Finally, Chief Justice Responds To 4 Judges, Cites "Personal Ambition" | விமர்சிப்பது எளிது: மவுனம் கலைத்தார் தலைமை நீதிபதி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

விமர்சிப்பது எளிது: மவுனம் கலைத்தார் தலைமை நீதிபதி

Added : ஆக 15, 2018 | கருத்துகள் (16)
Advertisement
IndependenceDay2018, IndependenceDayIndia, 72ndIndependenceDay, சுப்ரீம் கோர்ட் , நீதிபதி தீபக் மிஸ்ரா,  தேசிய கொடி, நீதித்துறை,  
Supreme Court, Justice Deepak Mishra, National Flag, Justice Department,HappyIndependenceDay2018 , IndependenceDaySpecial,JaiHind ,HappyIndependenceDay2018 ,

புதுடில்லி: ஒரு அமைப்பை விமர்சனம் செய்வது எளிது. ஆனால், அதனை ஆக்கப்பூர்வமாக செயல்பட வைப்பது கடினம் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் 4 பேர் நிருபர்களை சந்தித்து, முக்கிய வழக்குகள் இளம் நீதிபதிகளுக்கு தான் ஒதுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தில் நெருக்கடி உள்ளதாக கூறி தலைமை நீதிபதி குறித்து புகார் கூறினார். இது குறித்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா எதுவும் கூறவில்லை

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேசிய கொடி ஏற்றி வைத்து அவர் பேசியதாவது: ஒரு அமைப்பை விமர்சிப்பது, அழிப்பது, தாக்கி பேசுவது என்பது எளிது. ஆனால், அந்த அமைப்பை சரியான பாதையில் மாற்றுவதும், சிறப்பாக செயல்பட வைப்பதும் கடினம். நாட்டின் நீதித்துறையை பாதுகாக்க, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும். நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான சீர்திருத்தங்களை, பொறுப்புடன் செய்ய வேண்டும் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
16-ஆக-201801:39:50 IST Report Abuse
spr "ஒரு அமைப்பை விமர்சிப்பது, அழிப்பது, தாக்கி பேசுவது என்பது எளிது. ஆனால், அந்த அமைப்பை சரியான பாதையில் மாற்றுவதும், சிறப்பாக செயல்பட வைப்பதும் கடினம்" நீதித்துறை அண்மைக்காலத்தில் இப்படித்தான் விமரிசனம் செய்து வருகிறது இயங்கிக்கொண்டிருக்கிறது. தேவையற்ற வகையில், முக்கியமில்லாத பல விஷயங்களில் தலையிட்டு, மத்திய மாநில அரசுகளின் செயல்பாட்டை விமரிசிப்பதன் மூலம் அதற்கு நெருக்கடி உண்டாக்கி பல ஆக்கபூர்வ செயல்கள் நடைபெறுவதனை தாமதிக்கச் செய்து வருகின்றன. ஆதார் கட்டாயம் என்ற வழக்கை ஆதார் தனிமனித உரிமையில் தலையயீடு என்று மாற்றி அது குறித்து பல நூற்றாண்டுகளாக விசாரித்து வருகிறபோதே அரசு மக்களை பலவகையிலும் நெருக்கடி கொடுத்து அமுல்படுத்துகிறதே அதனை நிறுத்தி வைக்க முடிந்ததா? அநேகமாக எல்லா செயல்பாடுகளுக்கும் ஆதார் கட்டாயம் என்றாகிவிட்டதே வங்கிகளில் பணம் களவாடப்படுகிறதே (As the Supreme Court hears arguments over concerns around the Aadhaar database and the regulatory framework around it, the National Payments Corporation of India (NPCI) has told banks to discontinue Aadhaar-based payments through the Unified Payments Interface (UPI) and Immediate Payment tem (IMPS) channels. In a July 17 circular addressed to banks, the payments body said, “Aadhaar number is a sensitive information and the revised framework about its usage in the payment landscape is still evolving. With this background, we proposed removal of “Pay to Aadhaar” functionality in both UPI and IMPS before the steering committee (meeting held on July 5, 2018). The proposal of removing the Aadhaar number functionality was approved by the steering committee.”- அண்மையில் ஒரு புனேயில் ஒரு வங்கியில் 90 கோடி கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் ஒரு ஹேக்கர் ஆதாரை வைத்து ஹேக் செய்ய முடியும் என நிரூபித்த பின்னர் இப்படியோர் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது) குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்க வழி செய்து அதே நேரத்தில் நாட்டில் குற்றம் அதிகமாகிவிட்டது அரசு சரியாக செயல்படவில்லை என வி In case of transactions involving the Aadhaar number only, the corresponding bank details are ed from the centralised mapper maintained at NPCI?s end for routing the transaction. UPI also provides the option of entering the beneficiary's bank details besides the Aadhaar number and the transactions are routed directly to the respective bank for making the credit to the linked bank account.முன்பே செய்திருந்தால், இந்த நஷ்டம் தவிர்க்கப்பட்டிருக்கலாம்) பல குற்றங்களில் விசாரணை முறையாக இல்லையென்றால் அதனை முறையாக செய்த பின்னர் வழக்கை விசாரிப்பதோ அல்லது வழக்கு தொடுத்தவர் அந்த வழக்கைத் தாமாக வாபஸ் பெறச் செய்வதோ முறை அதனை விடுத்து, நீதிமன்றம் குற்றம் நடந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் ஆனால் சாட்சியங்களை/ஆதாரங்களை சரியான வகையில் சமர்ப்பிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து வருகிறது அளிக்கப்பட தீர்ப்பை காலத்தில் நிறைவேற்றப்படாதது குறித்து இனியாவது விசாரிக்குமா குற்றம் சாட்டப்பட்ட நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பதனை தாற்காலிகமாக அவர் நிரபராதி என அறிவிக்கப்படும் வரை பதவி விலக்கி வைக்குமா
Rate this:
Share this comment
Cancel
sankar - trichy,இந்தியா
16-ஆக-201801:18:14 IST Report Abuse
sankar வக்கீல் வாதம் வழக்கை விமர்சிப்பது தானே . நீங்க சொல்றது உள்குத்து
Rate this:
Share this comment
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
15-ஆக-201821:14:00 IST Report Abuse
r.sundaram முன்னாள் நிதிக்கு மட்டும் கேட்ட்டவுடன் முன்ஜாமீன், வெளிநாடு செல்ல அனுமதி, முன்ஜாமீன் எல்லாம் கிடைக்கிறதே அது எப்படி?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X