முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

Updated : ஆக 13, 2018 | Added : ஆக 13, 2018 | கருத்துகள் (26)
Advertisement
சோம்நாத் சாட்டர்ஜி, முன்னாள் லோக்சபா சபாநாயகர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல், பிரதமர் மோடி இரங்கல், சோம்நாத் சாட்டர்ஜி மறைவு, காங்கிரஸ் தலைவர் ராகுல் இரங்கல், 
Somnath Chatterjee, former Lok Sabha Speaker, President Ramnath Govind Mourning, Prime Minister Narendra Modi Mourning, Somnath Chatterjee death, Congress leader Rahul Mourning,

புதுடில்லி : லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று (ஆக.,13) காலை கோல்கட்டாவில் காலமானார். அவருக்கு வயது, 89.

சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆக.,8 ம் தேதி அவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதால் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நேற்று உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் அதற்கு உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. இதனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
1968 ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவர், அக்கட்சியில் முக்கிய தலைவராக திகழ்ந்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின் போது 2004 ம் ஆண்டு லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்பட்ட அவர் தொடர்ந்து 10 ஆண்டுகள் சபாநாயகராக நீடித்தவர். 2008 ம் ஆண்டு காங்., உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆதரவை விலக்கி கொண்டது. இதனால் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது அரசுக்கு எதிராக ஓட்டளித்ததால் சோம்நாத், சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருந்தும் பதவி விலக மறுத்து தொடர்ந்து சபாநாயகராகவே நீடித்தவர் சோம்நாத்.
அதிக காலம் லோக்சபா சபாநாயகராக நீடித்தவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.


தலைவர்கள் இரங்கல் :
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் : முன்னாள் சபாநாயகரும், பழம்பெரும் லோக்சபா உறுப்பினருமான சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது மறைவு வங்காள பொது வாழ்விற்கும், இந்தியாவிற்கும் பேரிழப்பு. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் மோடி : முன்னாள் எம்.பி.,யும், சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி இந்திய அரசியலில் பலம் வாய்ந்தவர். நமது பார்லி ஜனநாயகத்தை பலப்படுத்தியவர். ஏழைகளுக்காக குரல் கொடுத்தவர். அவரது இழப்பு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காங்., தலைவர் ராகுல் : 10 முறை எம்.பி.,யாகவும், லோக்சபா சபாநாயகராகவும், இருந்த சோம்நாத் சேட்டர்ஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி பாகுபாட்டை கடந்து அனைத்து உறுப்பினர்களாலும் மதிக்கப்பட்டு, அனைவரையும் ஈர்த்தவர். அவரது குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஆக-201807:08:11 IST Report Abuse
Bhaskaran கம்ம்யூனிஸ்ட்கள் நண்டுகளைப் போன்றவர்கள், தங்களில் ஒருவர் பெரிய பதவிக்கு போனால் வயிறெரிந்து கீழே இழுத்து விடுவார்கள் ஜோதிபாசுவை பிரதமர்பதவிக்கு அனுமதியாதவர்கள், இவரை சபாநாயகராக்கி சிறப்பாக செயல் படுவதைக்கண்டு வயிறெரிந்து பின் சொத்தை காரணம் காட்டி அவரை ராஜினாமா செய்ய சொன்னவர்கள்
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
13-ஆக-201816:50:58 IST Report Abuse
narayanan iyer அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்
Rate this:
Share this comment
Cancel
சீனு. கூடுவாஞ்சேரி. வாஜ்பாயுடன் சேர்த்து இவரும் பாரத் ரத்னாவிற்கு தகுதியுடையவர். திமுக எப்படி மெரினாவிற்காக போராடினார்களோ அதேபோல் பாரத்ரத்னாவிற்கும் அழிசாட்டியம் செய்வார்கள். அடுத்த முறை கான்க்ராஸ் வெற்றி பெற்றால் நிச்சயம் கட்டுமரம் பாரத்ரத்னா ஆகிவிடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X