அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., அவசர செயற்குழுவில் என்ன நடக்கும்?

Added : ஆக 13, 2018 | கருத்துகள் (56)
Advertisement
திமுக செயற்குழு, ஸ்டாலின், ஆ ராசா, கனிமொழி, கருணாநிதி மறைவு, திமுக தலைவர் கருணாநிதி மறைவு, ஸ்டாலின் குடும்பம், 
DMK executive committee, Stalin, A Raja, Kanimozhi, Karunanidhi death, DMK leader Karunanidhi death, Stalin family,

சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின், வரும் 14ல், அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டப்பட்டிருக்கிறது.

அன்று, கட்சியில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.. கருணாநிதியின் மறைவுக்கு அஞ்சலி தீர்மானம் போடப்படும்; தமிழகம் முழுக்க அஞ்சலி கூட்டங்களை நடத்துமாறு கட்சியினர் பணிக்கப்படுவர் எனவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.


பொதுக்குழு மாற்றம்:ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி, வரும் 19ல் நடக்கவிருந்த பொதுக்குழு கூட்டம், நாள்-நட்சத்திர-யோக காலங்களின் அடிப்படையில், ஆக.23க்கு மாற்றப்பட்டு, அப்போது நடக்கும் பொதுக்குழுவிலேயே கட்சி கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வர, செயல் தலைவர் ஸ்டாலின் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளதாக, கட்சி வட்டாரங்கள் கூறின.


பொருளாளர் ஆ.ராசா?எதிர்பார்க்கப்படுவது போல, செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலினை தலைவராக்கும்போது, தற்போது ஸ்டாலின் வகித்து வரும் பொருளாளர் பொறுப்பை வேறொரு தலைவருக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அப்பதவியை, மகளிர் அணி செயலர் கனிமொழிக்கு வழங்க வேண்டும் என, சில குடும்ப உறுப்பினர்கள், ஸ்டாலினிடம் வலியுறுத்துகின்றனர்.

இந்த நெருக்கடியாலும், எதிர்கால திட்டங்களாலும், கனிமொழியை அந்தப் பொறுப்பில் நியமிப்பதை விட, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவுக்கு வழங்கலாம் என ஸ்டாலின் விரும்புகிறாராம். ராசா, தலித் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், கட்சிக்கு தலித்கள் மத்தியில் கூடுதல் அபிப்பிராயம் ஏற்படும் என ஸ்டாலின் நினைப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறின.

Advertisement
வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஆக-201807:01:19 IST Report Abuse
Bhaskaran திராவிட இயக்க இலக்கியங்கள் நூல்கள் ஓரம்கட்டப்பட்டு ஒருசிலரின் நூல்கள் மட்டுமே பிரபலப்படுத்தப்பட்டுள்ளன முதலில் அவற்றை அனைவர்க்கும் இலவசமாக படிக்க upload செய்யவும்
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
13-ஆக-201820:50:36 IST Report Abuse
Panneerselvam Chinnasamy மோடி அய்யா கட்சி மற்றும் அரசு பொறுப்புக்களை எப்படி தந்தார்...? விசுவாசம் மற்றும் நம்பிக்கைக்கு முன்னுரிமை தந்தா இல்லை தகுதிக்கு முன்னுரிமை தந்தா? அதுதான் இங்கும் நடக்கும்... சரி கிட்னி ப்ராப்லம் உள்ள ஜெட்லீக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நம்ம சு .சாமிக்கு நிதி அமைச்சர் பதவி தரலாமே...? ஏன் தரவில்லை? ஜனாதிபதி பதவியை பெரியவர் அத்வானிக்கு தந்திருக்கலாம்? ஏன் தரவில்லை? ... கட்சியிலும் அவர் மாநிலத்தை சேர்ந்த அமித் ஷா வை தலைவராக வைத்திருப்பது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
shanmugam - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஆக-201818:54:31 IST Report Abuse
shanmugam ஒன்னும் நடக்காது..ஸ்டாலின் கட்சி தலைவர் ஆகுவாறு...இருந்தாலும் கருணாநிதி பொசிடிஒன் remain unchanged as it is,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X