பதிவு செய்த நாள் :
அறிவிப்பு!
செப்., 25 முதல், 50 கோடி பேருக்கு சுகாதார திட்டம்
நாட்டின் வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

புதுடில்லி : நாட்டின், 72வது சுதந்திர தினமான நேற்று, டில்லி, செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, பிரதமர் மோடி, உரையாற்றினார். அப்போது, தற்போதைய ஆட்சியில், எல்லா துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும், 50 கோடி இந்தியர்களுக்கு, சுகாதார பாதுகாப்பு வழங்கும் திட்டம், செப்., 25ல் துவங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

நாட்டின்,வளர்ச்சி,பிரதமர்,Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி,பெருமிதம்


நாட்டின், 72வது சுதந்திர தினம், நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டில்லி, செங்கோட்டையில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பயங்கர வாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. விழாவை காண்பதற்கு, அதிகாலையிலேயே, பொதுமக்கள், மாணவர்கள், வி.ஐ.பி.,க்கள் வந்து குவிந்திருந்தனர். பின், பிரதமர் நரேந்திர மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது: கடந், 2014ல், நாட்டு மக்கள், தங்களின் விருப்பமான அரசை மட்டும் அல்லாமல், புதிய தேசத்தை கட்டமைப்பதற்கான செயலிலும் இறங்கினர். நாட்டின், 125 கோடி மக்கள் ஒருங்கிணைந்து இலக்கை அடைய முற்படும்போது, சாதிக்க முடியாதது எதுவும் கிடையாது.

முந்தைய ஆட்சியில், உறங்கிக் கொண்டிருந்த யானையான இந்தியா, தற்போது விழித்து விட்டது; முன்னேற்றத்தை நோக்கி, இந்தியா, தன் ஓட்டத்தை துவங்கி விட்டது. மக்களை அரவணைத்படி, முன்னேற்றம் எனும் இலக்கை நோக்கி, அரசு தொடர்ந்து பயணிக்கும். கடந்த, 2013ல், ஆட்சியில் இருந்த, காங்.,கின் வேகத்துக்கு இணையாக செயல்பட்டால், தற்போதைய அரசின் நான்கு ஆண்டு கால சாதனைகளை அடைய, 40 ஆண்டுகள் ஆகும்.

நாடு முழுவதும், 50 கோடி பேருக்கு சுகாதார பாதுகாப்பு வழங்கும், 'ஆயுஷ்மான் பாரத் - தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்' தீன் தயாள் உபாத்யாய் பிறந்த நாளான, செப்., 25ல் துவங்கும்.இந்த திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக, 10 கோடி குடும்பங்களைச் சேர்ந்த, 50 கோடி பேர் பயன்பெறுவர். ஆயுதப்படையில், ஆண்களை போல் பெண்களும், நிரந்தர பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

சட்டம், எல்லாவற்றையும் விட உயர்வானது. அரக்கத்தனமான மனப்பான்மையில் இருந்து சமூகம் விடுபட வேண்டும். ம.பி.,யில் சமீபத்தில் நடந்த, பாலியல் பலாத்கார வழக்கு ஒன்றை விசாரித்த விரைவு நீதிமன்றம், குற்றவாளியை துாக்கிலிட வேண்டும் என அளித்த தீர்ப்பு பாராட்டுக்கு உரியது.

மத்தியில் ஆளும், தே.ஜ., கூட்டணி ஆட்சியில், தலித்துகள், பிற்பட்ட வகுப்பினரின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் முடிந்த பார்லிமென்ட் கூட்டத் தொடர், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவே முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டது. வரும், 2022க்குள், நாட்டின் தேசியக் கொடியுடன், நம் நாட்டின் குடிமகன் அல்லது குடிமகள், 'ககான்யான்' என்ற விண்கலம் மூலம், விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவார்.

