திருவனந்தபுரம்: கேரளாவில் புரட்டிப்போட்டவெள்ளம் அதி தீவிர பேரிடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில்,தொடர்ந்து, 10 நாட்களாக பெய்த கன மழையால், மாநிலத்தின் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால், மாநிலம் முழுவதும், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது. . கனமழைக்கு 324க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனை தொடர்ந்து தேசிய பேரிடராக அறிவிக்க கேரள அரசு கோரியிருந்தது.
இந்நிலையில், கேரளா வெள்ள சேதம் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை அதி தீவிர பேரிடராக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.