பரமக்குடி பஸ்சில் பயணம் செய்த வாஜ்பாய்: மலரும் நினைவுகளுடன் மாஜி கண்டக்டர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடி பஸ்சில் பயணம் செய்த வாஜ்பாய்: மலரும் நினைவுகளுடன் மாஜி கண்டக்டர்

Updated : ஆக 18, 2018 | Added : ஆக 17, 2018 | கருத்துகள் (10)
Advertisement
பரமக்குடி,பஸ்சில், பயணம், செய்த,வாஜ்பாய்,மலரும் நினைவுகளுடன்,மாஜி,கண்டக்டர்

பரமக்குடி, 1983 ல் ராமேஸ்வரம் சென்று திரும்பிய வாஜ்பாய் திருப்புவனத்தில் இருந்து மதுரை வரை அரசு பஸ்சில் பயணம் செய்தார். அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற கண்டக்டர் ராமச்சந்திரன், 60.அவரது மலரும் நினைவுகள்:

நான் 1980ல் பாண்டியன் போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக சேர்ந்தேன். 1983ல் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாள் மாலை 5:35 மணி இருக்கும். பரமக்குடியில் இருந்து மதுரை சென்ற பஸ்சில் (டி.எம்.என். 5800) பணியில் இருந்தேன். பார்த்திபனுார் டிரைவர் பாலுச்சாமி ஓட்டினார். 6:45 மணிக்கு திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பஸ் சென்றது.

கன மழையால் ரோட்டில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியது. எதிரில் வரும் வாகனங்கள் தெரியவில்லை. அப்போது வெள்ளை உடையில் நின்ற சிலர் பஸ்சை நிறுத்துமாறு கை காட்டினர். நான் பஸ்சை நிறுத்த சொன்னேன்.அங்கு பழுதாகி நின்ற காரில் வந்த ஐந்து பேரை பஸ்சில் ஏற்றிக் கொண்டோம். பிறகுதான் தெரிந்தது வந்தவர்கள் பா.ஜ., தலைவர்கள் வாஜ்பாய், ஜனாகிருஷ்ணமூர்த்தி என... மழை அதிகம் இருந்ததால் அனைத்து ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தது.

ஜனா கிருஷ்ணமூர்த்தி என்னிடம், ''ராமேஸ்வரத்திற்கு சென்று வருகிறோம். எங்களுடன் வந்த கார்கள் மழையால் நின்று விட்டன. உங்கள் பஸ்சுக்கு முன்னதாக ஐந்து பஸ்களுக்கு கை காண்பித்தோம். யாரும் நிற்கவில்லை,'' என்றார்.பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர். பஸ் மதுரை தெப்பக்குளத்தை அடைந்த போது வாஜ்பாய் சீட்டிற்கு பின்புறம் அமர்ந்திருந்த பெண்ணின் கைக்குழந்தை காற்று வராமல் அழுதது. பஸ் ஜன்னலை வாஜ்பாய் திறந்து விட்டார்.
ரோட்டோரம் வரவேற்பு கொடுக்க காத்திருந்த கட்சியினர் பஸ்சை நிறுத்த கூறினர். அங்கு இருந்த டி.எஸ்.பி., ஒருவர், பஸ்சை மதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லுமாறும், வாஜ்பாய்க்காக ரயில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.மாலை நேரம் என்பதால் மதுரை கீழவாசல் வழியாக பஸ் செல்லாது. எங்களது பஸ்சை மட்டும் அந்த வழியாக அனுமதித்தனர். ரயில்வே ஸ்டேஷனில் வாஜ்பாய் இறங்கியபோது பரபரப்பாகஇருந்தது.

அப்போது நான் ஜனாகிருஷ்ணமூர்த்தியிடம், ''இப்போது தான் பணியில் சேர்ந்துள்ளேன். ஏதேனும் பனிஷ்மென்ட் கொடுத்து விடுவார்களா,'' என கேட்டேன். அவர் வாஜ்பாயிடம் கூறினார்.அதற்கு அவர், ''ஏதாவது பிரச்னை என்றால் ஜனா கிருஷ்ணமூர்த்தியிடம் கூறுங்கள். நான் முதல்வர் எம்.ஜி.ஆரை சந்திக்க செல்கிறேன்,'' எனகூறினார்.

மறுநாள் நாளிதழ்களில், 'பஸ்சில் பத்திரமாக வந்திறங்கிய வாஜ்பாய்' என செய்திகள் வந்தன. அதை பார்த்து வேலைக்கு பிரச்னை வந்து விடுமோ என பயந்தேன்.பரமக்குடி டெப்போ மேனேஜர் ஷாஜகான் என்னை அழைத்தார். 'ஏன் என்னிடம் இதுகுறித்து கூறவில்லை' என கேட்டதுடன், மதுரை மேலாண்மை இயக்குனர் மோகனை சந்திக்குமாறு பணித்தார்.

மறுநாள் அவரை சந்தித்த போது என்னை பாராட்டியதுடன், 'உனக்கு என்ன வேண்டும் கேள்' என கூறினார்.''எனக்கு கிளார்க் வேலை பிடிக்கும்,''என்றேன்.ஆனால் பணி நிரந்தரம் ஆகவில்லை என்பதால் இன்னும் ஆறு மாதம் கழித்து செய்து கொடுப்பதாக கூறினார். ஆனால் அது நடக்க வில்லை. போக்குவரத்து ஆய்வாளர் பணியில் இருந்து 2016 ல் ஓய்வு பெற்றேன். பின்நாளில் வாஜ்பாயை சந்திக்க முயற்சித்தேன். ஆனால் நடக்கவில்லை. வாஜ்பாயுடன் பயணம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அவரது இழப்பு என்னை பாதித்துள்ளது, என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal Krishnasamy - Rajapalayam,இந்தியா
25-ஆக-201800:17:44 IST Report Abuse
Rajagopal Krishnasamy வாஜ்பாயின் புகழ் அவர் மறைந்தாலும் நிலைத்து நிற்கும்
Rate this:
Share this comment
Cancel
Thiyaga Rajan - erode,இந்தியா
21-ஆக-201821:20:50 IST Report Abuse
Thiyaga Rajan நேரில் பார்த்ததுக்கு தலை வணங்குகிறேன்
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
18-ஆக-201821:12:02 IST Report Abuse
TamilArasan உன்னத தலைவர் குறித்த அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X