ஊழல் பேர்வழிகளையும், பணத்தை பதுக்குவோரையும், மத்திய அரசு சும்மா விடாது. பல்வேறு துறைகளில், இடைத்தரகர்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டுள்ளது; வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசின் நலத் திட்டங்களை அனுபவித்து வந்த போலி பயனாளிகள் அகற்றப்பட்டுள்ளதால், 90 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமாகி உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்கு காரணமான, நேர்மையான வரி செலுத்துவோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசு மேற்கொண்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்களால், உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்துள்ளது. கடந்த, 2014க்கு முன், வரி செலுத்துவோர் எண்ணிக்கை, நான்கு கோடியாக இருந்தது. அரசின் அதிரடி நடவடிக்கைகளால், இந்த எண்ணிக்கை, 6.75 கோடியாக அதிகரித்துள்ளது.

முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்ய பயன்படுத்தப்படும், 'முத்தலாக்' நடைமுறையை தடை செய்வதில், அரசு உறுதியாக உள்ளது. இதற்கான சட்ட திருத்தத்தை நிறைவேற விடாமல், சில கட்சிகள் தடுத்து வருகின்றன. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால், இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இந்த விஷயத்தில், பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியாவை உயர் நிலைக்கு எடுத்து செல்வதற்காக ஓய்வின்றி உழைக்கிறேன்.

அனைவருக்கும் வீடு, மின்சாரம், சமையல், 'காஸ்' இணைப்பு, துாய்மையான சுற்றுப் புறம், சுகாதாரம், தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்பதை தாரக மந்திரமாக வைத்து, தே.ஜ., கூட்டணி அரசு செயல்பட்டு வருகிறது.

விவசாயத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில், புதிய விவசாய ஏற்றுமதி கொள்கையை, மத்திய அரசு விரைவில் அறிவிக்கும். வரும், 2022க்குள், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை நோக்கி, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

கூகுளில் நேரடி ஒளிபரப்பு :

பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை, 'கூகுள், யூ டியூப்' ஆகியற்றில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டன. கூகுள் நிறுவனத்தின், முதன்மை பக்கத்தில் ஒளிபரப்பான, மோடியின் சுதந்திர தின உரையை, பல லட்சம் பேர் கேட்டு ரசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசு நிறுவனமான, பிரசார் பாரதியுடன் சேர்ந்து, கூட்டு முயற்சியாக, கூகுள் நிறுவனம், மோடியின் உரையை நேரடி ஒளிபரப்பு செய்துள்ளது. துார்தர்ஷன் தொலைக்காட்சியில், பிரதமரின் சுதந்திர தின உரையை, 5.5 லட்சம் பேர் பார்த்ததாக கூறப்படுகிறது.


Advertisement

மோடி கூறிய பாரதியார் கவிதை!

பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின், 'பாரத சமுதாயம் வாழ்கவே' என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டி பேசினார். அவர் பேசியதாவது: நம் நாடு, உலகிலேயே மிகச்சிறந்த நாடாக மட்டும் திகழாமல், மற்ற நாடுகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கும். அனைத்துத் தடைகளையும் கடந்து, அனைத்து நாடுகளுக்கும் வழிகாட்டியாகத் திகழும். எல்லாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை, இந்தியா, உலகிற்கு அளிக்கும். இவ்வாறு அவர் பேசினர். இதற்கு முன், 2015-ல், இலங்கை பார்லி.,யில் பேசும்போது, சிலப்பதிகாரம் குறித்தும், மகாகவி பாரதியார் குறித்தும் மேற்கோள்காட்டி, பிரதமர் மோடி பேசினார். பாரதியாரின், 'சிந்து நதியின் மிசை' பாடலை மேற்கோள்காட்டி அவர் பேசியது, குறிப்பிடத்தக்கது.


