பாக்., பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு| Dinamalar

பாக்., பிரதமராக இம்ரான்கான் பதவியேற்பு

Updated : ஆக 18, 2018 | Added : ஆக 18, 2018 | கருத்துகள் (16)
Advertisement
பாகிஸ்தான், இம்ரான்கான், பாகிஸ்தான் பொதுத்தேர்தல், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான், தெஹரிக் - இ - இன்சாப், பாகிஸ்தான் பார்லிமென்ட்,  நவ்ஜோத் சிங் சித்து,கபில் தேவ், கவாஸ்கர், Pakistan, Imran Khan, Pakistan General Election, former cricketer Imran Khan, Dehreek-e-Insaaf, Pakistan parliament, Najjot Singh Sidhu, Kapil Dev, Gavaskar,

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இன்று(ஆக., 18) பதவியேற்றார்.


22வது பிரதமர்

பாகிஸ்தானில், சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில், முன்னாள் கிரிக்கெட் வீரர், இம்ரான் கானின், தெஹரிக் - இ - இன்சாப் கட்சி, 116 இடங்களைக் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க, 172 இடங்கள் தேவை என்ற நிலையில், பாக்., பார்லிமென்டில் நேற்று(ஆக.,17) ஓட்டெடுப்பு நடந்தது. சுயேச்சைகள் மற்றும் உதிரி கட்சிகள் ஆதரவுடன், 176 ஓட்டுகள் பெற்று, இம்ரான் கான், பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, பாகிஸ்தானின், 22வது பிரதமராக, இம்ரான் கான், இன்று பதவி ஏற்றார். அவருக்கு, அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


பதவியேற்பு விழாவில் சித்து :


பாக்., பிரதமராக, இம்ரான் கான் பதவியேற்கும் விழாவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான, கபில் தேவ், கவாஸ்கர், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு விழாவில் பங்கேற்க, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான, காங்கிரசைச் சேர்ந்த, நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார்.பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவேத் பஜ்வாவையும் சித்து சந்தித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. V. Ramani Rockfort - Trichy,இந்தியா
18-ஆக-201819:37:18 IST Report Abuse
K. V. Ramani Rockfort முன்னாடி இந்தியாவுக்கு எதிரா கிரிக்கெட் விளையாடினார், இப்போது, இந்தியாவுக்கு எதிராக ராணுவ விளையாட்டு செய்வாரா ?
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
18-ஆக-201816:02:35 IST Report Abuse
Endrum Indian Ball Tampering புகழ் இம்ரான் கான் பாகிஸ்தானுக்கு சரியான பிரதமர்.
Rate this:
Share this comment
Cancel
faiz - colombo,இலங்கை
18-ஆக-201815:15:22 IST Report Abuse
faiz அண்டை வீட்டாருடன் அழகிய முறையில் நடந்து காட்டுங்கள் அருள் கிடைக்கும் எல்லோர்க்கும் . வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X