பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் நிலையங்களில்16ம் தேதி வரை மூன்றடுக்கு பாதுகாப்பு

Added : ஆக 13, 2018
Advertisement

சென்னை:'சுதந்திர தினத்தையொட்டி, இன்று முதல், மூன்று நாட்களுக்கு, ரயில் நிலையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்படும்' என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.சுதந்திர தினவிழா, நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பயங்கரவாதிகளால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடாதபடி, நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட, தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும், இன்று மாலை, 4:00 மணியில் இருந்து, 16ம் தேதி காலை, 8:00 மணிவரை பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் நிலையங்களில், மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்ட்ரலில், ரயில்வே போலீசார், 100 பேர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர், 150 பேரும்; எழும்பூரில், ரயில்வே போலீசார், 50 பேர், ரயில்வே பாதுகாப்பு படையினர், 80 பேரும் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தப்படுகின்றனர். பயணியர் மற்றும் உடமைகள், 'மெட்டல் டிடெக்டர்' மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்படும். நிலையத்திற்கு வரும் வாகனங்கள், வளாக நுழைவு வாயிலில், சோதனை செய்யப்பட்ட பின், உள்ளே அனுமதிக்கப்படும். நிலையங்களிலும், ரயில்களிலும், சந்தேகப்படும்படியாக யாரும் தென்பட்டாலோ, பொருட்கள் கிடந்தாலோ, உடனடியாக ரயில்வே போலீசாரிடம் தகவல் தெரிவிக்கவும், பயணியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும், போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X