கொடி நாள் பேரை சொல்லி வசூல் வேட்டை... கோபத்தில் போலீசார் விட்ட 'கோட்டை'

Added : ஆக 14, 2018 | |
Advertisement
சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், சுதந்திர தின விழா ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அவ்வழியே சென்ற சித்ராவும், மித்ராவும், சத்தம் கேட்டு உள்ளே சென்று, மரத்தின் நிழலில் அமர்ந்தனர். வருவாய்த்துறை, போலீசார், கல்லுாரி மாணவ, மாணவியர் என, மைதானமே பரபரப்பாக இருக்கிறது.அருகில் நிறுத்தப்பட்டிருந்த வருவாய்த்துறை ஜீப்பை பார்த்ததும், ''வருவாய்த்துறைன்னா என்னான்னு இப்பத்தான்
கொடி நாள் பேரை சொல்லி வசூல் வேட்டை... கோபத்தில் போலீசார் விட்ட 'கோட்டை'

சிக்கண்ணா கல்லுாரி மைதானத்தில், சுதந்திர தின விழா ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. அவ்வழியே சென்ற சித்ராவும், மித்ராவும், சத்தம் கேட்டு உள்ளே சென்று, மரத்தின் நிழலில் அமர்ந்தனர். வருவாய்த்துறை, போலீசார், கல்லுாரி மாணவ, மாணவியர் என, மைதானமே பரபரப்பாக இருக்கிறது.அருகில் நிறுத்தப்பட்டிருந்த வருவாய்த்துறை ஜீப்பை பார்த்ததும், ''வருவாய்த்துறைன்னா என்னான்னு இப்பத்தான் தெரிஞ்சிருக்கு!'' என்றாள் மித்ரா.''மித்து.. நீ என்ன புதுசா கண்டுபிடிச்சுட்ட?''''பழைய மேட்டர்தாங்க்கா. ஆனா, புது டெக்னிக்ல நடக்குது''''சும்மா... பொடி வைக்காம பேசுடி'''''கொடிநாள் வசூல்ங்கறது, முன்னாள் படைவீரர்களுக்கு உதவலாம்னு மக்கள் விரும்பி கொடுக்கற நிதி. இப்ப, இதுல, 'டார்கெட்' வச்சு வசூல் பண்றாங்க. இதனால, எல்லா கவர்மென்ட் ஆபீசிலயும், வசூல் கொடிகட்டி பறக்குது,''''குறிப்பா, சொல் லப்போனா, ரெவின்யூ ஆபீசில், வடக்கு, தெற்கு தாலுகாவில், புது டெக்னிக்கா வசூல் பண்றாங்க''''இதுலென்ன டெக்னிக். லஞ்ச பணத்துக்கு ரசீதா கொடுப்பாங்க?''''இல்லக்கா... ! எல்லா சர்டிபிகேட்டும் 'இ-சேவை' மையத்துக்கு போயிடுச்சு. அப்புறம் எப்படி வசூல் பண்ண முடியும். அதனாலதான், வி.ஏ.ஓ.,வில் ஆரம்பிச்சு தாசில்தார் வரைக்கும், 'சர்டிபிகேட்'டுக்கு 'ஓகே' பண்ணாம கிடப்பில் போடறாங்க. 'ஏனுங்க சர்டிபிகேட் வரலை'ன்னு கேட்டு வர்றப்ப, 'லபக்'னு பிடிச்சு, 100, 200ன்னு வாங்கிடறாங்களாம். ''ரெண்டு வாரமா, இப்படித்தான், ரெவின்யூ ஆபீசில், 'கொடி நாள்' வசூல் நடக்குதாம் அக்கா''''மித்து.. என்னதான் போட்டி போட்டு வசூல் பண்ணினாலும், ஆர்.டி.ஓ., ஆபீஸ்கிட்ட நெருங்கக்கூட முடியாதுடி. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இந்த கொடிநாள் வசூல், கரெக்டா போய்ச்சேருமா?'' ''அக்கா.. எல்லாம் அந்த 'பழநி' ஆண்டவருக்கே வெளிச்சம்'' என்றாள் மித்ரா.மைதானத்தில், நிலக்கடலை விற்றவரிடம், இரண்டு பொட்டலம் வாங்கிய மித்ரா, ஒன்றை சித்ராவிடம் கொடுத்து விட்டு, சாப்பிட ஆரம்பித்தாள். ''தாராபுரத்தில இருக்கிற மின் வாரிய அதிகாரி, தனியாக ஏஜென்ட் நியமிச்சு கல்லா கட்டறாராமே,'' என்றாள் மித்ரா.
