தி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ., மேலிடம்
ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்

வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, பா.ஜ., மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. தி.மு.க., தரப்பில், இன்னும், 'கிரீன் சிக்னல்' தரப்படவில்லை.

 தி.மு.க.,வுடன், கூட்டணி,விரும்புது, பா.ஜ., மேலிடம் , ஸ்டாலின், மறுத்தால் ,அழகிரியை, ஆதரிக்க, திட்டம்


இதனால், 'மாஜி' மத்திய அமைச்சர் அழகிரியை, பகடைக்காயாக பயன்படுத்தி, தி.மு.க.,விற்கு நெருக்கடி கொடுக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதும், 'அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய தயாராக உள்ளோம்' என, பிரதமர் மோடி அறிவித்தார்.


கருணாநிதி உடல் நலம் குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர் கள், பா.ஜ., தலைவர்கள், மருத்துவ மனை வந்து விசாரித்தனர்.கருணாநிதி மறைவை, தேசிய துக்கமாக, மத்திய அரசு அறிவித்தது. லோக்சபா,ராஜ்யசபாவில், இரங்கல் தெரிவித்து, சபைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இப்படி, கருணா நிதியின் மறைவுக்கு முன், பின், தி.மு.க.,விடம் மத்திய அரசு நெருக்கத்தை காட்டி வருகிறது.


அபிமானம்வரும், 30ம் தேதி, சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடக்கவுள்ள கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதில்,அமித் ஷா பங்கேற் றால், தி.மு.க.,தொண்டர்களிடம், பா.ஜ., மீதான அபிமானம் உருவாகும்.மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு,தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், மகளிர் அணி செயலர் கனிமொழி ஆகியோர், டில்லி சென்று, அஞ்சலி செலுத்தினர்.


வாஜ்பாய் மறைவுக்கு முன், 'அவர் நலம் பெற

வேண்டும்' என, ஸ்டாலின், டுவிட்டரில் பதிவு செய்திருந்தார்.இந்நிலையில், லோக்சபா தேர்தலில், தி.மு.க., வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 30 முதல், 37 தொகுதி கள் வரை வெற்றி பெறலாம் என, மத்திய உளவுத் துறை கணித்துள்ளது.


அதாவது, லோக்சபா தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுகளின் சதவீதத்தில், ஆளுங்கட்சி என்ற அடிப் படையில், அ.தி.மு.க.,வுக்கு, 25 சதவீதம்; தினகரன் கட்சிக்கு, 10 சதவீதம் கிடைக்க வாய்ப்புள்ளது.


தி.மு.க., - பா.ஜ.,கூட்டணிக்கு, 40 சதவீதம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்ற கணக்கை, மத்திய உளவுத் துறை, பா.ஜ., மேலிடத்தில் வழங்கிஉள்ளது. தமிழகத்தில், தி.மு.க., வுடன், பா.ஜ., கூட்டணி அமைத்தால், தேசிய அளவில், மாநில கட்சிகளின் மத்தியில் அதிர்வலைகளை உருவாக்கும். மற்ற மாநிலங்களிலும் உள்ள கட்சிகளும், பா.ஜ., வுடன் கூட்டணி அமைக்க தயாராகும் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது.


தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:குட்டையை குழப்பி, மீன் பிடிப்பது போல, திராவிட கட்சிகளில் உருவாகும் பலவீனத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் வலுவாக காலுான்ற, பா.ஜ., மேலிடம் காய் நகர்த்த பார்க்கிறது. அ.தி.மு.க., பலவீனப்படும் வகையில், முதல்வர் பழனிசாமி, தினகரன், தீபா, திவாகரன் என, நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கின்றன.ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது, பா.ஜ., வுக்கு கிடைக்கக் கூடிய நடுநிலை யான, ஹிந்து மக்களின் ஓட்டுகள், ஜெயலலிதா என்ற பிம்பத்திற்காக பிரிந்து சென்றது.


இதனால், தமிழகத்தில், பா.ஜ.,வினரால் தனிதன்மை ஓட்டுகளை அறுவடை செய்ய முடியவில்லை. தற்போது, ஜெயலலிதா மறைந்து விட்டதால், நடு நிலையான ஹிந்து மக்களின் ஓட்டுகள், இனி, பா.ஜ.,விற்கு அல்லது நடிகர் ரஜினி கட்சிக்கு பிரிந்து செல்ல வாய்ப்பு உள்ளது. அதே போல், கருணாநிதி மறைவு காரணமாக, தி.மு.க.,விலும் பிளவு ஏற்படுமா என்ற கேள்விஎழுந்துள்ளது. அதற்கு கட்டியம் கூறும் வகையில், தி.மு.க.,வில் இருந்து நீக்கி வைக்கப் பட்டுள்ள, அழகிரியின் செயல்பாடுகளும் உள்ளன.


