கேரளாவுக்கு பிரதமர் மோடி முதற்கட்ட நிதி உதவி ரூ.500 கோடி! Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
ரூ.500 கோடி !
கேரளாவுக்கு பிரதமர் மோடி முதற்கட்ட நிதி உதவி
மழை பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

திருவனந்தபுரம்:கேரளாவில், மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பிரதமர் மோடி, ஹெலிகாப்டரில் சென்று, நேற்று பார்வை யிட்டார். முதற்கட்ட நிவாரணமாக, கேரள அரசுக்கு, 500 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

கேரளாவுக்கு, பிரதமர் மோடி, முதற்கட்ட, நிதி உதவி,
 ரூ.500 கோடி!

கேரளாவில், 15 நாட்களாக, கடந்த, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பேய் மழை பெய்து வருகிறது.இதனால், கேரளாவின் அனைத்து அணைகளும், முழு கொள்ளளவை எட்டின. இதையடுத்து, அவை திறந்து விடப் பட்டன. இதனால், மாநிலம் முழுவதும் வெள்ளக்காடானது.


3.14 லட்சம் பேர்


வீடுகளிலும், அடுக்கு மாடி குடியிருப்புகளிலும் சிக்கியவர்கள், உணவு, குடிநீர் மற்றும் மருந்துகளின்றி தவிக்கின்றனர்.முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடன் தவிக்கும் பெண்களை மீட்கும் பணியில், தேசிய மீட்புப் படையினர் துரிதமாக செயல்பட்டு வருகின்ற னர். மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி, இது வரை, 333 பேர் பலியாகி உள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. 3.14 லட்சம் பேர், வீடு களை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.


தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையின ருடன், ராணுவத்தின் முப்படையின ரும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில், கேரளாவின்

வெள்ள பாதிப்பு களை பார்வையிட, பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு, திருவனந்தபுரம் வந்தார். பின், நேற்று காலை, கொச்சி வந்தடைந்தார். இதையடுத்து, வெள்ளத் தால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆலுவா, திருச்சூர் மாவட்டங்களை, ஹெலிகாப்டரில்சென்று பார்வை இட்டார்.கேரள கவர்னர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் அதிகாரிகள், பிரதமருடன் இருந்தனர்.


பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது: வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு, உணவு, மருந்துஉள்ளிட்ட நிவாரண பொருட்கள், உரிய நேரத்தில், விரைவாக கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.


உடைமைகளை இழந்து வாடும் கேரள மக்களுக்கு, காப்பீட்டு தொகையை விரைவில் வழங்க, நடவடிக்கை எடுக்கும்படி, காப்பீட்டு நிறுவனங் களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.பாதிக்கப்பட்ட பகுதி களில் சிறப்பு முகாம்கள் நடத்தவும், விவசாய பொருட்களுக்கான காப்பீட்டு தொகையை விரைவில் வழங்கவும், நடவடிக்கை எடுக்க, பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் மின் இணைப்புகளை உடனடியாக சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.குடிசை வீடுகளை இழந்தவர் களுக்கு, 'பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' திட்டத்தின் கீழ், புதிய வீடுகள் கட்டித்தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


ரூ.2 லட்சம்வெள்ள சேதங்களை பார்வையிட்ட பின், கேரள அரசுக்கு, முதல்கட்ட நிவாரணமாக, ரூ.500 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்தார்.மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா, இரண்டு லட்சம் ரூபாயும்,

Advertisement

காயமடைந்தவர்களுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் வழங்கவும்உத்தரவிட்டார்.இது குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், குறிப்பிட்டுள்ள தாவது:மழை வெள்ளத்தால்,கேரளாவில், 19 ஆயிரத்து, 512 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என, முதற்கட்ட மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டு உள்ளது.


