கண்மாய்களுக்கு செல்லாமல் கடலுக்கு செல்கிறது தாமிரபரணி; அதிகாரம் இல்லாத அதிகாரிகளால் வீணாகும் 'திரவ தங்கம்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'திரவ தங்கம்'
கண்மாய்களுக்கு செல்லாமல்
கடலுக்கு செல்கிறது தாமிரபரணி
அதிகாரம் இல்லாததால் வீணாகும் 'திரவ தங்கம்'

திருநெல்வேலி : தாமிரபரணியில் வெளியேறும் வெள்ளநீர் வறட்சி பகுதிகளுக்கு திருப்பிவிடப் படாமல் வீணாக கடலுக்கு செல்கிறது. இதற்கான அதிகாரம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் புலம்புகின்றனர்.

கண்மாய்களுக்கு,செல்லாமல்,கடலுக்கு,செல்கிறது,தாமிரபரணி,அதிகாரம், இல்லாத, அதிகாரிகளால், வீணாகும் ,திரவ தங்கம்


கேரளத்தில் பெய்துவரும் பருவமழையின் தாக்கம் நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் உள்ளது. கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் மாவட்டத்தில் முக்கிய அணைகள் அனைத்தும் நிரம்பிவருகின்றன.

பாபநாசம் அணை நீர்மட்டம் 141 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் 4 ஆயிரம் கனஅடி தண்ணீரும் வெளியேற்றப் படுகிறது.156 அடி உயரமுள்ள சேர்வலாறு அணை 147 அடியாக பராமரிக்கப்படுகிறது. அங்கிருந்து 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணியில் வெளியேற்றப்படுகிறது.

கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளும் நிறைந்து அவற்றில் இருந்து சுமார் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

தொடர்ந்து மழை பெய்துவருவதால் காட்டாற்று வெள்ளமும் தாமிரபரணியில் கலக்கிறது. இதனால் தாமிரபரணியில் 20 ஆயிரம் கனஅடி செல்கிறது. ஒரு நாளில் 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றால் அது ஒரு டிஎம்சியாக கணக்கிடபடுகிறது.

தற்போது இரண்டு தினங்களாக 20 ஆயிரம் கனஅடிவீதம் வெளியேறுவதால் 3 டிஎம்சி வரை வீணாக கடலுக்கு சென்றுள்ளது வறண்ட குளங்கள்இருப்பினும் நெல்லை, துாத்துக்குடி மாவட்ட குளங்கள் வறண்டு கிடக்கின்றன.

தாமிரபரணி வெள்ளநீரை கால்வாய்கள் வழியாக துாத்துக்குடி மாவட்ட குளங்களுக்கும் திருப்பி விடலாம்.ஆனால் துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி வீதம் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதுகுறித்து உடன்குடியை சேர்ந்த குணசீலன் வேலன் கூறுகையில், வெள்ள நீரை சடையநேரி கால்வாய் வழியாக துாத்துக்குடி மாவட்ட குளங்களுக்கு திருப்பிவிடலாம். ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்கால் மூலமாகவும் வறட்சியான நுாற்றுக்கணக்கான குளங்களுக்கு திருப்பிவிடலாம்.

இதுகுறித்து ஏற்கனவே கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளவில்லை என்றார். அதிகாரம் இல்லை பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியது:

Advertisement

முன்பு தண்ணீரை திறந்துவிடுவது, திருப்பிவிடுவது போன்றவற்றை அங்காங்கே உள்ள அதிகாரிகள் முடிவு செய்வர். தற்போது அந்த அதிகாரம் முழுமையும் சென்னைக்கு வழங்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு தகவலையும் அங்கு தெரிவித்து அனுமதி பெற்றே திறந்துவிட முடிகிறது.

இப்பகுதி குளங்களை நிரப்ப 5 ஆயிரம் கன அடி தண்ணீரே போதுமானது. 22 ஆயிரம் கன அடி வீணாக செல்கிறது.முன்பு குளங்கள், நீர் நிலை களை நிரப்புவதற்கு முக்கியத்துவம் தரப்படும். தற்போது அணை நீர்மட்டத்தை உயர்த்து வதற்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் குளங்கள், நீர்நிலைகளுக்கு தண்ணீர் திறப்பதில்லை.

தண்ணீர் திறப்பது குறித்த முடிவு செய்யும் அதி காரத்தைஅந்தந்த பகுதியில் உள்ள பொது பணி துறை பொறியாளர்களுக்கு வழங்கினால் இது போன்ற பிரச்னை தவிர்க்க முடியும், என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jagan - Chennai,இந்தியா
17-ஆக-201821:32:33 IST Report Abuse

jaganjagan நீரை திருப்பி விட்டால் தண்ணி தேங்கும் , மணல் அள்ள முடியாது. எவ்வளவு அதிகாரிகளுக்கு வரும் மாமூல் வருமானம் வீணாகும்..அவர்கள் வாழவாதாரம் (BMW காருக்கு புல் டேங்க் கூட பெட்ரோல் போட முடியாத ஏழைகள்) பற்றி யாரவது யோசிக்கறாங்களே என்பதே இட ஒதுக்கீடு அதிகாரிகளின் கேள்வி

Rate this:
Ramesh Sundram - Muscat,ஓமன்
17-ஆக-201818:30:48 IST Report Abuse

Ramesh Sundram45 % கமிசின் வாங்க அதிகாரம் உள்ளது இந்த கேடு கேட்ட அதிகாரிகளுக்கு முக்கால் வாசி என்ஜினீயர்கள் ரூபாய் கொடுத்து பாஸ் செய்து பிறகு ரூபாய் கொடுத்து வேலைக்கு சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் 2000 ஆண்டிற்கு பிறகு அண்ணா பல்கலை கழகத்தில் படித்த மொத்த என்ஜினீயர்கள் டிகிரி செல்லாது என்று அறிவித்து மீண்டும் தேர்வு எழுத வைக்க வேண்டும் ஒரு பயல் கூட தேற மாட்டான் இது நிச்சயம்

Rate this:
jagan - Chennai,இந்தியா
17-ஆக-201821:29:02 IST Report Abuse

jaganகமிஷன் வாங்குவது உரிமை. 3000 ஆண்டுகளாக எங்களை கமிஷன் வாங்க விடாமல் தடுத்ததால் தான் இப்போ வாங்கி சமூக நீதியை நிலைநாட்டுறோம்...

Rate this:
Hari Sankar Sharma - Chennai,இந்தியா
17-ஆக-201818:16:28 IST Report Abuse

Hari Sankar Sharmaஅப்படி ஒரு அரசு விதி இருந்தால், இன்றைய தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உத்தரவுகளை உடனே பெற முடியாத பொதுப்பணி அதிகாரிகள் பதவி நிக்கம் செய்யப்பட வேண்டும் இதை ஒரு காரணமாகக் குடி தண்ணீரை வீணாக்கும் செயல் தடுக்கப்படவேண்டும்.

Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X