ராஜினாமா! விசாரணை கமிஷன் தலைவர் பதவியை உதறினார் ரகுபதி Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ராஜினாமா!
தலைவர் பதவியை உதறினார் ரகுபதி
மக்கள் பணம் வீணாவதாக கூறியதால் அதிருப்தி

சென்னை:புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து, விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட, விசாரணை கமிஷன் தலைவர் பதவியிலிருந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி, நேற்று ராஜினாமா செய்தார்.

விசாரணை, கமிஷன், தலைவர்,பதவியை,உதறினார்,ரகுபதி ராஜினாமா! மக்கள்,வரிப்பணம்,வீணாவதாக,கூறிய,கருத்தால் அதிருப்தி


தி.மு.க., ஆட்சியில், சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க, 2011 ஜூன், 22ல், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.


அதன் தலைவராக, ஓய்வுபெற்ற நீதிபதி தங்கராஜ் நியமிக்கப்பட்டார். அவர், நவம்பரில் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி, விசாரணை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டார். கமிஷன் சார்பில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின், முதன்மைச் செயலர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு, 'சம்மன்' அனுப்பப் பட்டது.அதை ரத்து செய்யக் கோரி, அவர்கள் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2015ல், ரகுபதி விசாரணைக்கு தடை விதித்தது.

இடைக்கால மனுதடையை நீக்கக் கோரி, கமிஷன் சார்பில் தொடரப்பட்ட, இடைக்கால மனு, மூன்று ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில், உயர் நீதிமன்ற நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, இழுத்தடிக் கும் விசாரணை கமிஷன்கள் தொடர்பாக, சில கருத்துகளை, நீதிபதி தெரிவித்தார். அத்துடன், அவர் பிறப்பித்த உத்தரவு:விசாரணை கமிஷன் செயல்பாடுகளை நிறுத்தி வைக்க, தமிழக அரசு

உத்தரவிட வேண்டும். கமிஷனுக்கு வழங்கப் படும் நிதி மற்றும் இதர சலுகைகளை நிறுத்த வேண்டும்.


விசாரணை கமிஷன்கள், இதுவரை நடத்திய விசாரணை குறித்த அனைத்து ஆவணங்களையும், தமிழக அரசிடம், 2 வாரத்திற்குள் ஒப்படைக்க வேண்டும்.தற்போது, செயல்பாட்டில் உள்ள மற்ற விசாரணை கமிஷன்களையும் ஆய்வு செய்து, அவை தேவையா என்பதை, தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், விசாரணை கமிஷன் தலைவராக இருந்த, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி, தன் பதவியை ராஜினாமா செய்து, ஆக., 13ல், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு, தற்போது கடிதம் அனுப்பி உள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து அறிய, கட்டட வடிவமைப்பு, அடித்தள வடிவமைப்பு, கட்டுமானத்தின் தரம், பொருட்கள் பயன்பாடு, அவற்றின் விலை என, பலவற்றை ஆராய வேண்டி இருந்தது.


இது தொடர்பாக, 110 பேரிடமிருந்து, பிரமாண வாக்குமூலம் பெறப்பட்டது.அரசு நிதி ஒதுக்கியது, 'டெண்டர்' விட்டது உட்பட, 1,000 பக்கங்கள் உடைய, அரசு ஆவணங்கள் பெறப்பட்டன. இதில், சம்பந்தப் பட்ட பொதுப்பணித் துறை பொறியாளர்கள் உட்பட பலருக்கு, சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் விசாரணைக்கு ஆஜராகி, விளக்கம் அளித்தனர். புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்ட நேரத்தில், முதல்வராக இருந்த கருணாநிதி,துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன் ஆகியோருக்கும், சம்மன் அனுப்பப்பட்டது.

முயற்சி வீணாகியதுஅவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றனர். தடையை நீக்கக் கோரி, 2015, ஆக., 27ல், கமிஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. பல முறைமுயற்சித்தும், அது வீணாகியது.இந்நிலையில், திடீரென தடையை நீக்கக் கோரிய மனு, நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

'கமிஷன் அமைப்பதால், பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது. விசாரணை கமிஷன்

Advertisement

தலைவராக நியமிக்கப்படும், ஓய்வுபெற்ற நீதிபதிகள்,ஒருதலைபட்சமாக செயல்படு கின்றனர். 'ஓய்வுபெற்றதும், நீதிபதிகள் வேறு பதவிகளை தேடி ஓடுகின்றனர்' என, எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல், அவர் கூறியது தவறானது. அவரது கருத்துகள், தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளன. விசாரணை கமிஷனில், செயலர் மற்றும் ஒன்பது ஊழியர்கள் உள்ளனர். விசாரணை முடிவில், ஐந்து பேர் தவிர, மற்றவர்கள், அவர்கள் பணிபுரிந்த துறைக்கு அனுப்பப் பட்டனர்.

கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்ட பின், 2011 - 2015 வரை, ஒரு நாள் விசாரணைக்கு, 6,000 ரூபாய் ஊதியம் பெற்றேன். மாதத்திற்கு, 13 நாட்களை தாண்டியதில்லை; மாத சம்பளம் பெறவில்லை. மக்கள் வரிப்பணம் எதுவும் வீணடிக்கப்படவில்லை.விசாரணை கமிஷன், சில பணிகளை விரைவாக முடித்துள்ளது. நான், எவ்வித ஊதியமும் பெறாமல், மவுலி வாக்கம் கட்டட விபத்தில், 65 தொழிலாளர்கள் இறந்தது தொடர்பான விசாரணையை, 45 நாட்களுக்குள் முடித்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம், அறிக்கை சமர்ப்பித்தேன்.

புதிய தலைமைச் செயலக முறைகேடு விசாரணை தாமதமானதற்கு, நான் காரணம் அல்ல. பல முறை தடையை நீக்கக் கோரி முறையிட்டும், நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுக்க வில்லை.அதன் காரணமாகவே, தாமதம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொள்ளாமல், நீதிபதி கருத்து தெரிவித்துஉள்ளார். அவர் கருத்து வருத்தம் அளிக்கிறது.எனவே, என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.எனக்கு அரசு வழங்கியிருந்த, பழைய,'இனோவா' கார், 'கம்ப்யூட்டர், பிரின்டர்' ஆகியவற்றை,அரசிடம் ஒப்படைத்துள்ளேன். என் டிரைவரையும், பணியிலிருந்து விடுவித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-ஆக-201821:21:29 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்//என் பதவியை ராஜினாமா செய்கிறேன்.எனக்கு அரசு வழங்கியிருந்த, பழைய,'இனோவா' கார், 'கம்ப்யூட்டர், பிரின்டர்' ஆகியவற்றை,அரசிடம் ஒப்படைத்துள்ளேன். என் டிரைவரையும், பணியிலிருந்து விடுவித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.// இம்புட்டு வருஷம் வெட்டியா வாங்குன சம்பளத்தையும் திருப்பி கொடுத்தா நல்லவன்னு நான் ஒத்துக்குறேன்.

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
20-ஆக-201805:45:25 IST Report Abuse

Darmavanஇதுவரை வேலையில்லாமல் இருந்தது அவர் தவறல்ல. கோர்ட்டின் முட்டுக்கட்டையால்....

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-ஆக-201821:19:12 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்யாருமே இல்லாத கடையிலே டீயை ஆத்திக்கிட்டு, நோகாமே நொங்கை நின்னுக்கிட்டு இருந்தாரு.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
18-ஆக-201821:17:08 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்"வட போச்சே" போஸ் அமர்க்களம்..

Rate this:
மேலும் 79 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X