''ஆமாண்டி. நானும் கேள்விப்பட்டேன். இப்போது விவசாய மின் இணைப்புகளுக்கு திறன் அதிகரிக்க விண்ணப்பிக்கிறாங்க. இதற்கு ஆர்டர் போட, 'துட்டு' வசூலிப்பதற்கென்றே தாராபுரம், குண்டடம், மூலனுார் என மூன்று பகுதிகளுக்கு தனித்தனியாக ஏஜென்ட் அப்பாயிண்ட் பண்ணிட்டாராம்,''
''துறை ஊழியர்களை இதற்கு நியமிக்காமல், முன்னாள் காண்ட்ராக்டர் மூலம் இந்த டீலிங் நடக்குதாம். இதுக்கு முக்கிய காரணமே, 'செல்வத்தை' எப்படியாவது சேர்க்கணுமுன்னு துடிக்கிற நபர்தான்னு, பேசிக்கிறாங்களாம்டி,''''ஆமாங்க்கா. கார்ப்ரேஷனுக்கு சொந்தமான கிணற்றின் மீது கட்டிய வீடு இடிந்து விழுந்த விஷயம் என்னாச்சு?''''கலெக்டர் ஆபீஸ் குவார்ட்டர்சுக்கு நேர் பின்னாடி, ஓடைப்பள்ளத்தை ஆக்கிரமித்து, கார்ப்பரேஷன் இடத்தையும் ஆக்கிரமித்து தைரியமாக வீடு கட்டி வாடகைக்கு விட்டிருக்காங்க. இ.பி., காரங்களும், தாராளமா வாங்கிட்டு, லைனும் கொடுத்துட்டாங்க. இந்த லட்சணத்துல, கிணத்து தண்ணீரை சுத்திகரிக்க, எம்.எல்.ஏ., நிதியில் ஆர்.ஓ., பிளாண்ட்டும் போட்டிருக்காங்க. இப்படி பல மேட்டர் இருக்கிற நிலையில, வீடும் இடிஞ்சுதால, விஷயம் வெளியே வந்திருக்கு,'' ''இந்த விஷயத்துக்கு, ஆதாரமே, ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர்தான். விஷயம் தெரிஞ்சவுடன், நடுராத்திரி போய் பார்த்துட்டு, 'எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்,'னு சொன்னாராம். ஆனா, இதை தெரிஞ்சிட்ட, தி.மு.க.,காரங்க அங்கே போய் பிரச்னை பண்ணி, 'கிணத்துக்குள்ள தொழிலாளர் விழுந்துட்டாங்கன்னு, சொல்லி, தண்ணீயை பூரா மோட்டார் வைச்சு வெளியே எடுத்து விட்டாங்க,''''அப்புறம் என்னாச்சுக்கா...?''
''ஆனா, கிணத்துக்குள்ள யாருமில்ல. இடிஞ்ச வீட்டில் வசித்த, வடமாநில தொழிலாளர் ஊருக்கு போனதால, எல்லோரும் தப்பிச்சுட்டாங்க. இப்போது ஆளுங்கட்சி பிரமுகர், அதிகாரிங்களை, 'அன்பாக'கவனிச்சிட்டு, 'திருப்பதி' போகப்போறாராம்,'' என்றாள் சித்ரா.அதற்குள் நிலக்கடலை தீர்ந்து விடவே, இருவரும் தண்ணீர் குடித்தனர்.''வேலை செய்றவங்களுக்கு, எப்பவுமே மரியாதை கிடையாதுங்க்கா,'' மித்ரா சொன்னதுக்கு, ''நீ... என்ன? எல்லா மேட்டரையும், 'க்' வெச்சே பேசற,'' சிணுங்கினாள் சித்ரா.''அக்கா... நாளைக்கு நடக்கிற, சுதந்திர தினவிழாவில், சிறப்பாக பணியாற்றிய போலீசுக்கு 'அவார்ட்' கொடுப்பாங்க இல்லையா, அந்த 'லிஸ்ட்' டில், இருக்கற பேரை பார்த்துட்டு, உண்மையா வேலை செய்யற போலீஸ்காரங்க, நொந்து போயிட்டாங்க,''''ஏன்... என்னாச்சு?''''அக்கா, நார்த், சவுத் ரேஞ்சுக்கு உட்பட்ட ஸ்டேஷன்களை சேர்ந்த சிலரை, அந்தந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் சிபாரிசு செஞ்சிருக்காங்க.''''