சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குமரியிலும் உலுக்கி எடுக்கிறது மழை

நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் மழையால், நுாற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் ரோடுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி,உலுக்கி எடுக்கிறது,rain,மழை


கேரளாவை உலுக்கி எடுத்து வரும் தென்மேற்கு பருவமழை, அதை ஒட்டியுள்ள, தமிழகத்தின் குமரி, நெல்லை மாவட்டங்களையும் விட்டு வைக்கவில்லை. நேற்று முன்தினம் மதியம் முதல், கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது.

பெருஞ்சாணி அணை மொத்த கொள்ளளவான, 77 அடியில், நேற்று அதிகாலை, 76 அடியை கடந்தது. நீர் வரத்து, 30 ஆயிரம் கன அடியை கடந்ததால், 30 ஆயிரத்து, 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் பரளியாறு, குழித்துறையாறு, கோதையாற்றில் கரைபுரண்டு ஓடுகிறது. நுாற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 1,000க்கும் மேற்பட்ட வீடுகளை, வெள்ளம் சூழ்ந்துள்ளது.

ரயில் பாதை துண்டிப்பு :


நாகர்கோவில் அருகே, தெரிசனங்கோப்பு கிராமத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சிறமடம்,

அருமநல்லுார் செல்லும் ரோடு துண்டிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின. நேற்று மாலை வரை மாவட்டத்தில், 55 வீடுகள் இடிந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 200 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மழை காரணமாக, இரணியல் அருகே, ஆற்று விளை பாலம் பகுதியில், தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், நாகர்கோவில் -- திருவனந்தபுரம் வழித்தடத்தில், ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. குருவாயூர் - சென்னை ரயில், இரணியலுக்கு அரை கி.மீ., முன்னதாக நிறுத்தப்பட்டது. காலை, 6:30 மணிக்கு, கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு, திருவனந்தபுரம் வழியாக மும்பை செல்லும் விரைவு ரயில், மதுரை, ஈரோடு வழியாக திருப்பி விடப்பட்டது. அனந்தபுரி ரயில், நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது.

சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து, 13 மீனவர்களுடன் மீன் பிடிக்க சென்ற படகு மாயமானது. நேற்றிரவு, 13 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர் மழை, வெள்ளம் காரணமாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக, கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்து உள்ளார்.

தாமிரபரணி :


நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும், இரண்டு நாட்களாக கன மழை பெய்கிறது. அதிகபட்சமாக, செங்கோட்டையில், 27 செ.மீ., மழை பெய்துள்ளது. குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பாபநாசம் அணையின் மொத்த உயரம், 143 அடி. இதில், 140 அடிக்கு

Advertisement

தண்ணீர் நிரம்பியுள்ளது. அணையில் இருந்து, தாமிரபரணி ஆற்றில், 14 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கரையோர மக்களுக்கு கலெக்டர் ஷில்பா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பவானி ஆற்றில் வெள்ளம்:

குமரி,உலுக்கி எடுக்கிறது,rain,மழை

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 32.8, டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. இதன் உயரம், 120 அடி என்றாலும், சகதி, 15 அடி கழித்து, 105 அடியே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி மலைப் பகுதியில், ஒரு வாரத்துக்கும் மேலாக, தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்குகிறது. கோவை மாவட்டம், பில்லுார் அணை, நீலகிரி மாவட்டம், அப்பர் பவானி, அவலாஞ்சி அணைகளில் திறக்கப்பட்ட உபரிநீர், தொடர்ச்சியாக, பவானிசாகர் அணைக்கு வந்ததால், நீர்மட்டம், நேற்று காலை, 9:00 மணிக்கு, முழு கொள்ளளவான, 105 அடியில், 102 அடியை எட்டியது. நேற்று காலை நிலவரப்படி, அணைக்கு வினாடிக்கு, 44 ஆயிரம் கன அடி நீர் வந்தது. அணை கட்டி, 63 ஆண்டுகள் ஆன நிலையில், 17வது முறையாக, பவானிசாகர் அணை, நேற்று நிரம்பியது. நேற்று அதிகாலை, 2:30 மணியளவில், ஒன்பது கண் மேல் மதகு மற்றும் ஆற்று மதகு வழியாக வினாடிக்கு, 50 ஆயிரம் கன அடி தண்ணீர், பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. ஆற்றில் இரு கரைகளையும் தொட்டு, வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள், சிறுவர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதோ, மீன் பிடிக்கவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது, எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.AJINS - CHENNAI,இந்தியா
16-ஆக-201820:17:18 IST Report Abuse

S.AJINSஎந்த அரசாங்கமும் உதவுவதில்லை . எந்த வளர்ச்சி பணிகளும் இல்லை . எங்கள் சுய முயற்சி , உழைப்பிலேயே வாழ்கிறோம் . முக்கியமாக தமிழக மாநில அரசிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை . நானும் ஒரு குமரி மாவட்டக்காரன் . இங்கே பலரும் மிக மோசமான கருத்துக்களை பதிவு செய்திருப்பது மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது . கன்யாகுமரியில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு தெரியும் நாங்கள் எல்லா விஷயங்களிலும் மாநில , மற்றும் மத்திய அரசால் எந்த அளவிற்கு புறக்கணிக்கப்படுறோம் என்று . எல்லாம் கடவுள் பார்த்துக்கொள்வார்

Rate this:
S.AJINS - CHENNAI,இந்தியா
16-ஆக-201820:01:54 IST Report Abuse

S.AJINSகன்னியாகுமரி மக்கள் தமிழ்நாட்டோடவும் சேர முடியாது கேரளாவோடவும் சேர முடியாது அங்கே போனால் மலையாளி என்பார்கள் இங்கே போனால் பாண்டி என்பார்கள். யாரிடம் இருந்தும் உதவி கிடைக்காது ஆனால் குறை சொல்ல நிறைய பேர் இருக்கிறார்கள் என்பது புரிகிறது

Rate this:
SSK - Bangalore,இந்தியா
16-ஆக-201819:04:45 IST Report Abuse

SSKரோடு போடுரேன்னு ஒரே வழித்தடத்தில் 3 ரோடு போட்டு விலை நிலங்கள் எல்லாம் மண்ணை போட்டு, தண்ணி போக வழி இல்லாமல் இதுவரைக்கும் இல்லாத அளவில் வடகிழக்கு பருவக்காற்றுக்கு ஒரு பெருவெள்ளம் தென் மேற்கு பருவக்காற்றுக்கு ஒரு பெருவெள்ளம் கொண்டுவந்து சாதனை பண்ணிருக்காரு ..

Rate this:
மேலும் 22 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X