எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

கேரள மக்களுக்கு உதவுவோம் வாசகர்களே!

Updated : ஆக 18, 2018 | Added : ஆக 17, 2018 | கருத்துகள் (167)
Share
Advertisement
தினமலர் இணையதள வாசகர்களே, தொழில் அதிபர்களே, வர்த்தகர்களே, அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே! உங்களுக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள்நமக்கு அருகில் உள்ள கேரள சகோதர்களும் சகோதரிகளும், கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மொட்டை மாடிகளிலும் மேடான பகுதிகளிலும் குடிநீர், உணவு இன்றி தவிக்கிறார்கள். குழந்தைகள், முதியவர்களின் நிலைமை இன்னும்
கேரளா, தினமலர், வாசகர்கள்

தினமலர் இணையதள வாசகர்களே, தொழில் அதிபர்களே, வர்த்தகர்களே, அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே! உங்களுக்கு ஓர் தாழ்மையான வேண்டுகோள்

நமக்கு அருகில் உள்ள கேரள சகோதர்களும் சகோதரிகளும், கடும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் மொட்டை மாடிகளிலும் மேடான பகுதிகளிலும் குடிநீர், உணவு இன்றி தவிக்கிறார்கள். குழந்தைகள், முதியவர்களின் நிலைமை இன்னும் மோசம்.

அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளாவை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்போர் தங்களால் முடிந்த உதவிகளை, தங்களால் செல்ல முடியும் வாகனத்தில் எடுத்து சென்று, நேரடியாக உதவிகளை கொடுங்கள். குடிநீர் பாக்கெட், பிரட், பிஸ்கட், போர்வை, மருந்து, உணவு பொருட்கள் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழக அரசும் கேரளாவுக்கு படகுகளையும் மீட்பு படையையும் அனுப்பி உதவி செய்ய வேண்டும்.

இடுக்கியில் வீடுகளை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் உணவின்றி தவித்து வருகின்றனர். பலர் மொட்டைமாடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தினமலர் இணையதள வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள சகோதரர், சகோதரிகளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம். கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மக்கள் தங்களால், முடிந்த உணவு, உடை போன்ற பொருட்களை வாகனத்தில் எடுத்து சென்று, நேரடியாக உதவிடுங்கள். குடிநீர் பாக்கெட், பிரட், பிஸ்கட், போர்வை, மருந்து, உணவு பொருட்கள் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த நேரத்தில் செய்யும் சிறு உதவி கூட, பெரிதாக மதிக்கப்படும். எனவே, முடிந்த உதவிகளை செய்வோம். நமது மனிதாபிமானத்தை காட்டுவோம்.

இந்த நேரத்தில் செய்யும் சிறு உதவி கூட, பெரிதாக மதிக்கப்படும். எனவே, முடிந்த உதவிகளை செய்வோம். நமது மனிதாபிமானத்தை காட்டுவோம்.

Advertisement
வாசகர் கருத்து (167)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
19-ஆக-201811:15:28 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி பாலக்காட்டுக்காரன் சினிமாவுக்குள் நுழஞ்சது கன்னியாகுமரிக்காரன் மூலமாத்தான்...
Rate this:
Cancel
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
18-ஆக-201821:27:21 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் கிருஸ்தவ அமைப்புக்கள் உதவுகின்றன.சர்ச்சுக்களில் தங்கவைத்து உள்ளார்களாம்.
Rate this:
Cancel
B Srinivasan - trichy,இந்தியா
18-ஆக-201819:55:25 IST Report Abuse
B Srinivasan கேரளா மாநிலத்தின் வெள்ளம் ஏற்படுத்திய வலியை விட அவர்களுக்கும் நமக்கும் உள்ள பகை வலி அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு பண்பாடு தெரியாது அது உண்மை அவர்கள் ஊரிலிருந்து வரும் ரயிலில் கூட இதை கவனிக்கலாம் அவர்கள் ஊரில் நம் உணவு சாப்பிட ஹோட்டல் போனால் கூட விரோதமாக நடத்துவார்கள் அதுவும் உண்மை நம் ஊர் பெண்களை கேவலப்படுத்துவார்கள் அதுவும் இந்த மாநிலமே அறியும் . இந்த உதவும் விஷயத்தை இதோடு முடிப்பது நல்லது. அல்லது துவேஷம் அதிகமாகும். மொத்த வெள்ளத்தையும் மறந்து இப்போது முல்லைப்பெரியாறு பற்றி பேசுகிறவன் அதனால் தான் வெள்ளமே என்று மக்களை திசைதிருப்புகிறவன் நல்லவனா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X