பதிவு செய்த நாள் :
அடுத்த தேர்தலில் மாபெரும் வெற்றி
பிரதமர் மோடி உறுதி

புதுடில்லி: ''அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான கூட்டணி, மாபெரும் வெற்றி பெறும்,'' என, பிரதமர் மோடி தெரிவித்தார்.

Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி,அடுத்த தேர்தல்,மாபெரும் வெற்றி


ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நாட்டில், அனைத்து மதங்களையும், நம்பிக்கைகளையும் சார்ந்த மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த,

அரசு கடமைப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள், 'மெகா' கூட்டணி அமைப்பது, இது முதன்முறையல்ல. அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக, அமையவிருக்கும் இக்கூட்டணி, ஒவ்வொரு முறையும், தோல்வியை தழுவியுள்ளது.

'வளர்ச்சி; வேகமான வளர்ச்சி, அனைத்திலும் வளர்ச்சி' என்பதே, எங்கள் அடிப்படை கொள்கை. நான்கு ஆண்டுகளாக, கடுமையாக உழைத்துள்ளோம். அடுத்த லோக்சபா தேர்தலில், எங்கள் சாதனைகளை, மக்களிடம் எடுத்துக் கூறுவோம். மக்கள் எங்களுடன் உள்ளனர்; எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

கடந்த லோக்சபா தேர்தலை விட, மாபெரும் வெற்றியை, அடுத்த லோக்சபா தேர்தலில்,

Advertisement

தே.ஜ., கூட்டணி பெறும்; அனைத்து சாதனைகளையும் தகர்க்கும் பொருளாதார குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள புதிய சட்டம், மக்கள் பணத்தை கொள்ளை அடிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உதவும்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து, எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரங்களை பரப்பி வருகின்றன. கும்பலாக சேர்ந்து, அப்பாவிகளை தாக்கி கொலை செய்யும் வன்முறை சம்பவங்கள் வருந்தத் தக்கவை. இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்தாலும், அதை ஏற்க முடியாது; கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதுபற்றி நானும், எங்கள் கட்சியினரும், தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறோம்.

சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்வதில், எங்கள் அரசு எப்போதுமே கவனத்துடன் செயல்படுகிறது. ஆனால், எதிர்கட்சிகள், இந்த விவகாரத்தை அரசியாலாக்கப் பார்க்கின்றன. இதற்கு, அவர்களின் விபரீத சிந்தனையே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஆக-201816:58:46 IST Report Abuse

Malick Rajaநாடு மேம்பட மாற்றம் ஒன்றே சரியான வழி ... மாற்றத்தை மக்கள் தேர்ந்தெடுக்கவேணும் .. அப்போதுதான் 2014.முதல் 2019.வரை நடந்த ஆட்சியின் அவலங்கள் அதனால் பயனடைந்தவர்கள் என பலரையும் பிடித்து பொருளாதாரத்தை மேலோங்க செய்யமுடியும்

Rate this:
Shroog - Mumbai ,இந்தியா
13-ஆக-201823:11:54 IST Report Abuse

ShroogIt's just a dream by Narra Modi.

Rate this:
Mohan Nadar - Mumbai,இந்தியா
13-ஆக-201821:32:35 IST Report Abuse

Mohan Nadarஅமைச்சர்களும் பக்தர்களும் கூறும் முகஸ்துதியில் மயங்கியிருக்கும் உங்களுக்கு மரண அடி நிச்சயம்

Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
14-ஆக-201805:27:21 IST Report Abuse

uthappaஇந்தியா என்பது வெறும் தமிழ் நாடு மட்டும் இல்லை. ...

Rate this:
மேலும் 89 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X