எலக் ஷனுக்கு நெருங்கிடுச்சு நேரம் கலெக் ஷனுக்கு நடக்குது பேரம்!| Dinamalar

எலக் ஷனுக்கு நெருங்கிடுச்சு நேரம் கலெக் ஷனுக்கு நடக்குது பேரம்!

Added : ஆக 14, 2018
Share
பிளாக் ஜீன்ஸ், கருப்பு 'ஷர்ட்'டுமாக 'டியோ'வில் புயல் வேகத்தில் வந்து இறங்கினாள் மித்ரா; சித்ராவை அழைத்துக் கொண்டு, வெளியில் செல்வதாக திட்டம்; ஆனால், சித்ரா கிளம்பாமல் இருந்தாள்.''என்ன மித்து! கலைஞருக்கு இரங்கல் கூட்டம் எதுக்கும் போறீயா'' என்று கேட்டாள் சித்ரா.''இல்லைக்கா...கலைஞரோட திரைத்துறை வாழ்க்கையே இங்கதான் ஆரம்பமாச்சு...அது சம்மந்தப்பட்ட யாரும் இங்க
எலக் ஷனுக்கு நெருங்கிடுச்சு நேரம் கலெக் ஷனுக்கு நடக்குது பேரம்!

பிளாக் ஜீன்ஸ், கருப்பு 'ஷர்ட்'டுமாக 'டியோ'வில் புயல் வேகத்தில் வந்து இறங்கினாள் மித்ரா; சித்ராவை அழைத்துக் கொண்டு, வெளியில் செல்வதாக திட்டம்; ஆனால், சித்ரா கிளம்பாமல் இருந்தாள்.''என்ன மித்து! கலைஞருக்கு இரங்கல் கூட்டம் எதுக்கும் போறீயா'' என்று கேட்டாள் சித்ரா.''இல்லைக்கா...கலைஞரோட திரைத்துறை வாழ்க்கையே இங்கதான் ஆரம்பமாச்சு...அது சம்மந்தப்பட்ட யாரும் இங்க நிகழ்ச்சி நடத்தாததுல, உடன் பிறப்புகளுக்கு கொஞ்சம் வருத்தம்'' என்றாள் மித்ரா.''விஷயமே தெரியாம வருத்தப்படுறாங்க...அவரு இங்க தான் வசனகர்த்தாவா கலை வாழ்க்கையை துவங்குனதால, திரைக்கலைஞர்கள் சார்புல, கோவையில தான் அவருக்கு முதல் இரங்கல் கூட்டம் நடத்தப்போறாங்க; தமிழ்ச் சினிமாவோட ஜாம்பவான்கள் பல பேரும், கோயம்புத்துார் வரப்போறாங்க'' என்றாள் சித்ரா.''பரவாயில்லை...ஆனா, அவரு இருக்கிறப்பவும் சரி, இறந்த பிறகும் சரி... நம்மூர் உடன் பிறப்புகள் யாரும் ஒத்துமையா இருக்கிறதா தெரியலை. அவருக்கு இரங்கல் நிகழ்ச்சிகள் நடத்துறதுல கூட, யாரு பெரிய ஆள்ன்னு காமிக்கிறதுல தான் தீவிரமா இருக்காங்க; இப்பிடியே போனா, கொங்கு மண்டலத்துல தி.மு.க.,வுக்கு எப்பவுமே 'சங்கு'தான்'' என்றாள் மித்ரா.''கோயம்புத்துாருக்கு அவர் எவ்வளவோ செஞ்சும், இன்னிக்கு வரைக்கும் இங்க காலுான்ற முடியலைன்னா, அதுக்குக் காரணமே, இங்க இருக்குற தி.மு.க., தலைங்கதான். சாதிக்காரன், ஊர்க்காரன், பினாமி, காசு கொடுத்தவன், சொந்தக்காரன்னு பாத்துப் பாத்து, தேர்தல்ல நிறுத்தியே, கட்சியைக் காலி பண்ணீட்டாங்க'' என்றாள் சித்ரா.''