வையே நம்பலாம்...புதிதாகவோ அல்லது கண்டைனர் களவாணிகளையோ நம்புவதற்கு பதிலாக........

Rate this:
மேலும் 91 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X