கலாமை தேர்வு செய்தது எப்படி| Dinamalar

கலாமை தேர்வு செய்தது எப்படி

Updated : ஆக 16, 2018 | Added : ஆக 16, 2018 | கருத்துகள் (16)
Advertisement
 கலாமை, தேர்வு,செய்தது,எப்படி

சரியான நேரத்தில் சரியான நபரை தேர்வு செய்ததின் மூலம் ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் வாஜ்பாய் தனது அரசியல் ராஜ தந்திரத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் முதல் குடிமகனாக அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் ஏற்க கூடிய வேட்பாளராக, அணு விஞ்ஞானி அப்துல் கலாமை அறிவித்த பெருமை வாஜ்பாயை சேரும்.

காங். கட்சியையும், இவ்விஷயத்தில் வென்ற வாஜ்பாய், கம்யூனிஸ்ட்கள், ம.ஜ.த., சமாஜ்வாடி கட்சிகள் அடங்கிய மக்கள் கூட்டணியையும் தம் பக்கம் ஈர்த்தார். நாட்டின் மிகப்பெரிய விஞ்ஞானி அப்துல்கலாம் என்பதால், நமது ராணுவத்தின் பலம், பலவீனம் பற்றி நன்கு அறிந்தவர். இக்கட்டான சூழ்நிலைகளின் தன்னிச்சையாக விரைவாக முடிவெடுக்க தயங்க மாட்டார் என்று அப்போது கருதப்பட்டது.

தமிழகத்தில் தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் எப்போதும், எந்த பிரச்னையிலும் எதிரெதிராகவே முடிவெடுக்கும். ஆனால், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதோடு அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியவர் என்பதால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒருமித்து அப்துல்கலாமை ஆதரித்தனர். இதற்கு வாஜ்பாயின் வேட்பாளர் தேர்வுதான் காரணம். இவரது நடவடிக்கை பா.ஜ., இந்துத்வாவை கடைபிடிக்கும் கட்சி என்ற எதிர்கட்சிகளின் கூச்சலை ஒடுக்கியது.

வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
22-ஆக-201804:47:14 IST Report Abuse
J.V. Iyer நல்லவர்கள் நல்லவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அறிவாளிகள் அறிவாளிகளைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். தேச பக்தி உடையவர்கள் தேச பக்தி உடையவர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். இப்போதும் நாட்டிற்கு நல்லது வேண்டும் என்றுதான் பாஜகவை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Hari Sankar Sharma - Chennai,இந்தியா
17-ஆக-201818:19:26 IST Report Abuse
Hari Sankar Sharma அப்படிப்பட்டவரைக் கலகம் என்றவருக்கு எப்படி பாரத ரத்னா கேட்கிறார்கள்?
Rate this:
Share this comment
Cancel
Mannan - Madurai,இந்தியா
16-ஆக-201820:37:36 IST Report Abuse
Mannan ரெண்டாவது முறை கலாம் ஜனாதிபதியாக வரவேண்டுமென இந்தியாவே விரும்பிய போது, அதனை கெடுத்தது காங்கிரஸ்.
Rate this:
Share this comment
G.Krishnan - chennai,இந்தியா
17-ஆக-201812:02:23 IST Report Abuse
G.Krishnanகெடுத்தது காங்கிரஸ் மட்டுமல்ல . . . . . .தமிழ் தமிழ் என்று உதட்டளவில் பேசி . . .. .தமிழகத்தின் தன்னிகரில்லா அப்பழுக்கற்ற ஒரு தமிழனை மறுபடியும் வரவிடாமல் சதி செய்த . . . தமிழக அரசியல் கட்சி தலைவர் யார் என்பது சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை . . . . . . .அது உள்ளங்ககை நெல்லிக்கனி...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-ஆக-201812:30:03 IST Report Abuse
Nallavan Nallavanதிமுக -வும் கூடத்தான் .... "கலாம் என்றால் கலகம்" என்றார்கள் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X