உடன் பிறப்புகளை விடு...ஆளுங்கட்சியிலயும் இப்போ அதான நடக்குது; கருணாநிதி, ஜெ., ரெண்டு பேருமே இல்லாத நிலைமையில, வர்ற தேர்தல்ல மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கப் போறாங்களோ!'' என்றாள் மித்ரா.''அதை விடு...ஆளுங்கட்சி தொழிற்சங்கத்துல முக்கியப் பொறுப்புல இருந்த 'ஸ்மால் சாமி' வலுவா சிக்கிட்டாரு போலிருக்கு...நிஜமாவே மோசடி நடந்திருக்கா, 'பொலிட்டிக்கல் பிரஷர்'தான் காரணமா'' என்று கேட்டாள் சித்ரா.''ரெண்டுமே தான்...டிரைவர், கண்டக்டர் போஸ்ட்டிங் போடுறதுல தொடங்கி, எல்லாத்துலயும் எவ்ளோ சம்பாதிச்சார்ன்னு நமக்குத் தெரியாதா...யாரையுமே மதிக்காம இருந்தாரு...இப்போ நல்லா மாட்டிருக்காரு; ஆனா, அவரோட கூட்டாளிங்க பல பேரு, ஆதிக்கம் பண்ணிட்டு தான் இருக்காங்க'' என்றாள் மித்ரா.''கரெக்ட் மித்து...அதுலயும் அந்த 'பேலஸ்' அடைமொழியைக் கொண்ட 'ரகசிய வியாபாரி' ஒருத்தரு ஆட்டம், ஓவரா இருக்காம்; அவரும், இவரும் சேர்ந்து தான், 'நவ இந்தியா' ஏரியாவுல 'கிளப்' நடத்திட்டு இருக்காங்க...இப்பவும் அந்த 'கிளப்' ஜோரா நடந்துட்டு தான் இருக்கு'' என்றாள் சித்ரா.''அக்கா...நீ சொல்ற அதே 'பேலஸ்' பார்ட்டி தான், பல வருஷமா, டாஸ்மாக்லயும் டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்ட் எடுத்து நடத்திட்டு இருக்காரு; அவரோட மேனேஜர் தான், எந்தக்கடைக்கு, என்ன சரக்கு அனுப்புறதுன்னு முடிவு பண்றாரு; ஓட்டல் 'பார்'களுக்கு, டாஸ்மாக் கடை பேருல 'பில்' போட்டு, சரக்கு அனுப்புறதும் இவுங்க தான்!'' என்றாள் மித்ரா.''அது மட்டுமா மித்து...ஜெயில்ல நடக்குற பல 'இல்லீகல்' வேலைகளுக்கும் இவர் தான் 'காட் பாதர்' மாதிரிங்கிறாங்க...அவரைத் துாக்குனாலே, இந்த 'ஸ்மால் சாமி' வழிக்கு வந்துடுவார்ன்னு உளவுத்துறை காரங்களே சொல்றாங்க!'' என்றாள் சித்ரா.''நீ ஜெயில்ன்னு சொன்னதும், ஜெயிலுக்குப் போய் வந்த மோசடி நடிகை ஞாபகம் வந்துச்சு... 'பேஸ்புக்'ல 'பேக் ஐடி' தயார் பண்ணியே, பசங்களை மிரட்டி பணம் பறிச்ச அந்தப் பொண்ணு, ஜெயில்ல இருக்குறப்போ, அவங்க பேருல ஒரு பிரைவேட் பைனான்ஸ்ல ஒரு அக்கவுன்ட் 'ஓப்பன்' பண்ணி, 'ஆபரேட்' பண்ணிருக்காங்க'' என்றாள் மித்ரா.குறுக்கிட்ட சித்ரா, ''அப்படின்னா, அவுங்க பேருல வேற யாரோ தான், 'பேக் ஐடி'களை 'கிரியேட்' பண்றாங்களா'' என்று கேட்டாள்.''