'ரெட் அலார்ட்' வாபஸ் : கேரளாவுக்கு மீண்டும் போக்குவரத்து| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'ரெட் அலார்ட்' வாபஸ் : கேரளாவுக்கு மீண்டும் போக்குவரத்து

Added : ஆக 19, 2018 | கருத்துகள் (12)
Advertisement
கேரளா, ரெட் அலார்ட், பஸ் போக்குவரத்து

கொச்சி : கேரளாவின் அனைத்து மாவட்டங்களுக்கம் விடுக்கப்பட்ட 'ரெட் அலார்ட்' எனப்படும் தீவிர கனமழை எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் திரும்பப் பெற்றுள்ளது. இருப்பினும் 10 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச் அலார்ட்' எனப்படும் மிதமான மழை வாய்ப்பு எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு 'எல்லோ அலார்ட்' எனப்படும் லேசான மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

மழையின் தீவிரம் குறைந்ததை அடுத்து மீட்புப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலக்காடு மாவட்டம் நிம்மரா பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இருப்பினும் மண்சரிவில் சிக்கி உள்ள உடல்களை மீட்பது பெரும் சவாலாக உள்ளதாக கேவை அதிரடிப்படை குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.

கேரளாவில் மழை குறைந்ததை அடுத்து கர்நாடகாவில் இருந்து நிறுத்தப்பட்ட பஸ் சேவை இன்று முதல் மீண்டும் துவங்கப்பட உள்ளது. கேரளாவின் எர்ணாகுளம், கோட்டையம், திரிச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கன்னூர், திருவனந்தபுரம் பகுதிகளுக்கு பஸ் சேவை துவங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக மாலை 4 மணிக்கு பெங்களூருவில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

