தீபா கட்சி பதவிக்கு ரூ.5.40 லட்சம்: தம்பதி மீது வழக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீபா கட்சி பதவிக்கு ரூ.5.40 லட்சம்: தம்பதி மீது வழக்கு

Added : ஆக 13, 2018

திருச்சி: தீபா கட்சியில், மகளிரணி மாவட்டச் செயலர் பதவி வாங்கித் தருவதாக, 5.40 லட்சம் ரூபாய் வாங்கி, மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி ராதா. அரசியலில் ஆர்வம் கொண்ட இவர், ஜெயலலிதா மறைந்ததால், புதிய கட்சி துவங்கிய, அவரது அண்ணன் மகள் தீபா கட்சியில், பதவிக்கு வர விரும்பினார். இதையறிந்த, தீபா பேரவை மாவட்ட பிரதிநிதி பொன்னுசாமியும், அவரது மனைவி லட்சுமியும், திருச்சி மாநகர தீபா பேரவை மகளிரணி செயலர் பதவி வாங்கித் தருவதாக, ராதாவை அணுகியுள்ளனர். இதற்காக, அவரிடம், ஓராண்டுக்கு முன், 5.40 லட்சம் ரூபாய் பெற்று உள்ளனர். ஆனால், கூறியபடி, கட்சியில் பதவி பெற்றுத் தரவில்லை. கொடுத்த பணத்தை, ராதா கேட்ட போது, ஏமாற்றி வந்துள்ளனர். இதுகுறித்து, திருச்சி, ஜே.எம்., 1 நீதிமன்றத்தில், ராதா வழக்கு தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம், தம்பதி மீது, வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதன்படி, திருச்சி, கோட்டை குற்றப்பிரிவு போலீசார், தீபா பேரவை மாவட்ட பிரதிநிதி பொன்னுசாமி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்ய, தேடி வருகின்றனர். பொன்னுசாமி, திருச்சியில், டிராவல்ஸ் நிறுவனம், இரவு நேர டிபன் கடை நடத்தி வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X