சென்னை, அறிவாலயத்தில் நடந்த, தி.மு.க., செயற் குழு கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., துணைப் பொதுசெயலருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசுகையில், 'தி.மு.க.,வை இரண்டாக

Advertisement

உடைக்க,மத்திய அரசு சதி செய்கிறது' என்றார்.அவரது பேச்சை, தி.மு.க., தரப்பில் யாரும் மறுக்கவில்லை. ஆனால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'மத்திய அரசு, எந்த கட்சியையும் உடைக்கும் வேலையில் ஈடுபடவில்லை' என, பதிலடி கொடுத்தார்.


தி.மு.க.,வுடன் கூட்டணி வைக்க, பிரதமர் மோடி விரும்புகிறார். ஆனால், ஸ்டாலின் விரும்பவில்லை.அதற்கு காரணம், தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாக கருதப்படும், சிறுபான்மையினரின் ஓட்டுகளை இழக்க நேரிடும். கருணாநிதி உயிருடன் இருக்கும் போது, பா.ஜ., கூட்டணி ஏற்பட்டால், அவர், சிறுபான்மை மக்களையும், அந்த கூட்டணியை ஏற்றுக் கொள்ள வைப்பார். அதாவது, 'என்னை மீறி, பா.ஜ., மேலிடம், சிறுபான்மையினருக்கு பாதகமாக நடக்காது' என்ற, உறுதிமொழியை தருவார். ஆனால், ஸ்டாலினால் அப்படியொரு உறுதிமொழி அளிக்க முடியாது. அவர் தலைமை, இன்னும் வெற்றியை தரவில்லை.


பகடைக்காய்எனவே, தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தோல்வி அடைந்தால், தி.மு.க.,வுக்கு எதிர்காலம் இருக்காது என்பது மட்டுமின்றி, தன்னுடைய அரசியல் வாழ்க்கை யும் கேள்விக்குறியாகி விடும் என்ற அச்சம், அவருக்கு இருப்பதால் தான், கூட்டணி குறித்து, எந்த முடிவும் சொல்ல முடியாமல், குழப்பத்தில் இருக்கிறார்.


பா.ஜ., கூட்டணி குறித்த முடிவுக்கு, ஸ்டாலின் பச்சைக் கொடி காட்டவில்லை என்றால், அழகிரியை பகடைக்காயாக பயன்படுத்தி, தி.மு.க.,வை பிளவுபடுத்தி,நெருக்கடி கொடுக்க, பா.ஜ.,மேலிடம் தயாராக உள்ளது. இவ்வாறு தி.மு.க., வட்டாரங்கள் கூறின.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (234)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
25-ஆக-201818:46:46 IST Report Abuse

ரத்தினம்பிஜேபி அப்படி செய்தால் திரும்பவும் ஒரு பெரிய வரலாற்று பிழை. இந்த நாடு மதத்தின், பண்பாட்டின் கலாச்சாரத்தின் எதிரி திருட்டு கும்பல். அதனுடன் கூட்டா?

Rate this:
prem - Madurai ,இந்தியா
24-ஆக-201817:26:03 IST Report Abuse

premதி மு க வுடன் சேர்ந்தால் திரும்பவும் ஊழல் செய்ய வாய்ப்பிருக்கிறது..... தமிழக மக்களிடம் தி மு க வெறுப்பை சம்பாத்தித்துக் கொண்டு இருக்கிறது.... மேலும் தி மு க வோடு கூட்டணி சேர்ந்தால் முன்னம் ஜெயலலிதா பெற்றுவந்த உயர்ஜாதி இந்துக்களின் ஓட்டுக்கள் கிடைக்காமலே போய்விடும்.. தற்போது அது பா ஜ க பால் கனிந்து கொண்டுருக்கும் வேளையில் இந்துக்களை மட்டமாக பேசிவரும் தி மு க வுடன் உறவுகொண்டால் அது நீண்டகால சாபமாகவே முடிந்துவிடும். அது கோ பூஜை செய்த தினகரனுக்கோ, அல்லது அ தி மு க வுக்கோ போய்விடும். சிறிய கட்சிகளை அழகிரி , தினகரன், அன்புமணி, போன்ற சாதுர்யம் மிக்கவர்களை அரவணைத்து சென்றால் தமிழகத்தில் பா ஜ க ஒரு நல்ல நிலையை அடையும் என்பதை மறுப்பதற்கில்லை. இந்துக்கள் தற்போது ஒரு பாதுகாப்பு தேடிக்கொண்டுள்ளனர். பா ஜ க இதுகாறும் காத்துகொண்டு வந்த இந்துக்கள் ஆதரவினை அடகு வைத்துக்கொண்டு தி மு க வுடன் கூட்டணி சேர முற்பட்டால்..... வேறு என்ன சொல்ல....? வெண்ணை திரண்டு வரும்வேளை தாழியை யாரும் உடைப்பாரா....

Rate this:
yila - Nellai,இந்தியா
24-ஆக-201812:42:59 IST Report Abuse

yilaஇது விருப்பம் இல்லீங்க... அச்சுறுத்தல்..... பிஜேபி மேலிடத்து விருப்பம்னா சும்மாவா? தாமரை மலர் தள்ளாடுவது நன்றாக தெரிகிறது.

Rate this:
மேலும் 231 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X