200 கி.மீ., வேகம்: இளைஞர் உயிர்போனது சோகம் | Dinamalar

200 கி.மீ., வேகம்: இளைஞர் உயிர்போனது சோகம்

Updated : ஆக 13, 2018 | Added : ஆக 13, 2018 | கருத்துகள் (57)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பைக் ரேஸ், வங்கி அதிகாரி, பைக் விபத்து, சன்சித் ஓபராய், கேஎம்பி எக்ஸ்பிரஸ்வே சாலை, சுசுகி ஹயாபுசா சூப்பர்பைக், குர்கான், சூப்பர்பைக், 
Bike race, bank officer, bike accident, Sunshith Oberoi, KMP Expressway Road, Suzuki Hayapuza Superbike, Gurgaon,Superbike,

குர்கான் : மேற்கு டில்லியை சேர்ந்த சன்சித் ஓபராய் (25), குர்கானில் உள்ள பன்னாட்டு வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
இவர் நண்பர்களுடன், கேஎம்பி எக்ஸ்பிரஸ்வே சாலையில், ஆக.12 ம் தேதி காலை பைக் ரேஸ் சென்றுள்ளார். சன்சித், சுசுகி ஹயாபுசா சூப்பர்பைக்பை ஓட்டிச் சென்றுள்ளார். மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் செல்லும் திறன் கொண்ட சுசுகி ஹயாபுசா பைக், சிறு ரக காரை விட வேகமாக செல்லக் கூடியது.
சன்சித், மணிக்கு 200 கி.மீ., வேகத்தில் சீறிப் பாய்ந்து சென்றுள்ளார். முன்னால் சென்ற லாரியின் பின்புறத்தில் கட்டுப்பாடு இழந்து, மோதிய சன்சித், மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்டு, படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சன்சித், வழியிலேயே இறந்தார்.


வேக ஆர்வம் உயிரை எடுத்தது:

வங்கி அதிகாரியான சன்சித், அதிவேகமாக பைக் ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக இவர் பேஸ்புக்கில் பதிவிட்ட போட்டோக்களில், தனது சூப்பர்பைக்கின் முன்புற சக்கரம், அந்தரத்தில் இருக்கும்படியான சாகச போட்டோக்களே அதிகம் உள்ளன.
அதிக வேக ஆர்வம், ஒரு இளைஞரின் உயிரை அநியாயமாக பறித்து விட்டது.

Advertisement
வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
13-ஆக-201820:47:55 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இந்த மாதிரியான அதி வேகமாக பைக் ஓட்டுபவர்கள் தாம் சாவது மட்டுமின்றி அப்பாவி பொதுமக்களையும் சாகடிக்கிறார்கள். அதிக ஓசை கொண்ட ஒலிப்பான்களை பயன்படுத்துவது, மிக அருகே விர்என்று வேகமாக செல்வது, வளைந்து நெளிந்து பார்ப்பவர்களை அச்சப்படுத்தும் விதமாக வண்டி ஓட்டுவது இதை சென்னை போக்கு வரத்து போலீசார் தடுக்க முயலுவதில்லை/ முடிவதில்லை. அத்தகையோரின் பெற்றோர்க்கு ஒரு நாள் சிறை வாசம் கொடுத்தால் போதும் அல்லது இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் எல்லாம் சரியாகிவிடும். அப்போதாவது திருந்துவார்களா என்று பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
13-ஆக-201820:46:45 IST Report Abuse
JSS பெற்றவர்கள் மனநிலையை பற்றி இக்காலத்து இளைஞர்கள் கவலை படுவதில்லை. அவர்களுக்கு முக்கியம் அவர்களது enjoyment . ரேஸ் பைக்கை விட வாழ்வு முக்கியம். பெற்றோரது சந்தோசம் முக்கியம். எப்போது புரிய போகிறது
Rate this:
Share this comment
Cancel
Sathish - Coimbatore ,இந்தியா
13-ஆக-201820:04:41 IST Report Abuse
Sathish பைக்கிற்கு என்னவாயிற்று அதை சொல்லுங்கள். புத்திசொன்னால் இவனை போன்றவர்கள் கேட்கமாட்டார்கள் அதனால் இறந்தவனை பற்றி பேசுவது வீண்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X