பொது செய்தி

தமிழ்நாடு

12 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச நீர் திறப்பு : காவிரி ஆற்றில் மீண்டும் பெருக்கெடுத்த கடும் வெள்ளம்

Added : ஆக 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
12 ஆண்டுகளுக்கு பின் அதிகபட்ச நீர் திறப்பு   : காவிரி ஆற்றில் மீண்டும் பெருக்கெடுத்த கடும் வெள்ளம்

மேட்டூர் அணையில், 12 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் இரவு, அதிகபட்ச நீர் திறக்கப்பட்டது. காவிரியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம், மேட்டூர் - இடைப்பாடி சாலையில் புகுந்தது.கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட உபரி நீர் வரத்தால், நடப்பாண்டில், ஜூலை, 23ல் முதல் முறையாகவும், ஆக., 11ல், இரண்டாம் முறையாகவும், மேட்டூர் அணை நிரம்பியது. இரண்டு நாட்களாக, கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில், வினாடிக்கு, 1.43 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து, நேற்று முன்தினம், வினாடிக்கு, 1.25 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இரவு, 11:30 மணிக்கு நீர் திறப்பு, 1.36 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கடந்த, 2005, அக்., 24ல், மேட்டூர் அணையில் அதிகபட்சமாக, 2.31 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பின், நேற்று முன்தினம் இரவு, அதிகபட்சமாக, 1.36 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டது.
போக்குவரத்து துண்டிப்பு : காவிரியில் பெருக்கெடுத்த வெள்ளம், அனல்மின் நிலையம் அருகே, மேட்டூர் - இடைப்பாடி நெடுஞ்சாலையில் புகுந்ததால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நேற்று காலை, நீர் திறப்பு, 1.25 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்டதால், நெடுஞ்சாலையில் தேங்கிய தண்ணீர் வடிந்து, மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
படகு ரத்து : பண்ணவாடி நீர் பரப்பு பகுதியில், காற்று பலமாக வீசியதால், நீரில் அலைகள் பல அடி உயரம் வரை எழும்பின. இதனால், பண்ணவாடி - நாகமறை விசைப்படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. விடுமுறை நாளான நேற்று, மேட்டூர் அணையை பார்வையிட, ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் குவிந்தனர். இதனால், பவானி - தொப்பூர் நெடுஞ்சாலையில், தங்கமாபுரிபட்டணத்தில் காலை முதல் இரவு வரை, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, டெல்டா விவசாயிகள் பலர், பஸ் மற்றும் வேன்களில், மேட்டூர் வந்து, அணை, 16 கண் மதகு பகுதியை ஆர்வத்துடன் பார்வையிட்டனர். நேற்று மாலை, மேட்டூர் அணை நீர்மட்டம், 120.10 அடி, நீர் இருப்பு, 93.63, டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 1.20 லட்சம் கன அடி நீர் வந்தது. அணை மின் நிலையம், 16 கண் மதகு வழியாக, வினாடிக்கு, 1.25 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. கர்நாடகா அணைகளின் உபரி நீர் திறப்பு குறைந்ததால், வரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்வரத்து சரியும்.
ஒகேனக்கல் : தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 1.40 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு, 1.22 லட்சம் கன அடியாக குறைந்தது. இது, மாலை, 5:00 மணிக்கு, 1.20 லட்சம் கன அடியாக குறைந்தது.ஒகேனக்கல் காவிரியாற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம், அருவிகள் அனைத்தையும் மூழ்கடித்து, செல்கிறது. தொடர்ந்து நேற்று, 35வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது.
மாயனுார் : கரூர் மாவட்டம், மாயனுார் கதவணை, 16.7 அடி உயரம், 1.5 கி.மீ., நீளம் கொண்டது. 1.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட அணையில், அதிகபட்சம், 1 டி.எம்.சி., தண்ணீர் தேக்க முடியும். கதவணையில் இருந்து, 70 மதகுகள் வழியாக, 1.04 லட்சம் கன அடி நீர், ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், கரையோர பகுதி வயல்களில் தண்ணீர் புகுந்து உள்ளது. பெரும்பாலான வயல்களில், சோளம் அறுவடை முடிந்து, உழவுப் பணி துவங்கவுள்ள நிலையில், வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உழவுப் பணி எளிதாக இருக்கும் என, விவசாயிகள் தெரிவித்தனர். ஆனால், வாழைத் தோட்டங்களில் தேங்கி நிற்கும் தண்ணீர், இரண்டு நாட்களில் வடியா விட்டால், மரங்கள் அழுகி விடும் என, வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
முக்கொம்பு : நேற்று மாலை, 6:00 மணி நிலவரப்படி, திருச்சி, முக்கொம்பு அணைக்கு, 1.09 லட்சம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதில், 30 ஆயிரம் கன அடி, பாசனத்துக்கு காவிரி ஆற்றிலும், 70 ஆயிரம் கன அடி, கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டுள்ளது.முக்கொம்பு அணையில் இருந்து, கல்லணைக்கு திறக்கப்படும், 30 ஆயிரம் கன அடியில், காவிரியில், 9,040 கன அடியும், வெண்ணாற்றில், 9,022 கன அடியும், கல்லணை கால்வாயில், 2,656 கன அடியும் திறக்கப்படுகிறது.கல்லணையில் இருந்து, கொள்ளிடம் ஆற்றுக்கு, 8,070 கன அடி நீர் திறக்கப்படுவதால், மொத் தம், 78 ஆயிரம் கன அடி தண்ணீர், வீராணம் நோக்கி கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ளது.
18 கிராமங்களுக்கு எச்சரிக்கை : ஈரோடு மாவட்ட காவிரியில், இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது. இதனால், 18 வருவாய் கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோரங்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்படியும், மேடான பகுதிகளுக்கு செல்லுமாறும், கலெக்டர் பிரபாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.நேற்று காலை, கலெக்டர் பிரபாகர், ஈரோடு கருங்கல்பாளையம், பவானி பகுதியில், பல கிராமங்களில் ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது: தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பவானி கரையோர பகுதியில் வசித்த, 27 குடும்பங்கள் திருமண மண்டபத்திலும், கொடுமுடி பகுதியில் வசித்த, 60 குடும்பங்கள், எஸ்.எஸ்.டி., பள்ளியிலும் முகாம் அமைத்து தங்க ஏற்பாடு செய்துள்ளோம். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil R - chennai,இந்தியா
13-ஆக-201810:05:03 IST Report Abuse
Senthil R தயவு செய்து விவசாய பெருமக்களை ஏமாற்ற வேண்டாம்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவை சுற்றியுள்ள கிளை ஆறுகளிலும் ,கிளை வாய்க்கால்களிலும் இதுநாள் வரை தண்ணீர் வரவில்லை.எந்த ஒரு குளம் மற்றும் அதனை சுற்றி உள்ள குட்டைகள் நிரம்ப வில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X