பதிவு செய்த நாள் :
தண்ணீரில் தத்தளிக்கிறது கடவுளின் தேசம்
கேரளாவில் மழை, வெள்ளத்துக்கு 324 பேர் பலி

திருவனந்தபுரம்:கேரளாவில் பெய்து வரும் கன மழைக்கு, நேற்று முன்தினம் மட்டும், 106 பேர் பலியாகி உள்ளனர். கடந்த, 10 நாட்களில், 324 பேர் பலியாகி உள்ளதாக, மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து, பல கிராமங்கள் துண்டிக்க பட்டு உள்ளதால், அங்கு வசிப்பவர்களின் கதி பற்றிய விபரங்கள் தெரியவில்லை.

 தண்ணீரில் ,தத்தளிக்கிறது ,கடவுளின் ,தேசம்,   கேரளாவில் மழை, வெள்ளத்துக்கு, 324 பேர், பலி


கேரளாவில், 15 நாட்களாக, கனமழை பெய்து வருகிறது.மாநிலம் முழுவதும் உள்ள எல்லா அணைகளும், முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து, தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக, ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. கேரளா முழுவதும், வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில், நில சரிவு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை, முற்றிலும் பாதிக்கப்பட்டது.

மீட்புப் பணி


பல மாவட்டங்களிலும், வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வீட்டுக்குள் சிக்கி தவித்து வருகின்றனர். முதியவர்களும், குழந்தைகளும் உணவு, தண்ணீர், மருந்துகள் இன்றி தவிக்கின்றனர்.எர்ணாகுளம் மற்றும் பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில், நேற்று முன் தினம், வெள்ளத்தில் சிக்கிய, 3,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நேற்று முன் தினம் மட்டும், 106 பேர், மழை, வெள்ளத்தில் சிக்கி உயிர் இழந்ததாக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த, 10 நாட்களில் மட்டும், 324 பேர் பலியாகி உள்ளனர்.திருச்சூர், பத்தினம்திட்டா, எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்கள், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. அங்கு, ராணுவம், கப்பல் மற்றும் விமானப் படை வீரர்கள், மீட்புப் பணியில் துரிதமாக செயல்பட்டனர்.

முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தவிக்கும் பெண்கள், முதலில் மீட்கப்பட்டனர். ஆலுவா, காலடி, பெரும்பாவூர், மூவாட்டுப்புழா மற்றும் சாலக்குடி ஆகிய இடங்களில், நேற்று மீட்புப்பணிகள் நடந்தன. அப்பகுதி மீனவர்கள், தங்கள் படகுகளுடன் வந்து, மீட்பு பணியில் உதவினர்.

தத்தளிப்புதேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த, 540 வீரர்கள், 12 குழுக்களாக பிரிந்து, புதிதாக களத் தில் இறங்கி உள்ளனர். மாநிலம் முழுவதும்,

ரயில் மற்றும் சாலை போக்கு வரத்து முற்றிலு மாக நிறுத்தப்பட்டுள்ளது.மாநிலம் முழுவதும் மழை, வெள்ளத்தால், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்கள், 1,500 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

கொச்சி சர்வதேச விமான நிலையம், வரும், 26 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொச்சி, 'மெட்ரோ' ரயில் போக்குவரத்து மட்டும், தற்போது வரை இயங்கி வருவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கேரள வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மழை பெய்து வருவதால், மாநிலத்தின் பெரும் பாலான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. சாலை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உருக்குலைந்து உள்ளன.மழை நின்ற பின் தான், சேதத்தை மதிப்பிடும் பணி நடக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதி சடங்கில் பங்கேற்ற பின், நேற்று இரவு கேரளா புறப்பட்டு வந்தார்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் அதிகம் விரும்பும் சுற்றுலா தலமாக கேரளா திகழ்கிறது. இதனால், கேரளாவை, 'கடவுளின் தேசம்' என, அந்த மாநில மக்கள் பெருமையுடன் கூறுவது வழக்கம். இத்தகைய பெருமைக்குரிய கேரளா, தற்போது தண்ணீரில் தத்தளிக்கிறது.

மூட்டை சுமந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்!


கேரளாவில், ராணுவம், கப்பல் மற்றும் விமானப் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்களை தவிர, அம் மாநிலத்தைச் சேர்ந்த, சில, ஐ.ஏ.எஸ்., அதிகாரி களும், நிவாரண பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.

கேரள மாநில உணவு பாதுகாப்பு துறை கமிஷனர், ராஜமாணிக்கம், வயநாடு துணை கலெக்டர் உமேஷ், பத்மநாபபுரம் துணை கலெக்டர், ராஜகோபால் ஆகியோர், லாரிகளில் வந்து இறங்கிய அரிசி மூட்டைகளை, முதுகில் சுமந்து இறக்கி வைத்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின.

முல்லை பெரியாறு அணைநீர் மட்டத்தை குறைக்க மனு


முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க கோரி, கேரளாவைச் சேர்ந்த ரசூல் ஜாய் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமைநீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதி சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

முல்லை பெரியாறு நீர்மட்டத்தை, 142 அடியில் இருந்து, 139 அடியாக குறைப்பது குறித்து, அணையின் துணை கண்காணிப்பு குழுவும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும், கலந்து ஆலோசித்து முடிவெடுக்க, உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.மேலும், இந்த குழுக்கள் எடுக்கும் முடிவை,

Advertisement

கேரளா மற்றும் தமிழக அரசுகள் மதிக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் தெரிவித்தனர்.

