பதிவு செய்த நாள் :
பதவியேற்பு!  
இம்ரான் கானின் பிரதமர், 'இன்னிங்ஸ்' துவக்கம்  
உருது மொழியில் பிரமாணம் ஏற்பதில் தடுமாற்றம்

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின், 22வது பிரதமராக, முன்னாள் கிரிக்கெட் வீரர், இம்ரான் கான், நேற்று பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி மம்னுான் உசேன், பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். உருது மொழியில் பதவிப் பிரமாணம் ஏற்கும்போது, அந்த மொழியில் பேச முடியாமல், இம்ரான் கான் தடுமாறியதால், சலசலப்பு ஏற்பட்டது.

பதவியேற்பு!, இம்ரான் கானின், பிரதமர், 'இன்னிங்ஸ்' , துவக்கம்  


அண்டை நாடான, பாகிஸ்தானில், ஜூலை, 25ல், பார்லிமென்ட் தேர்தல் நடந்தது. இதில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இம்ரான் கான் தலைமையிலான, தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி, 116 இடங்களை பிடித்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத் தது.மேலும், ஆளுங்கட்சியாக இருந்த, நவாஸ் ஷெரீபின், பாக்., முஸ்லிம் லீக் கட்சி, 64 இடங்களிலும், மற்றொரு முக்கிய கட்சியான, பிலாவல் புட்டோவின், பாக்., மக்கள் கட்சி, 43 இடங்களிலும் வென்றன.


ஓட்டெடுப்புபாகிஸ்தானை, இதற்கு முன் ஆண்ட கட்சிகளான, பாக்., முஸ்லிம் லீக், பாக்., மக்கள் கட்சி ஆகியவை, முதலில், தேர்தலில் முறை கேடு நடந்துள்ளது என கூறி, பின், தோல்வியை ஒப்பு கொண்டன.ஆட்சி அமைக்க, 137 இடங்கள் தேவை என்பதால், சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பெற, இம்ரான் கான் முயற்சி செய்தார்.சுயேச்சைகள், எட்டு எம்.பி.,க் களை வைத்துள்ள, முத்தாகிதா குவாமி அமைப்பு, நான்கு இடங்களை வைத்துள்ள, பாக்., முஸ்லிம் லீம் குவாயி உள்ளிட்ட சிறிய கட்சிகளின் தலைவர்களை, இம்ரான் கான் சந்தித்து பேசி, ஆதரவை பெற்றார்.


இதையடுத்து 'ஆக., 14ல், பிரதமராக, இம்ரான் கான் பதவியேற்பார்' என, தகவல்கள் வெளியாகின. பின், 16ல், பதவியேற்பு விழா நடக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. கடைசியாக, 'ஆக., 18ல், பாகிஸ்தானின், 22வது

பிரதமராக, இம்ரான் கான் பதவியேற்பார்' என, அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.


மேலும், பதவியேற்பு விழாவை, மிகவும் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக ஓட்டெடுப்பு நடத்த, பாகிஸ்தான் பார்லிமென்ட் கூட்டம் நடந்தது.


இந்த கூட்டத்தில், பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் கட்சி தலைவர், இம்ரான் கானும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி நவாஸ் தலைவர், ஷாபாஸ் ஷெரீபும் போட்டியிட்டனர். இதில், 176 ஓட்டுகள் பெற்று, இம்ரான் கான் வெற்றி பெற்று, பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஷாபாஸ் ஷெரீபுக்கு, 96 ஓட்டுகள் கிடைத்தன. ஓட்டெடுப்பில், பாகிஸ்தான் மக்கள் கட்சி பங்கேற்கவில்லை.


தடுமாற்றம்இந்நிலையில் நேற்று, தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள, ஜனாதிபதி மாளிகையில், பதவி ஏற்பு விழா நடந்தது. அப்போது, பாகிஸ்தானின், 22வது பிரதமராக, இம்ரான் கான் பதவியேற்றார். அவருக்கு, ஜனாதிபதி மம்னுான் உசேன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பதவிப் பிரமாணத்தை, உருது மொழியில், ஜனாதி பதி மம்னுான் உசேன் வாசிக்க, இம்ரான் கான், அதை திரும்ப படித்தார்.


பதவிப் பிரமாணத்தில் இடம் பெற்றுள்ள வார்த்தை கள், ஒரு காகிதத்தில், உருது மொழியில் எழுதப் பட்டிருந்தது. அதை பார்த்து, இம்ரான் கான் படித்தார். ஆனால், உருது மொழியை, சரளமாக படிக்க முடியாமல், பலமுறை தடுமாறினார்.


