கேரளா வெள்ள சேதம் ரூ.8316 கோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளா வெள்ள சேதம் ரூ.8316 கோடி

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கேரளா கனமழை,கேரளா வெள்ளம், பினராயி விஜயன்,கனமழை சேதம், கனமழை வெள்ளம், இடுக்கி, தேவிகுளம், உடுப்பன்சோலை, பள்ளிகள் விடுமுறை, கல்லூரிகள் விடுமுறை , முதல்வர் பினராயி விஜயன், கேரளா, 
Kerala heavy rain, Kerala floods, Pinarayi Vijayan, heavy rainfall, heavy rainfall floods, Idukki floods, Idukki, Devikulam, Udanjola, schools holidays, colleges holidays, Chief Minister Pinarayi Vijayan, Kerala,

திருவனந்தபுரம் : கேரளாவில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இடுக்கி அணை மற்றும் அதன் நீபிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இடுக்கி மாவட்டத்தில் சராசரியாக 20.86 மி.மீ., மழைப்பதிவாகி உள்ளது.
கனமழை வெள்ளத்திற்கு இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர். 6 பேர் மாயமாகி உள்ளனர். வயநாடு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று (ஆக.,13) விடுமுறை விடப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி, தேவிகுளம், உடுப்பன்சோலை தாலுக்காக்களுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவின் வெள்ள சேதங்கள் குறித்த மதிப்பீட்டை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார். அதில், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் ரூ.8316 கோடி என முதல்கட்டமாக கணக்கிடப்பட்டுள்ளது. சுமார் 20,000 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன. 10,000 கி.மீ., தூரத்திற்கு சாலைகள் பழுதடைந்துள்ளன. இதனால் ஏற்கனவே உடனடி நிவாரத்திற்கு வழங்கி உள்ள ரூ.820 கோடியுடன் கூடுதலாக ரூ.400 கோடியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுள்ளோம்.மத்திய குழு மீண்டும் வந்தும் வெள்ள சேதங்களை கணக்கிடும் படியும் கேட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
14-ஆக-201810:52:26 IST Report Abuse
bal பினராயி பிரியாணி சாப்பிடத்தான் லாயக்கு..என்னிக்கு கமலை சந்தித்தாரோ அன்றே மூளை மழுங்கிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
13-ஆக-201818:07:51 IST Report Abuse
PrasannaKrishnan You speak communism.
Rate this:
Share this comment
Cancel
tamil - coonoor,இந்தியா
13-ஆக-201814:37:25 IST Report Abuse
tamil ஏராளமான சாலைகள், மின்கம்பங்கள், சேதம், அடைந்துள்ளன, ஏராளமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, ஏராளமான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள், இதைத்தவிர வண்டி வாகனங்கள் சேதாரம் தனி, மழை நீர் வடிந்த பிறகு சுத்தம் செய்யும் வேலையே பல நாள் நீடிக்கும் நிலை, ஆனால் மத்தியில் எந்த அரசு இருந்தாலும் கிள்ளி தான் கொடுப்பார்கள், இந்தியாவில் மாநிலங்கள் எல்லாம் அந்நிய தேசமாக பார்க்கப்படுகிறது
Rate this:
Share this comment
MANI DELHI - Delhi,இந்தியா
13-ஆக-201815:41:55 IST Report Abuse
MANI DELHIஇது உங்களின் மத்திய அரசு எதிர்ப்பு கருத்தாகத்தான் பார்க்க முடியும். கேரளாவை பொறுத்தவரை வளர்ச்சி முன்னேற்றம் இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் உருவாகியிருக்கும் மாநிலம். தமிழ் நாடு லஞ்சம் கூத்தாடினாலும் சுயமாக பிரச்னைகளை எதிர்த்து போராடும் திறமை உள்ளவர்கள் மக்கள் மற்றும் மூளை சலவைகளுக்கு அப்பாற்பட்டு மண்ணிற்கும் மக்களுக்கும் பாதிப்பு வரும்போது யாரும் விட்டு கொடுப்பதில்லை. 100 % படிப்பு என்று பெருமை பேசுவதினால் வளர்ச்சி வந்து விடாது. என் அனுபவத்தை சொல்கிறேன். மெத்த படித்த மலையாளிகள் தங்கள் அறிவை வளர்ச்சிக்கு உபயோகப்படுத்தவில்லை. படித்த மலையாளிகள் ஊரை விட்டு போய்விட்டனர். சிறிய அளவில் படித்தவன் எந்த வேலைக்கும் துணிந்து வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். படிக்காதவர்கள் வேலைக்கும் போகாமல் அரசியல் பேசி பொழுதை கழிப்பார்கள் மேலும் பணம் உள்ளவரிடம் ஒட்டி அவனையும் கரைப்பார்கள். மொத்தத்தில் எல்லாநிலையிலும் வளர்ச்சி பூஜ்யமே...வீட்டிற்கு பாரம் நாட்டிற்கு கேடு என்ற நிலையை இன்றைய கேரள ஆட்சியாளர்கள் கொடுத்து விட்டார்கள். இவர்களால் கொச்சைப்படுத்தப்பட்ட சபரி மலை வாசன் தான் இவர்களை காப்பாற்ற வேண்டும். இங்கு சிலநண்பர்கள் மலையாளிகளை பற்றி கருத்து சொன்னாலும் ,இப்போது இவர்களை பற்றி பேசாமல் மனிதாபிமான அடிப்படையில் தான் பார்க்கவேண்டும் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X