தமிழகத்தில் இன்று(ஆக.,17) பொது விடுமுறை

Added : ஆக 17, 2018 | கருத்துகள் (16)
Advertisement
சென்னை : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக அரசு, இன்று(ஆக.,17) பொது விடுமுறை அறிவித்துள்ளது.முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று இறந்தார். அவரது மறைவையொட்டி, தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, நேற்று
TN,Tamilnadu,தமிழகம்,தமிழ்நாடு,வாஜ்பாய்,மறைவு,விடுமுறை

சென்னை : முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி, தமிழக அரசு, இன்று(ஆக.,17) பொது விடுமுறை அறிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று இறந்தார். அவரது மறைவையொட்டி, தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திற்கும், இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, நேற்று முதல், 22ம் தேதி வரை, மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்டும். மாநிலம் முழுவதும், தேசியக் கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும். அரசு நிகழ்ச்சிகள் எதுவும்நடைபெறாது என்றும், தமிழக அரசு தெரிவித்துள்ளது.


7 நாட்கள் துக்கம் :

வாஜ்பாய் மறைவையொட்டி நாடு முழுவதும் 22ம் தேதி வரை 7 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.


அரை நாள் விடுப்பு:


அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும், அரசு பொதுத்துறை நிறுவனங்களும், டில்லியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் இன்று(ஆக., 17) அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஆக-201811:06:52 IST Report Abuse
a.thirumalai பட்டுகோட்டையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது , அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Rate this:
Cancel
Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா
17-ஆக-201810:09:24 IST Report Abuse
Agni Shiva தனக்கென்று வாழாமல் தான் பிறந்த மண்ணிற்கு வாழ்ந்து மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு சரித்திர புருஷன். இந்த நாடு 1947ல் இருந்து சுமார் 65 ஆண்டுகளாக ஒரு நல்ல சாலை வசதிக்காக காத்திருந்தது. இந்த தங்க மகன் ஆட்சிக்கு வந்த பிறகே அதை கண்டது. இது போன்ற மகான்கள் எல்லாம் 1947 களிலேயே நாட்டின் முதல் பிரதமமந்திரியாக பதவியேற்று இருந்திருந்தால் நாடு இந்நேரம் உலகத்தின் முதல் வல்லரசாக இருந்திருக்கும். ஆனால் என்ன செய்வது இந்தியாவின் துரதிஷ்டம்
Rate this:
Cancel
Anil Kumar - Chennai,இந்தியா
17-ஆக-201810:00:53 IST Report Abuse
Anil Kumar பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதை விட குழந்தைகளுக்கு அந்த தலைவர் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கூறி பிறகு விடுமுறை விடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X