அதில் ஒருத்தர் சமீபத்தில்தான் மதுவிலக்கில் இருந்து வந்தாராம். 'சீட்டாட்டம்' விஷயத்தில், கை நிறைய வாங்கியதால், 'டிரான்ஸ்பர்' செய்யப்பட்டவர். இதுக்கு முக்கிய காரணமே, அந்த 'அண்ணா' அதிகாரிதானாம்,''''ஏக்கா.. இது கமிஷனருக்கு தெரியுமா?''''அதுதான், எனக்கு தெரியல. இன்னும் ஒருநாள் இருக்கே. கமிஷனர் நினைச்சா... பட்டியலை மாத்தலாம். பார்க்கலாம், அவரு என்ன பண்றாருன்னு?'' ''இல்லக்கா. அவரு கண்டிப்பா 'ஆக்ஷன்' எடுப்பாரு. இப்படித்தான், கருணாநிதி இறந்தப்ப, 'டாஸ்மாக்' கடையை மூடச்சொன்னாங்க. அந்தன்னைக்கு, கமிஷனர், மங்கலம் ரோட்டில், பழக்குடோன் கிட்ட 'ரவுண்ட்ஸ்' போறப்ப, ஒரு இடத்தில, மக்கள் கூட்டம் அலைமோதியிருக்கு,''
''கமிஷனரும் விசாரிச்சதில், 'சரக்கு' தாராளமாக கிடைச்சதை நேரில் பார்த்து, 'சவுத்' அதிகாரிகளை 'மைக்'கில் கூப்பிட்டு, வெளுத்திட்டாரு. அவங்களும், 'சார்.. எங்களுக்கு கண்டிப்பா தெரியாது'ன்னு சொன்னதுக்கு, 'மெயின் ரோட்டிலயே விக்கறாங்க. என்ன வேலை பாக்றீங்க. ஆபீசுக்கு வந்து பாருங்க,'ன்னு பொரிஞ்சு தள்ளிட்டாரு''
''இதைக்கேட்ட, மத்த போலீஸ்காரங்க, 'பார்த்தா 'சாப்ட்வேர்' மாதிரி இருக்காரு. ஆனா, 'ஹார்டுவேர்' மாதிரி சீறுகிறாரே'ன்னு, சக போலீசுகிட்ட 'கமென்ட்' அடிச்சாங்களாம்,''''ஆமாங்க்கா... கீழுள்ளவங்க தப்பு செஞ்சா, அதிகாரிதானே பொறுப்பு. இதே மாதிரி பாருங்க, ரூரலில் நடந்திருக்கு,''''என்ன விஷயம் மித்து?'' ''சமீபத்தில், திருட்டு வழக்கு ஒன்றில், பொள்ளாச்சியில், போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆன ஒருத்தர், கோவை, திருப்பூர், திண்டுக்கல் என, மூன்று மாவட்ட போலீசாரின் கண்ணில் மண்ணை துாவிட்டு, காரில் பறந்தார். இத்தனைக்கும், ரூரல் முழுவதும், 'மைக்'கில், அலர்ட் பண்ணியும், அவரை பிடிக்க முடியலை,''
''என்ன விஷய முன்னு கேளுங்க. உடுமலையில, ஆடு திருடி காரில் வந்த அஞ்சு பேரை பிடிக் கப்போன, எஸ்.ஐ., மீது காரை ஏற்றிய விஷயத்தில், அதிகாரி நடவடிக்கை பெரிசா இல்லையாம். அதனால, 100 கி.மீ., ஸ்பீடில் வர்ற காரை மடக்கி, ஏதாவது ஆயிடுச்சுன்னா... என்ன பண்றதுன்னு, போலீசார் மத்தியில, ஒரு ேபச்சு உலா வருதாம்,''
''மித்து... எது எப்படியோ.. ரூரல் போலீஸ் பத்தி, 'கன்னா பின்னா' செய்தி வந்துட்டே இருக்குது. இது விஷயத்தில், பெரிய அதிகாரி நடவடிக்கை கடுமையா எடுத்த பரவாயில்லதான். ம்... ம்.. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு,'' சொல்லி விட்டு, சித்ரா எழுந்தாள். மித்ரா பின் தொடர்ந்தாள். மைதானத்தில், கல்லுாரி மாணவியர், 'தாயின் மணிக்கொடி' என்ற பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X