சுதந்திர தின உரையில் மோடி புதிய சாதனை :

பிரதமர் பதவியில் இருப்பவர், நீண்ட நேரம் சுதந்திர தின உரையாற்றும் புதிய மரபை, நரேந்திர மோடி உருவாக்கி உள்ளார். கடந்த, 2017ல், நடந்த சுதந்திர தினத்தில் உரையாற்றியபோது, பிரதமர் நரேந்திர மோடி, 57 நிமிடங்கள் பேசினார். அதுவே, கடந்த ஐந்தாண்டுகளில், அவர் ஆற்றிய மிக குறுகிய உரை. 2016ல், அதிகபட்சமாக, 96 நிமிடம், மோடி உரையாற்றினார். நேற்று நடந்த சுதந்திர தின விழாவின்போது, மோடி, 80 நிமிடம் உரையாற்றி உள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற ஆண்டான, 1947ல், முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு, 72 நிமிடம் சுதந்திர தின உரையாற்றியதே, 2015 வரை, நீண்ட உரையாக திகழ்ந்தது. 2015ல், பிரதமர் மோடி, 86 நிமிடம் சுதந்திர தின உரையாற்றி, அந்த சாதனையை தகர்த்தார்.


'உண்மை பேச வேண்டும்'

பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை குறித்து, காங்., தகவல் தொடர்பு பொறுப்பாளர், ரந்திப் சுர்ஜேவாலா, டில்லியில் நேற்று கூறியதாவது: பா.ஜ., அரசின், 'போலி நல்ல நாள்' வாக்குறுதியை கேட்டு கேட்டு, மக்கள் அலுத்து விட்டனர். மோடி ஆட்சியை விட்டு போகும், 'உண்மையான நாட்கள்' வர வேண்டும் என, அவர்கள் விரும்புகின்றனர். பிரதமர் மோடி, தற்போதைய, பா.ஜ., அரசின் கடைசி சுதந்திர தின உரையில், உண்மைகளை பேசியிருக்க வேண்டும். ஊழல், கொடூர கும்பல்களால் தாக்குதலுக்கு ஆளாகி கொல்லப்படுதல், சீன ஊடுருவல் போன்ற விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த வரும்படி, காங்., தலைவர் ராகுல் விடுத்த சவாலை, பிரதமர் மோடி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


வீராங்கனையர் அசத்தல் :

டில்லியில் உள்ள, வரலாற்று சிறப்பு வாய்ந்த செங்கோட்டையில் நேற்று, சுதந்திர தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதற்கு, 'ஸ்வாட்' எனப்படும், பெண்கள் மட்டுமே இடம்பெற்ற, சிறப்பு ஆயுதங்கள் மற்றும் உத்திகள் குழு, முதல் முறையாக, பாதுகாப்பு வழங்கியது. இந்த குழுவில், 36 பெண்கள் இடம்பெற்றிருந்தனர். ஸ்வாட் குழுவில் இடம்பெற்ற பெண்களுக்கு, என்.எஸ்.ஜி., எனப்படும், தேசிய பாதுகாப்பு படை பயிற்சிகள் அளித்தது. ஸ்வாட் வீராங்கனையர், நெரிசல் மிக்க பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், அதை எதிர்கொள்வதற்கான பயிற்சிகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
18-ஆக-201811:44:32 IST Report Abuse

Malick Rajaகூலிப்படையை எளிதாக அடையாளம் காணப்பட்டதும் அவர்களின் ஊதியங்கள் ,பணிகள் அணைத்தும் விவரமாக ஆட்சிமாற்றத்தின் மூலம் வெளிப்பட்டுவிடும்

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-ஆக-201821:23:10 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஊழல்வாதிகளுக்கு எதிரிங்க நீங்க . உண்மைதான் பணமில்லா பரிமாற்றம் மிக நல்ல செயல்பாடுங்க. தெரிந்தவர்களுக்கு .பணத்தை பதுக்கி வைப்பவர்களுக்கு நல்லதா தெரியாதுதான். அவர்கள் எதிரிகள் தானே அதனால்>>>>>

Rate this:
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
16-ஆக-201821:15:19 IST Report Abuse

SIVA. THIYAGARAJANஇதுவரை இப்பிரதமரைப் போல் யாரும் செயல்பட்டது இல்லை. சரளமான உரை சலிக்காத உணர்வு. திறந்த வெளி பேச்சு. ஊழலை அகற்றும் உள்ளம். பாராட்டுகள்,.

Rate this:
மேலும் 62 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X