காபூல் : ஆப்கானிஸ்தானில் பஸ்சில் சென்ற பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 100 க்கும் அதிகமானவர்களை தாலிபன்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர்.
கடந்த வாரம் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கிலானி, இஸ்லாமிய விடுமுறை தினமான ஈத் அல் அதா அன்று தாலிபன்கள் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக, சமீபத்தில் தாலிபன்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட குண்டுஸ் பகுதியில் பயணிகள் சென்ற 3 பஸ்களை மறித்து, அதில் பயணம் செய்தவர்களை தாலிபன்கள் பிடித்து வைத்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் போலவும், பாதுகாப்பு படையினரை போலவும் வந்த தாலிபன்கள் பலவந்தமாக பஸ்சில் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றவர்களை இழுத்துச் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தலைநகர் காபூலிற்கு சென்றவர்கள் என கூறப்படுகிறது.