திருவனந்தபுரம் : கேரளாவில், ராணுவம், கப்பல் மற்றும் விமானப் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஆகியோர், மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை தவிர, அம் மாநிலத்தைச் சேர்ந்த, சில, ஐ.ஏ.எஸ்., அதிகாரி களும், நிவாரண பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவது, மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.
கேரள மாநில உணவு பாதுகாப்பு துறை கமிஷனர், ராஜமாணிக்கம், வயநாடு துணை கலெக்டர் உமேஷ், பத்மநாபபுரம் துணை கலெக்டர், ராஜகோபால் ஆகியோர், லாரிகளில் வந்து இறங்கிய அரிசி மூட்டைகளை, முதுகில் சுமந்து இறக்கி வைத்த புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகின.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement