'போலீசை மிரட்டியது நான் தான்': முலாயம் சிங் யாதவ் ஒப்புதல்

Added : ஆக 16, 2018 | கருத்துகள் (51)
Advertisement
Mulayam Singh Yadav, Amitabh Thakur IPS,Uttar Pradesh, முலாயம், முலாயம் சிங் யாதவ், அமிதாப் தாக்கூர் ஐபிஎஸ்,முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ், லோக் ஆயுக்தா,அமைச்சர் காயத்ரி பிரஜாபதி,  அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேசம் Mulayam ,  former Chief Minister Mulayam Singh Yadav, Lok Ayukta, Minister Gayatri Prajapati, Akhilesh Yadav,

லக்னோ : ஐ.பி.எஸ்., அதிகாரி அமிதாப் தாக்கூருக்கு மிரட்டல் விடுக்கும், 'ஆடியோ'வில் இருப்பது, தன் குரல் தான் என, உ.பி., முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

உ.பி.,யில், 2015ல், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சியின் அமைச்சர் காயத்ரி பிரஜாபதி, முறைகேடாக சொத்து சேர்த்ததாக, ஐ.பி.எஸ்., அதிகாரி அமிதாப் தாக்கூர், லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதைய முதல்வர் அகிலேஷ் யாதவின் தந்தையும், முன்னாள் முதல்வருமான, முலாயம் சிங் யாதவ், தன்னை தொலைபேசியில் அழைத்து மிரட்டியதாக, ஐ.பி.எஸ்., அதிகாரி அமிதாப் தாக்கூர், போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த போலீசார், முலாயம் மீது தவறு எதுவும் இல்லை என கூறி, 2015ல் வழக்கை முடித்து வைத்தனர்.

இது தொடர்பாக, உ.பி., நீதிமன்றத்தில், அமிதாப் தாக்கூர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, போலீசார் மீண்டும் விசாரிக்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, விசாரணை அதிகாரி குமார், சமாஜ்வாதி தலைவர் முலாயமின் குரல் மாதிரியை பதிவு செய்வதற்காக, கடந்த, 4ல், அவரது வீட்டுக்கு சென்றார்.

அப்போது, தன் குரலை பதிவு செய்ய, முலாயம் மறுத்தார். மேலும், அமிதாப் தாக்கூர் தாக்கல் செய்த ஆடியோவில் இருப்பது, தன்னுடைய குரல் தான் என, முலாயம் ஒப்புக் கொண்டதாக, விசாரணை அதிகாரி தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
22-ஆக-201816:33:25 IST Report Abuse
RAMESH No wondering for his behavior.. he was put invalid vote in president election....
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
17-ஆக-201802:29:56 IST Report Abuse
mindum vasantham மாயாவதி கூட பரவாயில்ல சட்டம் யங்கையாவது சரி செய்வர், இவர் கட்சி எதற்கு இன்னும் உயிருடன் இருக்கிறது என்று தெரியவில்லை அளித்து விடுவது நல்லது ,அஃகிலேஷ் யாதவ் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் ஒரு ரவுடி போல் வந்தார்
Rate this:
Share this comment
Cancel
prem - Madurai ,இந்தியா
16-ஆக-201817:30:48 IST Report Abuse
prem இது என்னுடைய மனசாட்சிக்கும் நான் வணங்கும் இறைவனுக்கும் தெரிந்த உண்மை....கிறிஸ்தவன் ஒருவன் தன்னை எந்த சூழ்நிலையிலும் ( அவர் எந்த சாதியாயிருந்தாலும் ) கிறிஸ்தவன் என்றே சொல்லிக்கொள்கிறார்.... ஒரு முஸ்லிமும் தன்னை முஸ்லிமாகவே சொல்ல நிர்ப்பந்திக்கிறார்.... எனக்கு தெரிந்து எங்கள் பகுதியில் ஒரு இஸ்லாமிய மதகுரு இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் ஒவ்வொருவரையும் அவரவர் சாதியின் பெருமை (இல்லாத) களை சொல்லி சொல்லி வருவார்.... அவர்களை இந்துக்கள் என்றே சொல்வதில்லை. சாதியாகத்தான் பிரித்து சொல்லுவார்... எனது சிறுவயதில் இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தம் தெரியாமல் இருந்தது... இப்போது தான் அதன் அர்த்தத்தை தெரிந்துகொண்டு விட்டேன்... இது இந்துக்களை சாதிரீதியாக பிரித்து பலவீனப்படுத்தும் செயல் என்று... ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல..... கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பலம் பெற்றது இப்படித்தான்.... சபிக்கப்பட்ட இந்துக்கள் எப்போது தான் புரிந்து கொண்டு சாதியை புறந்தள்ளி இந்துக்கள் என்ற ஒருகுடையின் கீழ் இணைவார்களோ....?
Rate this:
Share this comment
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
16-ஆக-201819:04:21 IST Report Abuse
கல்யாணராமன் சு.கிறிஸ்தவர்களிலும் நாடார் கிறிஸ்தவர், தலித் கிறிஸ்தவர் என்று ஜாதியை கொண்டுவந்துவிட்டார்கள். இதை தவிர கத்தோலிக்கர், பிராட்டஸ்டன்ட், presbyterian, போன்ற நம்பிக்கை சார்ந்த பிரிவுகள் கிறிஸ்தவ மதத்திலும் வந்துவிட்டன. இஸ்லாம் மாதத்தில் நிறைய பிரிவுகள் உண்டா என்று எனக்கு தெரியவில்லை..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X