பாதிப்பு! பலத்த மழையால் கேரள சுற்றுலா துறைக்கு அடி Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பாதிப்பு!
பலத்த மழையால் கேரள சுற்றுலா துறைக்கு அடி
பயண திட்டங்கள் ரத்தாவதால் வருவாய் சரிவு

புதுடில்லி:கேரளாவில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அம்மாநில சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாவுக் காக, விமானங்களிலும், ஓட்டல்களிலும் முன்பதிவு செய்தவர்கள், தங்கள் பயண திட்டங்களை ரத்து செய்ய துவங்கி உள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்கு, கடந்த சில நாட்களாக, கனமழை பெய்து வருகிறது.

 பாதிப்பு!,பலத்த, மழையால், கேரள ,சுற்றுலா, துறைக்கு, அடி


அம்மாநிலத்தில் உள்ள எல்லா அணைகளும், முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து, அனைத்து அணைகளும் திறக்கப்பட்டன. இதனால், கேரளா முழுவதும், வெள்ளத்தில் மூழ்கியது. பலத்த மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற காரணங்களால், 10 நாட்களில் மட்டும், 324 பேர் பலியாகினர்.ராணுவம், கப்பல் மற்றும் விமானப் படை வீரர்கள், தேசிய பேரிடர் மீட்பு படையினர்,மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, கேரள சுற்றுலாதுறை, கடுமை யான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது குறித்து, கேரள சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யும், 'கிளியர் டிரிப்' என்ற தனியார் நிறுவன தலைமை அதிகாரி, பாலு ராமச்சந்திரன் கூறிய தாவது:


கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், அம்மாநில மக்களை மட்டும் அல்லாமல், சுற்றுலா பயணி யரையும் பெரிதும் பாதித்துள்ளது. கேரளாவுக்கு சுற்றுலா வருவதை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் தவிர்த்து வருகின்றனர்.


விமான முன்பதிவுகள் கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளன. ஆகஸ்ட், 10 முதலே, ஓட்டல் முன்பதிவுகளை, சுற்றுலா பயணியர் ரத்து செய்ய துவங்கி விட்டனர்.இந்த மாத இறுதியில், சுற்றுலா வருவதற்காக முன்பதிவு செய்தவர்களில், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர், தங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டனர்.விமானம் மற்றும் ஓட்டல் முன்பதிவுகளை ரத்து செய்யும் வாடிக்கையாளர் களுக்கு, முழு தொகையையும், திருப்பி செலுத்தி வருகிறோம். மேலும், கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள இடங்கள் குறித்து, முன்னெச்சரிக்கையாக அவர்களுக்கு தகவல் அளித்து வருகிறோம்.


சுற்றுலா பயண திட்டங்கள் ரத்தாவதால், சுற்றுலா துறை மட்டுமல்லாமல், கேரள மாநில வர்த்தகத்துக் கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்

Advertisement

கூறினார்.'யாத்ரா டாட் காம்' என்ற சுற்றுலா இணையதள நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஷரத் தால் கூறிய தாவது:இந்த பாதிப்பில் இருந்து,கேரள சுற்றுலா துறை மீண்டு எழ, எத்தனை நாட்கள் ஆகும் என்பது தெரியவில்லை. ஆனால், பயணியர் வருகை, பெரிதும் குறைய தொடங்கி உள்ளது.


அடுத்த மாத பயண திட்டங்களை கூட, பலர் ரத்து செய்து வருகின்றனர்; இது கவலை அளிப்பதாக உள்ளது.வட கேரள பகுதிகளில், வயநாடு உள்ளிட்ட நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த மழையில், வட கேரள பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. எனவே, அங்கு வர மக்கள் அச்சப்படுகின்றனர். இந்த நிலை விரைவில் சீராகும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஆக-201823:16:59 IST Report Abuse

Pugazh Vரிசார்ட்கள் கிறித்தவருடையதாம். இன்னொரு அறிவாளி எழுதறார். நெட்டில் பாருங்கள். 75% ரிசார்ட்களும் இந்துக்களடையது. தக்காளி இதிலுமா மதம் பார்ப்பது. ரிசார்ட் கட்ட முடியாதவர்கள், அல்லது ரிசார்ட் கட்டி போணி ஆகாதவர்கள், இருக்கும் ரிசார்ட்களில் வந்து தங்கி என்ஜாய் பண்ண முடியாதவர்கள் தான் ரிசாட்களை காரணம் காட்டுகிறாரகள். 1250 செ.மீ. மழை, அதுவும் 13 நாட்களில், அதுவும் ஒரு நகரில் அல்ல, மொத்த மாநிலத்திலும். ரிசார்ட்கள் கட்டி னால் இவ்வளவு மழை வருமென்றால், மழையே பெய்யாத நகரங்களில் ரிசார்ட்கள் கட்டலாமா??

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஆக-201823:10:45 IST Report Abuse

Pugazh Vகேரளாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண மனிதர்கள். அவர்கள் த.நாட்டு க்கு தண்ணீர் தருவது பற்றிய முடிவெடுக்கிற பதவிகளில் இல்லை. த.நாடு எப்போது கேரளாவிடம் தண்ணீர் கேட்டது எப்போது கேரளா மறுத்தது?? அறிவற்ற தனமாக எதையாவது எழுதுவதா? முல்லை பெரியார் அணையை திறக்கிற/ மூடுகிற அதிகாரம் த. நாட்டிடம் அல்லவா இருக்கிறது. ஆண்டு முழுவதும் அதில் 110 அடி தண்ணீர் இருக்கும். வேண்டும் போதெல்லாம் திறந்து கொள்ள வேண்டியது தானே. தண்ணீர் பங்கீடு பற்றி ஏதும் அறியாத ஏழை மக்ளை, மீனவர்களை தெய்வம் நின்று கொல்லுகிறதா? என்ன மடத்தனமான கருத்து இது.

Rate this:
Ravi - Danbury,யூ.எஸ்.ஏ
19-ஆக-201821:04:41 IST Report Abuse

Raviதமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் அதிக சம்பளம் வாங்கும் கேரளா நடிகை நயன்தாரா 5 லட்சம் உதவி தமிழ் நடிகர்கள் விஜய்சேதுபதி 25 லட்சம், விக்ரம் 35 லட்சம் உதவி மனிதாபிமானத்தை மதிக்கத்தெரியாதவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து மனிதநேயம்

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X