அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்: ரஜினி

சென்னை:''கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் தந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, அரசு மேல்முறையீடுக்கு சென்றிருந்தால், நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன்,'' என, நடிகர் ரஜினி கூறினார்.

 நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்: ரஜினி


சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில், மறைந்த முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான கருணாநிதிக்கு, தமிழ் திரையுலகம் சார்பில், நேற்று நினைவேந்தல் நிகழ்ச்சிக்குஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கூட்டத்தில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினி, விஷால், விக்ரம் பிரபு, கார்த்தி, பாக்யராஜ், விஜயகுமார் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் துாவி, மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தினர்.தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசியதாவது:தி.நகரில், புதிதாக கட்டப்பட்டு வரும், நடிகர் சங்க கட்டடத்தில், கருணாநிதிபயன்படுத்திய பேனாவை வைக்க வேண்டும். அது, அவரின் புகழை, அடுத்த தலைமுறையினருக்குஎடுத்துச் செல்லும்.இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில், ''பராசக்தி படம் மட்டும் வராமல் இருந்திருந்தால், தமிழ் சினிமா, 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று இருக்கும்,'' என்றார்.ரஜினி பேசியதாவது:கருணாநிதி இல்லாத தமிழகத்தை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுகளில், எத்தனை சோதனைகள், சூழ்ச்சிகள்; அனைத்தையும் வென்று, தி.மு.க., தலைவராக இருந்தவர்.'என்னுடன் நட்பு கொள்; இல்லையென்றால், எதிரியாக்கி கொள்' என,தமிழக அரசியல் சதுரங்கம் செய்தவர்.பழையவராகவோ, புதியவராகவோ, யாராக இருந்தாலும், கருணாநிதி இல்லாமல், அரசியல் செய்ய முடியாது என்ற நிலையை உருவாக்கியவர்.

Advertisement


அ.தி.மு.க.,வின் ஆண்டு விழாவில், எம்.ஜி.ஆரின் படத்தோடு, கருணாநிதியின் படத்தையும் வைக்க வேண்டும். அ.தி.மு.க., உருவானதே, கருணாநிதியால் தான். எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரையும், 'சூப்பர் ஸ்டார்' ஆக்கியவர், கருணாநிதி தான்.கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு, ஒட்டுமொத்த இந்தியாவே வந்திருந்தபோது, தமிழக முதல்வரும் வர வேண்டாமா; நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா, ஜெயலலிதாவா; இல்லை, அவர்களை விட பெரும் தலைவரா?சென்னை, மெரினாவில், கருணாநிதிக்கு இடம் தர, கோர்ட் அனுமதித்தது. நல்ல வேளை, அரசு மேல்முறையீடு செய்யவில்லை. செய்திருந்தால், நானே இறங்கி போராடியிருப்பேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

வாசகர் கருத்து (146)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஆக-201819:59:04 IST Report Abuse

Pugazh V/ரஜினி ஊழலுக்கு எதிரா கட்சி ஆரம்பிக்கும் போது / எங்கே த.மைந்தன், உகாண்டாவிலா இல்லை பெங்களூரிலா? உங்கள் பீஜேபீ சத்ருகன் சின்ஹா கங்கனா ரணவத் ஹேமமாலினி , குறிப்பாக, ஸ்மிருதி இரானி என்கிற டி.வி. ஸீரியல் நடிகையை அமைச்சராகவே வெச்சு ஓடிட்டிருக்கு தெரியாதா? கொஞ்சம் ஆங்கில பேப்பர் களும் படிக்க வும். மிக்க நன்றி.

Rate this:
VENKATESH S.L. - NGL,இந்தியா
14-ஆக-201819:12:44 IST Report Abuse

VENKATESH S.L.கலைஞரை பாராட்றதா நினைச்சுகிட்டு m g r ஐ தப்பா பேசி இருக்கார். இது மிகவும் தப்பு.

Rate this:
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
14-ஆக-201818:55:57 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்ஏற்கனவே சுதந்திர தினம் தெரியாம ஒரு தலை சுத்திக்கிட்டு இருக்கு இரண்டாவதா ஒன்னு காவிரி பிரச்சினை பற்றி கர்நாடகா முதல்வரை சந்தித்து பேசுது இடையில நீ வேற

Rate this:
மேலும் 143 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X