பொது செய்தி

இந்தியா

ஆயிரக் கணக்கானோர் வெள்ளத்தால் அழிவார்கள்

Added : ஆக 20, 2018 | கருத்துகள் (21)
Advertisement
வெள்ளம், பேரிடம் மேலாண்மை கழகம்

புதுடில்லி : இதே போன்று வெள்ள நிலை தொடர்ந்தால், அடுத்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 16,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளத்தால் அழிந்து போவார்கள் என தேசிய பேரிடர் மேலாண்மை கழகம் தெரிவித்துள்ளது. ரூ.47,000 கோடிக்கும் அதிகமான பொருட் சேதம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள 640 மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்திருந்தது. பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நிவாரண பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. பெரும்பாலான மாநிலங்கள் இதை பெரிதுபடுத்தவில்லை. நீர்நிலைகள் மற்றும் அதன் வழித்தடங்களில் அமைந்துள்ள ஆக்ரமிப்புக்களை அகற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதில் இமாச்சல பிரதேசம் தவிர மற்ற எந்த மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. குஜராத் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தேசிய பேரிடம் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-201820:31:21 IST Report Abuse
a.thirumalai ஓ ம்ம் அப்படியா
Rate this:
Share this comment
Cancel
Valliappan - Chennai,இந்தியா
20-ஆக-201820:13:03 IST Report Abuse
Valliappan ஏரி குளங்களின் பாதைகளில் ஆக்கிரமிப்பு முறிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. அதே சமயம் இயற்கை பேரிடர்களை முழுவதுமாய் தவிர்க்க இயலாது. பூம்புகார், லெமுரியா கண்டம் போன்றவைகளே சாட்சி..
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
20-ஆக-201818:43:59 IST Report Abuse
Kuppuswamykesavan இயற்கையின் புவியியல் அமைப்பில், பெரும் சேதாரங்கள், மனிதர்களின் சுய தேவைகளுக்காக மாற்றப்படும் போது, அந்த மாற்றங்களினால் ஏற்படும் பாதிப்புக்களை சமநிலைபடுத்த, இயற்கை, அதனால்(தன்னால்) முடிந்த அளவு, பாலன்ஸ் செய்ய முயல்வதால், இப்படிப்பட்ட கேடுகள், ஏதாவது சில பிரதேச மக்களுக்கு ஏற்ப்படுகின்றன எனலாங்க. பொதுவாக, யோகா குரு யாரை கேட்டாலும், இப்புவியில், ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கு காரணம், அவன் செய்த கர்ம காரியங்கள்தான் என்பார்கள். நான், ஒரு பத்து நாட்கள்(2000-ம் வருடத்தில்), யோகா கிளாஸ் அட்டென்ட் பண்ணிய போது, முதல் நாளில், எங்க யோகா குரு கூறிய வார்த்தைங்க, இவை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X