வெள்ளம் முழுவதுமாக வடிந்த பின் தான், உண்மை நிலை தெரிய வரும்.மத்திய அரசிடம் இருந்து உடனடி நிவாரணமாக, 2,000 கோடி ரூபாய் கேட்டோம். பிரதமர் வந்து நேரடியாக பார்வை யிட்ட பின், முதற்கட்டமாக, 500 கோடி ரூபாய் அறிவித்துஉள்ளார்.இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய அரபு நாடுகளில், கேரளாவைச் சேர்ந்த வர்கள் அதிகம் வசிக்கின்றனர். தற்போதைய கேரள நிதி தேவையை மனதில் வைத்து, ஐக்கிய அரபு அரசு, நிதி திரட்டு வதற்காக ஒரு குழுவை அமைத்து உள்ளது.


ஐ.நா., இரங்கல்!கேரளா மாநில வெள்ள பாதிப்பு குறித்து, ஐ.நா., பொதுச் செயலர் ஆன்டானியோ கட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்தியாவில், அடுத்தடுத்து, பல மாநிலங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதை, ஐ.நா., கவலையுடன் கவனித்து வருகிறது. கேரளாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளத்தில், உறவுகளையும், உடைமைகளையும் இழந்து தவிப்பவர்களுக்கு, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கேரள மக்களின் போராட்ட குணத்துக்கு, என் முதல் வணக்கம். இந்த அவசர காலத்தில், இந்த நாடே,கேரள மக்களுடன் நிற்கும்.வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ருக்கு, என் இரங்கலை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள், விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன். கேரள மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக, பிரார்த்திப்போம்.

நரேந்திர மோடி, பிரதமர்


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
19-ஆக-201818:11:00 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்Baskar - Paris,பிரான்ஸ் 19-ஆக்-2018 01:53 இதுவே வடமாநிலங்களாக இருந்தால் மோடி வாரி இறைத்து இருப்பார். இவருக்கு தான் தென்மாநிலங்களில் வாய்ப்பு இல்லையே. இவருக்கு தென் மாநிலங்களில் வாக்குகள் கிடையாது அதுவே முக்கிய காரணம். //// ஜெர்மனில் உல்லாசமாக சுற்றுலா செல்வதற்கும் மோடிதான் பணம் கொடுக்கனுமா?

Rate this:
Manian - Chennai,இந்தியா
19-ஆக-201821:12:49 IST Report Abuse

Manianதவறான கண்ணோட்டம். காங்கிரஸ் ஆண்ட பொது அவர்களும் மக்களும் 67 % மலை வளங்களை காப்பாற்றவேண்டும் என்ற போது, திமிருடன் முடியாது என்ர்கள். பிறகு கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் 37 % இயற்கை பாதுக்காக்க படவேண்டும் எஎர்ரர். . அதையும் மக்கள் முடியாது என்றார்கள். பேராசை, மரங்களை வெட்டி அடுக்கு மாடி வீடுகள், குவாரிகள்...அதற்கு இயற்கை தந்த தண்டனை. மேலும், வளை குடாவிலிருந்து வந்த காசில் அவர்கள் மற்ற மாநிலங்களுக்கு என்ன உதவி செய்தார்கள் என்று ஒரு பட்டியல் காட்டுங்கள். மலையாளிகள் பொதுவாக தங்கள் இனம் தவிர மறறவர்களுக்கு உதவி செய்ய மாடடார்கள். வேலை என்றால் எங்கேயும் செல்வார்கள், உதவி கேடடால், சேட்டனோ என்று கேட்ப்பார்கள்....

Rate this:
Maha - Singapore ,சிங்கப்பூர்
19-ஆக-201815:53:44 IST Report Abuse

MahaDesanesan and kaipulla...Both of you are amazing... Rocking with honest and real information..... Thanks

Rate this:
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா
19-ஆக-201813:20:53 IST Report Abuse

உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி muthalla முல்லை பெரியார் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த உச்ச நீதி மன்றத்தில் ஆணையை petru நீரை தேக்கி தமிழகத்திற்கு திருப்ப வேண்டும். ஒரே நாடு ஒரே சட்டம் என சொல்லும் ப ஜ க உடனடியாக இதனை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கையையும் எடுக்க வேண்டும்.

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X