சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அதிவேகமாக கார் ஓட்டிய நடிகர் விக்ரம் மகன் கைது

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (15)
Advertisement
அதிவேகமாக கார் ஓட்டிய நடிகர் விக்ரம் மகன் கைது

சென்னை: நள்ளிரவில் நண்பர்களுடன், 'பார்ட்டி'யில் பங்கேற்ற, நடிகர் விக்ரமின் மகன் துருவ், அதிகாலையில், போலீஸ் கமிஷனர் வீட்டருகே, அதி வேகத்தில் காரோட்டி விபத்து ஏற்படுத்தியதால், கைது செய்யப்பட்டார்.
சென்னை, நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரத்தில் வசிப்பவர் நடிகர் விக்ரம். இவர், 'சாமி, சேது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் துருவ், 22. 'அர்ஜூன் ரெட்டி' என்ற தெலுங்கு படத்தின், தமிழ் ரீமேக்காக, பாலா இயக்கும், 'வர்மா' என்ற, படத்தில் நடித்து வருகிறார்.நேற்று முன்தினம் நள்ளிரவு, மந்தைவெளி அருகே நடந்த பார்ட்டியில், நண்பர்களுடன் பங்கேற்ற நடிகர் துருவ், ஆட்டம், பாட்டம் என, கும்மாளமிட்டுள்ளார். மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. பார்ட்டி முடிந்து, நண்பர்கள் இருவருடன், ஆழ்வார்பேட்டை, டி.டி.கே.சாலை வழியாக, 'மாருதி பாலினோ' காரில் வீடு திரும்பியுள்ளார்; காரை அவரே ஓட்டியுள்ளார். அதிகாலை, 4:00 மணிக்கு, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை அருகே, மின்னல் வேகத்தில் கார் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நின்ற மூன்று ஆட்டோக்கள் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில், ஆட்டோ ஒன்றில் துாங்கிய, ராயப்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் காமேஷ், 26, துாக்கி வீசப்பட்டார். ஆனால், விபத்து ஏற்படுத்திய துருவ், காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். உடன், சம்பவ இடத்தில் இருந்தவர்கள், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில், ஆழ்வார்பேட்டை முர்ரேஷ் கேட் சாலையில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வீடு அருகே தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில், துருவ்வின் கார் சிக்கிக் கொண்டது. உடன், துருவ் மற்றும் அவரது நண்பர்கள், காரை அங்கேயே விட்டு விட்டு தப்ப முயன்றனர். அதற்குள், பொது மக்களும், போலீசாரும், அவர்களை பிடித்தனர். இச்சம்பவம் குறித்து, அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், துருவ் மற்றும் அவரது நண்பர்கள் மீது, அதிவேகமாக காரை ஓட்டியது, விபத்து ஏற்படுத்தி காயமடைய செய்தது என, இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர். பின், துருவ் உள்ளிட்ட மூவரையும், அவர்களின் சொந்த ஜாமினில் விடுவித்தனர்; கார் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில், சினிமா பிரபலங்கள், மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்துவது, தொடர் கதையாக உள்ளது. சமீபத்தில், இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், நடிகர் ஜெய், நடிகர் பிரேம்ஜி ஆகியோர், மது போதையில் கார் ஓட்டிய வழக்கில் சிக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
13-ஆக-201818:48:08 IST Report Abuse
Nakkal Nadhamuni இதுங்க நாளைக்கு கதாநாயகனாகி அதுங்க பின்னாடி ஒரு அறிவுகெட்ட படிப்பறிவில்லாத திராவிட கட்சிகளுக்கு ஓட்டுப்போடும் ஒரு கூட்டம் வரும்....
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
13-ஆக-201817:09:25 IST Report Abuse
kalyanasundaram THIS CASE WILL VERY VERY SHORTLY HUSHED UP. POLICE WILL SHIFT THE CASE CITING THE REASON AS AUTO DRIVER WAS SLEEPING IN HIS AUTO RICKSHAW AND THE CAR DRIVER INNOCENT . STATEMENT BY VIKRAM'S LAWYER MAY BE THAT THE CASE FOISTED ON HIS SON DUE TO HIS ADVANCEMENT IN FILM INDUSTRIES. OFCOURSE HUGH DRAIN IN CASH CAN BE EXPECTED.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201815:15:49 IST Report Abuse
சௌக்கிதார் வேலங்குடியான் இந்த நாயிகளுக்கெல்லாம் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய அரசாங்க அதிகாரிகளுக்கு துணிச்சல் இருக்கா??? ஏழைக்கு ஒரு சட்டம்... பணக்காரனுக்கு ஒரு சட்டம்... காசு குடுத்தா கேச மாத்தி எழுதிடுவானுங்க போல... அதுசரி சேதமான ஆட்டோ மற்றும் காயம் ஏற்பட்டவர்களுக்கு ஏதாவது பண உதவி செஞ்சானுங்களா??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X