அரசியல் செய்தி

தமிழ்நாடு

மணிசங்கர் அய்யர் மீண்டும் சேர்ப்பு ஏன்?

Added : ஆக 20, 2018 | கருத்துகள் (48)
Advertisement
Mani Shankar Aiyar, Lok Sabha Elections 2019, Congress leader Rahul, மணிசங்கர் அய்யர்,லோக்சபா தேர்தல் 2019, காங்கிரஸ் தலைவர் ராகுல் ,முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸ், பிரதமர் மோடி, மணிசங்கர் அய்யர் மீண்டும் காங்கிரஸ், 
Former Union Minister Mani Shankar Aiyar, Congress, Prime Minister Modi,

சென்னை : அடுத்தாண்டு, லோக்சபா தேர்தல் நடக்க உள்ளதால், கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யரை, காங்., மேலிடம், மீண்டும் கட்சியில் சேர்த்ததாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, மணிசங்கர் அய்யர், தமிழகத்தைச் சேர்ந்தவர். குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடந்தபோது, காங்கிரசுக்கு ஆதரவாக, மணிசங்கர் அய்யர் தீவிர பிரசாரம் செய்தார். அப்போது, அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்தார். அவரது பேச்சு, இன ரீதியான பிரச்னையை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, காங்., தலைவர் ராகுல் உத்தரவின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து, மணிசங்கர் அய்யர் நீக்கப்பட்டார். தற்போது, மணிசங்கர் அய்யர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது: மணிசங்கர் அய்யர், சிறந்த பேச்சாளர். எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை திறமையாக கையாளக் கூடிய, அனுபவமும், திறமையும் உடையவர். சிறந்த கட்டுரையாளரும் கூட. லோக்சபா தேர்தலுக்கான அறிகுறி தென்படத் துவங்கியுள்ளதால், கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில், மணிசங்கர் அய்யர், மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
20-ஆக-201817:53:42 IST Report Abuse
Vinod K மாயவரம் அப்படியே தான் இருக்கு. போக்குவரத்துக்கு நெரிசல், பேருந்து நிலையம், தனி மாவட்டம், தரங்கம்பாடி ரயில், என எந்த விஷயமும் செயல் படுத்தப்படவில்லை ஆலோசிக்கவில்லை. அப்படியே தான் இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
20-ஆக-201815:42:54 IST Report Abuse
madhavan rajan அவர் ஒரு சிறந்த பேச்சாளர், சிறந்த கட்டுரையாளர், எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுக்களை திறமையாக எதிர்க்கொள்ளக்கூடியவர் என்ற நல்ல விஷயங்களையெல்லாம் ஆராயாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அடிப்படை உறுப்பினராகக் கூட இருக்கவிடாமல் நீக்கியது தவறல்லவா? இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் ராகுல் அரை வேக்காட்டுத்தனத்தை. சோனியாவும் மற்றவர்களும் மோடியை மரண வியாபாரி என்று கூறி அவரை பிரபலமாகி அதனால் காங்கிரஸ் 50 சீட் கூட பாராளுமன்றத்தில் பெறமுடியாமல் போனது. அதற்கு அவர்களுக்கு தலைவர் பதவி. சாதாரண எம் பி ஒருவர் ஏதாவது கூறிவிட்டால் அவருக்கு காங்கிரசில் உறுப்பினராக இருக்கக்கூட தகுதியில்லை. காங்கிரஸ் ஆனாலும் நல்ல ஜனநாயகக் கட்சிதான்.
Rate this:
Share this comment
Cancel
sumutha - chennai - Chennai,இந்தியா
20-ஆக-201814:00:54 IST Report Abuse
sumutha - chennai வாய்யா வாய்யா ஒன்ன மாதிரி கீழ்த்தரமாக பேச கட்சியில ஆள் குறையுதுன்னு சேர்த்துக்கிட்டிருப்பங்களோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X