அப்பிடிச் சொல்றது தான் அவுங்க நோக்கம்...ஆனா, ஜெயிலுக்குள்ள இருக்குறப்பவே, அவுங்களே தான், அக்கவுன்ட் 'ஓப்பன்' பண்ணுனதா, போலீஸ் சந்தேகப்படுது; நம்மூர் ஜெயில்ல, 'ஜியோ'வுக்கு 'ஜாமர்' இல்லைங்கிறதால, நிறைய கைதிங்கள்ட்ட அந்த நம்பர் தான் இருக்குறதாச் சொல்றாங்க; அது மாதிரி இவுங்கள்ட்டயும் இருந்திருக்கலாம்'' என்றாள் மித்ரா.''ஒண்ணு, ஜெயில்ல இருக்குற யாரோ, அந்த நடிகைக்கு 'ஹெல்ப்' பண்ணிருக்கணும்; அல்லது வெளியில யாரையாவது வச்சு, இந்த மாதிரி 'அக்கவுன்ட்' புதுசா ஆரம்பிச்சு, கேசை 'வீக்' பண்ண முயற்சி நடக்கலாம்'' என்றாள் சித்ரா.இருவருக்கும் 'பில்டர் காபி' கொடுத்து விட்டு, பக்கத்திலே கடைக்குப் போய் விட்டு வருவதாகக் கிளம்பினார் சித்ராவின் அம்மா. உட்கார்ந்து 'டிவி' பார்க்கத் துவங்கினாள் மித்ரா. காமெடி சேனலில், 'சரவணன் இருக்க பயமேன்' காட்சி ஓடிக் கொண்டிருந்தது.''அவர் இருக்குறதால தான், கார்ப்பரேஷன் ஆபீசர்கள், காண்ட்ராக்ட்காரங்க எல்லாரும் பயப்படுறாங்க'' என்று மொட்டையாக ஆரம்பித்தாள் மித்ரா.''யாரு அவரு...அவரைப் பாத்து ஏன் கார்ப்பரேஷன்காரங்க பயப்படணும்'' என்று கேட்டாள் சித்ரா.''நம்ம கார்ப்பரேஷன்ல, குப்பையில கோடிகளை அள்ளுற அந்த இன்ஜினியரைத் தான் சொல்றேன்... சமீபமா, அவரோட 'கிராப்' ரொம்ப ஏறிடுச்சாம்...யாரையுமே மதிக்கிறது கிடையாதாம்; யார் போன் அடிச்சாலும் எடுக்குறது இல்லியாம்; ஆபீசர்களைப் பத்துன தகவலை எல்லாம் ஆளுங்கட்சியில போட்டு விடுறதே அவர் தானாம்!'' என்றாள் மித்ரா.''அவர் மேல 'விஜிலென்ஸ் என்கொயரி' வந்து, சென்னைக்கு மாத்துனாங்க; ஆளுங்கட்சியில முக்கியமான ஆளுகளைப் பிடிச்சு, இங்க வந்துட்டு, ஓவரா ஆடுறாரு போலிருக்கு'' என்றாள் சித்ரா.''அது அந்தப் பேரோட ராசி போலிருக்கு...இதே பேர்ல இருக்குற இன்னொரு ஆபீசரு, 'சவுத்'ல இதே மாதிரித்தான் யாரையும் மதிக்காம இருக்காராம்; ஆளுங்கட்சி 'பேக்ரவுண்டு'லதான், அவரும் இப்பிடி இருக்காராம்; ஆபீசுக்கே வர்றதில்லையாம்; போனையும் எடுக்குறதில்லையாம். இதெல்லாம் மினிஸ்டருக்குத் தெரியுமா, தெரியாதான்னு தெரியலை'' என்றாள் மித்ரா.''இவுங்க மட்டுமா, ஆளுங்கட்சியில தொடர்புல இருக்குறாங்க...