மூணாறில் நிலச்சரிவு: 6 பேர் பலி


கேரளா, இடுக்கி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா நகரமான மூணாறில், வரலாறு காணாத அளவில் கன மழையும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. அதனால், மூணாறை இணைக்கும் முக்கிய சாலை களும், பாலங்களும் சேதமடைந்து, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. மூணாறு மற்றும் தேவிகுளம் ஆகிய பகுதி களில் ஏற்பட்ட நிலச்சரிவில், நேற்று முன் தினம், ஆறு பேர் பலியாகினர். மூணாறு சுற்றி யுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில், தொழிலாளர் குடியிருப்புகள் பெருமளவில் சேதமடைந்தன. அவர்கள் நிவாரண முகாம் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திக்கு தெரியாமல் தவிக்கும் வயநாடு மக்கள்


கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், பாணாசுரா சாகர் அணை, ஆக., 6ல் திறக்கப் பட்டு, சராசரியாக, 1,600 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வயநாடு செல்லும் முக்கிய சாலைகள், முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளன. தேயிலை தோட்டங்களில் இருந்து, 60 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வயநாட்டில் இதுவரை, 209.19 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

கொட்டி தீர்க்கும் மழையால், பொதுமக்கள் காப்பாற்றப்பட்டபோதும், இவர்கள் வளர்த்த கால்நடைகள், ஆயிரக்கணக்கில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன.

கூடுதல் வீரர்களை அனுப்ப உத்தரவு


பலத்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள, கேரள மாநிலத்திற்கு கூடுதல் வீரர்களை அனுப்ப, அனைத்து பாதுகாப்பு படை பிரிவு களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கேரள மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிக்க, மத்திய அமைச்சரவை செயலர், பி.கே.சின்ஹா தலைமையில், தேசிய பேரிடர் மேலாண்மை குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.

அந்த கூட்டத்தில்,ராணுவம்,கடற்படை, விமான படை, கடலோர காவல் படை, எல்லைப் பாதுகாப்பு படை, தேசிய பேரிடர் மீட்புக் குழு உள்ளிட்ட பாதுகாப்பு படைகள், கேரள மாநிலத்தில், வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில், மீட்புப் பணியை மேற் கொள்ள,கூடுதல் வீரர்களை அனுப்ப வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் அடுத்த கூட்டம், இன்று நடக்க உள்ளது.

சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை


எர்ணா குளம் மாவட்டம், ஆலுவா என்ற இடத்தில், நேற்று காலை, வெள்ளத்தில் சிக்கி, கர்ப்பிணி ஒருவர் தவிப்பதாக, மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது.மீட்புபடையினர் ஹெலிகாப்டரில் விரைந்தனர். வெள்ளம் சூழ்ந்திருந்த அந்த வீட்டுக்குள்,மீட்பு படையினர் இறங்கினர். அங்கு, சஜிதா ஜெபீல்,25, என்ற கர்ப்பிணி, வலியில் துடித்தபடி இருந்தார்.அவரை மீட்டு, ஹெலிகாப்டர் மூலம்,எர்ணாகுளம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அடுத்த சில நிமிடங்களில், சஜிதாவுக்கு, சுகப் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஆக-201822:37:29 IST Report Abuse

Pugazh V@Natarajan Ramanathan - chennai,:: கேரளவை ஏன் கடவுளின் தேசம் என்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள். :: பரசுராமர் நாடு முழுவதும் சுற்றி பல கொலைகள் செய்தபின் அந்த பாவம் போக்க கடவுளை வேண்டிய போது, கடவுள் சொன்னார், "பரசுராமா, கொலைகள் புரிந்த உன் கோடரியை கடலில் வீசிவிட்டு அது உருவாக்கும் நிலப்பரப்பில் அமர்ந்து தவம் செய்தால் உன் பாவம் போகும் என்று அருளினார். அப்படி கடவுள் பரசுராமர் மூலமாக உருவாக்கிய நிலப்பரப்பு தான் கேரளா."" அதனால் தான் இதை கடவுளின் தேசம் என்கிறார்கள். சாத்தான் கடவுள் அளவுக்கு பலசாலி படைப்பாளி என்று நீங்களே சொல்லி விடாதீர்கள், அது தப்பு தெய்வ நிந்தனை. // நன்றி

Rate this:
Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
18-ஆக-201819:58:27 IST Report Abuse

RajeshKerala is no more gods own country.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
18-ஆக-201814:41:13 IST Report Abuse

Natarajan Ramanathanகேரளம் சைத்தான்களின் தேசம்....கடவுளின் தேசம் அல்ல.

Rate this:
kum - paris,பிரான்ஸ்
18-ஆக-201820:16:59 IST Report Abuse

kumஇங்கே ஒரு பாகிஸ்தான் காரன் தமிழில் எழுதுகிறான் ...

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X