ஒருவழியாக தடுமாற்றத்துடன் பதவிப் பிரமாணத்தை வாசித்து முடித்தார். இதனால், விழா அரங்கில், சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் மாநில சுற்றுலாத் துறை அமைச்சருமான, காங்.,ஐ சேர்ந்த, நவ்ஜோத் சிங் சித்து பங்கேற்றார்.


மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி முன்னாள் வீரர், வாசிம் அக்ரம் உட்பட, இம்ரான் கானின் நெருங்கிய நண்பர்கள் பங்கேற்றனர்.பிரதமராக பதவியேற்றதன் மூலம், இம்ரான் கான், தன்

Advertisement

அரசியல் வாழ்வில் அடுத்த இன்னிங்சை துவக்கி உள்ளார்.


கிரிக்கெட்டிலிருந்து....


முன்னாள் கிரிக்கெட் வீரரான, இம்ரான் கான், 65, கடந்த,1952 அக்., 5ல், லாகூரில் பிறந்தார். 13 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் துவங்கினார். ஆரம்பத்தில், கல்லுாரி மற்றும் கிளப் அணிகளுக்கு விளையாடினார். 18 வயதில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்றார். 1992 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இவரது தலைமையிலான, பாக்., அணி கோப்பை வென்று, சாதித்தது. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், புற்றுநோய் மருத்துவ மனையை துவங்கினார். 1996ல் பாகிஸ்தான் தெஹ்ரீக் - இ - இன்சாப் என்ற கட்சியை துவங்கினார். 2002ல், பார்லிமென்ட் தேர்தலில் இவரது கட்சி, 19 இடங்களில் வென்றது.


இம்ரான் வெற்றி பெற்று, பார்லிமென்ட் உறுப்பினரானார். 2007ல், முஷராப் ஆட்சியில் அமலில் இருந்தபோது, நெருக்கடி நிலையை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார். இதனால், ஒரு வாரம் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த, 2008 தேர்தலை, இவரது கட்சி புறக்கணித்தது. 2013 தேர்தலில், 35 இடங்களில் வென்றது. பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங் களில், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.
சமீபத்தில் நடந்த தேர்தலில், 149 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின், சுயேச்சை மற்றும் உதிரி கட்சிகளின் ஆதரவுடன், பிரதமர் பதவிக்கான ஓட்டெடுப்பில், 176 எம்.பி.,க்களின் ஆதரவைப் பெற்று, பாகிஸ்தானின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.இதைத்தொடர்ந்து, பாக்.,கின், 22வது பிரதமராக பொறுப் பேற்றார்.


சர்ச்சையில் சிக்கிய சித்துஇம்ரான் கானின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற, பஞ்சாப் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த தலைவருக்கு அருகில் இருக்கை அளித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பதவியேற்பு விழாவின் போது, மரியாதை நிமித்தமாக, பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி, குவாமர் ஜாவத் பஜ்வாவை, நவ்ஜோத் சிங் சித்து கட்டியணைத்து பேசினார். இது தொடர் பான புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஆக-201813:59:07 IST Report Abuse

c.RamasamyTirupurஇன்னிங்ஸ் முக்கியமல்ல...பீல்டிங் வியூகம்(அண்டை நாடுகளின் உறவு) முக்கியம்...அதைவிட (ஆள் அவுட்) ஆட்சி கவிப்பு ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..இன்னிங்ஸ் சிறப்பாக(ஆட்சி) இருக்கும்...!!

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
19-ஆக-201810:57:49 IST Report Abuse

Srinivasan Kannaiyaகிரிக்கட்டில் கலக்கியது போதாது... அவர் இந்திய பாக் உறவில் யாரும் எதிர்பார்க்காத அளவிர்க்கு கலக்கவேண்டும்...

Rate this:
Sundararaman - Mumbai,இந்தியா
19-ஆக-201812:30:07 IST Report Abuse

Sundararamanகலக்கிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அதனால்தான் தெளிவே இல்லாமல் இருக்கிறது. ...

Rate this:
Sundararaman - Mumbai,இந்தியா
19-ஆக-201809:32:57 IST Report Abuse

Sundararamanபாதி நாடு ஏற்கனவே அம்போ. இருக்கும் மிச்சத்தை வைத்துக்கொண்டு அமைதியாய் குடித்தனம் செய்வததுதான் சரியான செயல். ஆனால் புரிந்து கொள்ளவில்லையே. ராணுவத்தின் தோள்களை நின்று ஆட்சி செய்யும் வரை உருப்படிப்போவது இல்லை. ராணுவத்திற்கோ எவனுக்கும் பதில் சொல்ல வேண்டாம். நிலைமை கட்டு அடங்காது போனால் ராணுவத்தலைவர் சவூதி பறந்துவிடுவார்.

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X