ஞானமுள்ள 'இன்ஜினியரு' ஆளுங்கட்சியில எந்த அளவுக்கு செல்வாக்குல இருக்கார்னு தெரியாதா...அவரு என்ன வேலை பாக்குறாருன்னு தெரியாதா'' என்று கேட்டாள் மித்ரா.''இந்த கும்பலை மொத்தமா துாக்கி விடாம, நம்ம கார்ப்பரேஷன்ல ஒரு வேலையும் நடக்காது; ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு, பல நுாறு கோடியை சென்ட்ரல் கவர்மென்ட் அள்ளிக் கொடுக்குது; ஆனா, நம்ம கொடுக்குற பணத்துல என்ன திட்டம் போடுறாங்க; எது எது தேவையில்லாத திட்டம்னு பார்க்கவே மாட்டேங்கிறாங்களே!'' என்று கொதித்தாள் சித்ரா.''உண்மைதான்க்கா...நம்ம 'டிஸ்ட்ரிக்ட்'ல நல்ல, நல்ல 'போஸ்ட்டிங்'ல எதுக்கும் உதவாத ஆபீசர்களைப் போட்டுட்டு, மக்களைப் பாடாப்படுத்துறாங்க; ஆனா, தேவையான போஸ்ட்டிங்ல ஆளைப் போட மாட்டேங்கிறாங்க. கலெக்ட்ரேட்ல 'பி.ஏ.ஜி' போஸ்ட்டிங் எவ்ளோ முக்கியமானதுன்னு தெரிஞ்சும், ரெண்டு வருஷமா அது காலியாத்தான் இருக்கு'' என்றாள் மித்ரா.''அதுக்கு தான், 'பேக்வர்டு கிளாஸ்' ஆபீசரை 'அடிஷனல் சார்ஜ்'ஜா போட்ருந்தாங்களே...இப்போ அவரும் இல்லியா'' என்று கேட்டாள் சித்ரா.''அவர் டாஸ்மாக் மேனேஜரா போனதும், அவருக்குப் பதிலா வந்தவர்ட்ட பொறுப்பை ஒப்படைச்சிருந்தாங்க. இப்போ, சம்மந்தமே இல்லாம, தேர்தல் வேலையைப் பாக்க வேண்டிய ஆபீசர்ட்ட ஒப்படைச்சிருக்காங்க. ரொம்பவே 'ப்ளான்' பண்ணி, இந்த போஸ்ட்டிங்கை, அந்த ராஜகுமாரன் 'டேக் ஓவர்' பண்ணிருக்காராம்'' என்றாள் மித்ரா.''அப்பிடி அந்த 'போஸ்ட்டிங்'ல என்ன இருக்குதாம்'' என்று கேட்டாள் சித்ரா.''ஆர்.ஐ., விஏஓ, அசிஸ்டென்ட்ன்னு பலருக்கு டிரான்ஸ்பர் போடுறது, ஹோர்டிங்ஸ் பர்மிஷன் தர்றதுன்னு நல்லா 'டப்பு' வர்ற இடம்...அதனால தான், போராடி வாங்கிருக்காரு; ஏற்கனவே, சேலத்துல இவரு எச்.எஸ்.சா இருக்குறப்போ, அள்ளித் தட்டிருக்காராம். இப்போ இங்க வந்து, எல்லாத்துக்கும் ஜோரா பேரம் பேசுறாராம்; அதனால, தேர்தல் வேலை எதுவும் நடக்குறதில்லை!'' என்றாள் மித்ரா.''தேர்தல் வேற நெருங்குது…ஏற்கனவே, நம்ம மாவட்டத்துல 'டிராப்ட் ரோல்' ஒரு நாள் 'லேட்'டாதான் விட்டாங்க…எலக்சன் ரிசல்ட்டும் ரொம்ப நேரம் கழிச்சு தான் சொன்னாங்க…அப்பிடியிருக்கிறப்ப, இவருக்கு 'அடிஷனல் சார்ஜ்' தேவையா'' என்றாள் சித்ரா.''