இடுக்கி அணை மற்றும் பெரியாறு ஆறுகளில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundararaman - Mumbai,இந்தியா
19-ஆக-201816:31:02 IST Report Abuse
Sundararaman வெறுப்பை உமிழ்வதற்கு இதுவல்ல நேரம். அரசியல்வாதிகளின் செயலால் அவதிப்படுபவர்கள் சாதாரண மக்களே ஆகும். வெறுப்பிலிருந்து விடுபடவும்.
Rate this:
Share this comment
Cancel
19-ஆக-201815:21:26 IST Report Abuse
கபிலன்மதுரை இத்தனை அழிவுகளுக்கும் மழை காரணமில்லை என்பதை எந்த வல்லுனர்களும் விளக்காதது வியப்பைத் தருகிறுது. பேராசையால் விளைந்த பெரு நஷ்டத்தை குட்டன்கள் அனுபவித்து வருகிறார்கள். சிறிய விளக்கம். இடுக்கி அணையின் மூலமாக பார்க்கலாம். அணை முழு அளவு 2403ft. இதற்கு முன் 1981 2342ft 1992 2340 ft 1992 2400.8 ft. இந்த முறை July 30 அன்று 2394. 33 ft ஆனது. அன்றிலிருந்து இடுக்கி அணை மிக குறைவாகவே திறந்துவிடப்பட்டது. மீண்டும் ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு பிறகு அதிக அளவில் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. இது சென்னை வெள்ளத்தின் போது செய்த அதே தவறுக்கு ஒப்பானது. நீர்மட்டம் முழு அளவை எட்டுவதற்கு முன் மழைப்பொழிவை கணித்து முதலிலேயே அதாவது 90 சதவீதம் இருக்கும் பொழுதே கொஞ்சமாக திறந்திருந்தால் இவ்வளவு அழிவு வந்திருக்காது. மழைப் பொழிவை கணிக்க (இது ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் இல்லை - தென்மேற்கு பருவ மழை பருவம் முழுவதும் மழையை எதிர்பார்த்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலே போதும். எதிர்பாராததை எதிர்பார்த்து தயாராவது தான் நல்ல அரசின் தகுதி) அதை விட்டு விட்டு முழு மழையையும் அணைகளில் சேமிக்க ஆசைப் பட்டு பேராசைப் பட்டு, அணை நிறைந்ததும் மீண்டும் அணைக்கு வரும் நீரை சேமிக்க வேறு வழியில்லாமல் திறந்து இந்த ஆபத்தில் சிக்கி உள்ளார்கள். இதற்கு முழு காரணம் பேராசை அன்றி வேறு எதுவும் இல்லை. ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அணைகளை கணிசமாக திறந்திருந்தால் இதை தவிர்த்தி இக்கலாம். இந்த உதாரணம் எல்லா அணைகளுக்கும் பொருந்தும் .
Rate this:
Share this comment
Sundararaman - Mumbai,இந்தியா
19-ஆக-201816:19:51 IST Report Abuse
Sundararamanகுறைவான உரத்தில் தண்ணீரை வைத்திருந்தால் எற்பட்டு இருக்கக்கூடிய நஷ்டத்தையும் இப்போது அடைத்திருக்கும் நஷ்டத்தையம் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை விளங்கும். கண் போனபின் சூரிய வணக்கம் பயனளிக்காது என்பது தெளிவாக விளங்குகிறது. எவ்வளவுதான் நஷ்ட ஈடு கிடைத்தாலும் கேரளம் மீண்டும் எழ பல நாட்கள் எடுக்கும்....
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
19-ஆக-201814:36:25 IST Report Abuse
தமிழர்நீதி கேரளா வெள்ளத்தில் மிதக்குது . ஒட்டுமொத்த கேரளாவும் சகஜநிலைக்குவர கோடி கோடி கோடி கோடி வேண்டும் . வீடுகள் சாலைகள் உடமை வாகனம் மருத்துவம் சீரமைப்பு என்று ஏகப்பட்ட பணம் வேண்டும் கேரளாவை மீட்டுஎடுக்க தேவையான பணம் குமரிமாவட்டமக்களின் மூதாதையர்கள் சேர்த்துவைத்துள்ளார்கள் . அதுவும் கேராவில் . குமாரி மக்கள் , தும்மலுக்கு , ஏன் பெண்கள் மார்ப்புக்குகூட வரிகொடுத்து அதை பத்பநாபன் கோவிலில் வைரம், முத்து, பவளம் , தங்கம் என்று சேர்த்துவைத்து அனைத்தையும் விட்டுக்கொடுத்து , தமிழகத்துடன் இணைந்துள்ளார்கள் . குமரிமக்கள் கொடுத்த பொக்கிஷம் பத்பநாபன் கோவிலில் பத்திரமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரை வசம் உள்ளது . சிலபல பாயாச வாளிகள்மூலம் மன்னர்குடும்பம் எடுத்துச்சென்று சமூகசேவைக்கு செலவுசெய்து போக மீதி பத்திரமாக உள்ளதாக அறியப்படுகிறது . மன்னர் குடும்பம் சிரமப்பட்டு அறிந்தொஅறியாமலோ பொக்கிஷத்தை இப்படி ஒருநிலமை கேரளாவுக்கு வரும் என்று கருதி தீர்க்கமாக யோசித்து பாதுகாத்துவைத்துள்ளார்கள். இந்த பொக்கிஷத்தை பத்பநாபன் கோவில் லாக்கரிலிருந்து எடுத்து கேரளா அரசு பயன்படுத்தவேண்டும் . மாண்புமிகு . கேரளா முதல்வர் , இடதுசாரி பிடிவாதத்தைவிட்டுவிட்டு பத்பநாபனிடம்வெள்ளநிவாரண உதவிகேட்க முன்வரவேண்டும் . ஒரே ஒரு பெட்டி கேரளாவை சகஜநிலைக்கு கொண்டுவரும் . கொடுத்து ஓடாகிப்போன குமரிமக்களின் மனதுக்கும் ஆறுதல்கிடைக்கும் . மாண்புமிகு கேரளா முதல்வர் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய் கேட்டு அலைவதை தவிர்க்கவேண்டும் . பொக்கிஷம் எடுக்கப்பட்டு நிவாரணத்திற்கு பயன்படுத்த தடை ஏற்பட்டால் பொக்கிஷத்தை கொடுத்துவைத்துள்ள குமரிமக்களும், உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேரளா மலையையாளிகளும் , வெள்ளத்தில் தவிக்கும் உள்ளூர் மலையாளிகளும் சேர்ந்துபோராடி பொக்கிஷம் மூலம் கேரளா மீட்கப்பட போராடவேண்டும் . பத்பநாபனுக்கு தான்வசமிருக்கும் மக்கள் சொத்தை பயன்படுத்த அரியவாய்ப்பு. சீக்கிரம் . கேரளா வெள்ளத்தில் தவிக்குது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X