புதுசா வந்திருக்குற டிஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீசர், ரூரல்ல இருக்குற எல்லா ஆபீசர்களையும் கூப்பிட்டு, உங்க ஏரியாவுல ஆன்லைன் லாட்டரி, கஞ்சா எது நடமாட்டம் இருந்தாலும், உடனே பிடிக்கணும்; நான் பிடிச்சா, அப்புறம் உங்க நிலைமை கஷ்டமாயிரும்னு எச்சரிச்சிருக்காராம்'' என்றாள் மித்ரா.''எனக்குத் தெரிய, பெரியநாயக்கன்பாளையத்துல இருந்து பாலமலை போற வழியில, செல்வபுரம், கூடலுார் கவுண்டம்பாளையம் ஏரியாவுல எல்லாம், ஆட்டோவுலயே பகிரங்கமா கஞ்சா விக்கிறாங்க. அந்த ஆட்டோக்கள்ல 'தளபதி'ன்னு போட்டு இருக்குறதாவும் தகவல் சொல்றாங்க'' என்றாள் சித்ரா.''அதெப்பிடி பகிரங்கமா விக்கிறாங்களாம்'' என்று கேட்டாள் மித்ரா.''சிகரெட்ல போட்டு விக்கிறாங்களாம்...ஒரு சிகரெட் நுாறு ரூபா....காலேஜ் பசங்க தான் நிறையா 'அடிக்ட்' ஆயிருக்கானுக. போலீசுக்கு அந்த ஏரியா மக்கள், பலமுறை தகவல் சொல்லியும் ஒரு பயனும் இல்லியாம்'' என்றாள் சித்ரா.''துடியலுார்ல இன்ஸ்பெக்டர் போஸ்ட்டிங்கை 'வேகன்ட்'டாவே வச்சிருக்காங்க...சிறுமியர் பாலியல் புகார்ன்னா, இன்ஸ்பெக்டர் ரேங்க்ல இருக்குற ஒரு ஆபீசர்தான் விசாரிக்கணும்னு சட்டமே இருக்கு; ஆனா, அங்க 'இன்ஸ்' இல்லாததால, அந்த மாதிரி வர்ற புகார்களை, வேற கேசா மாத்தி, எஸ்.ஐ., ஏட்டையா யாராவது விசாரிக்கிறாங்களாம்'' என்றாள் மித்ரா.''இதுவும் அதே ஏரியா நியூஸ் தான்...பன்னிமடையில இருக்குற கவர்மென்ட் ஸ்கூல்ல, 1200 புள்ளைங்க படிச்சிட்டு இருந்தாங்க; இப்போ, வெறும் நானுாறு பேர் தான் படிக்கிறாங்க. சென்டம் வாங்கணுங்கிறதுக்காக, அதுலயும் பல பேருக்கு 'டிசி' கொடுத்து அனுப்புறாராம் அங்க இருக்குற ஹெட்மாஸ்டர்! '' என்றாள் சித்ரா.''இப்படிச் செஞ்சா...மக்கள் கொந்தளிச்சு, கலெக்டர்ட்டயே வந்திருவாங்களே'' என்றாள் மித்ரா.''ஆறுக்குட்டி எம்.எல்.ஏ.,கிட்டப் போயி புகார் பண்ணிருக்காங்க. அவரும் சத்தம் போட்ருக்காரு. ஆனா, ஒரு மாற்றமும் இல்லியாம்; இப்போ பசங்க ஏதாவது தப்பு பண்ணுனா, 'பைன்' போடுறாராம்; பணத்தை நேரடியா வாங்காம, துடியலுார்ல இருக்குற ஒரு பெயின்ட் கடையில கொடுக்கச் சொல்றாராம்; அவரு மொத்தமா கலெக் சன் பண்ணிக்குவாராம்'' என்றாள் சித்ரா.அடுத்த மேட்டரை ஆரம்பிப்பதற்குள், சித்ராவின் அம்மா வரவே, இருவரும் 'பைபை' சொல்லி விட்டு, வண்டியைக் கிளப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X