பெருமழை கற்று தந்தது பாடம்: மறக்காமல் இருந்தால் தீரும் சாபம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பெருமழை கற்று தந்தது பாடம்
மறக்காமல் இருந்தால் தீரும் சாபம்

தண்ணீர் பிரச்னையில் மோதிக் கொள்ளும் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு, தென்மேற்கு பருவமழை, நல்ல, 'பாடம்' நடத்தியுள்ளது.மூன்று அரசுகளும், இனி, யோசித்து முடிவெடுக்க வேண்டிய, நெருக்கடியான நிலை ஏற்பட்டு உள்ளது.

பெருமழை கற்று தந்தது பாடம்
தமிழகம் - கர்நாடகா இடையே, காவிரி, பெண்ணையாறு பிரச்னைகள், பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன. காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், முடிவு எட்டப்பட்டு உள்ளது. காவிரி மற்றும் பெண்ணையாற்றில், கழிவுநீர் கலப்பு, புதிய அணைகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட வழக்குகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.இதேபோல, தமிழகம் - கேரளா இடையே, முல்லை பெரியாறு, நெய்யாறு, பாம்பாறு, பவானி ஆறு,நீராறு - நல்லாறு, செண்பகவல்லி அணை உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகள், நிலுவையில் உள்ளன.முல்லை பெரியாறு அணையில், 152 அடிக்கு, நீரை தேக்கி வைக்க, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

பாடம் கற்பிக்கும்

இதற்காக, அணையை பலப்படுத்தும்

பணிகளை மேற்கொள்ள, கேரள அரசு அனுமதி வழங்காததால், 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டு வருகிறது. இதற்கும், கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.தமிழகத்திற்கு வர வேண்டிய, மழை நீரை தேக்கும் வகையில், பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டுவதிலும், கேரள அரசு ஆர்வம் காட்டி வருகிறது.இந்த மூன்று மாநிலங்களும், ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. தமிழகத்திற்கு தேவையான காய்கறி மற்றும் பழங்கள், கர்நாடகாவில் இருந்து வருகின்றன. தமிழகத்தில் இருந்து, கேரளாவிற்கு, இறைச்சி, மீன், காய்கறிகள் உள்ளிட்டவை அனுப்பப்படுகின்றன.

கேரளாவில் இருந்து, தமிழகத்திற்கு கோழிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட பொருட்கள் வருகின்றன. அப்படி இருந்தும், மூன்று மாநிலங்களும், தண்ணீர் பிரச்னையில் மோதிக் கொள்கின்றன.இந்நிலையில், மூன்று மாநிலங்களுக்கும் பாடம் கற்பிக்கும் வகையில், தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்து வருகிறது.கர்நாடகாவில், காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, நான்கு அணைகளில் இருந்து, ஜூலை முதல், தொடர்ச்சியாக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.இதனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அணைகள், நிரம்பி வழிகின்றன. அவற்றில் இருந்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், 11 மாவட்டங்களில், வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுகிறது.

துார்வாருதல்


நீரை தடுத்து, யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்பதை, கர்நாடக அரசுக்கு, மழை புரிய வைத்துள்ளது.கேரளாவில், 100ஆண்டுகளுக்கு பின், பெய்த பெருமழையால், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து, கேரளாவிற்கு உதவிகள் குவிந்து

Advertisement

வருகின்றன. தமிழக அரசும், கேரள அரசுக்கு நிதியுதவி வழங்கி உள்ளது. மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை, இந்த மழை, கேரள அரசுக்கு உணர்த்திஉள்ளது.கர்நாடகா, கேரளாஉடன், தண்ணீர் பிரச்னையில், தமிழகம் சட்டப் போராட்டம் நடத்துகிறது. இதில் மட்டுமே ஆர்வம் காட்டிய, தமிழக அரசு, கிடைக்கும் நீரை சேமிக்க, பெரிய திட்டங்களை முன்னெடுக்கவில்லை.புதிய அணைகள், தடுப்பணைகள் கட்டுதல், நீர்நிலைகளை துார்வாருதல் உள்ளிட்ட பணிகள், முறையாக மேற்கொள்ளப்படவில்லை.இதனால், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து, திறந்து விடப்படும் உபரி நீரை, கடலுக்கு அனுப்பி, தமிழக அரசு வீணடித்து வருகிறது. இவ்வாறு, தென்மேற்கு பருவமழை, கர்நாடகா, கேரளா, தமிழக அரசுகளுக்கு நல்ல, 'பாடம்' நடத்தியுள்ளது.இனி, தண்ணீர் பிரச்னையில், மூன்று மாநில அரசுகளும், யோசித்து செயல்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Ulaganathan - Bangalore,இந்தியா
21-ஆக-201821:03:43 IST Report Abuse

Suresh Ulaganathanகர்நாடகாவிடம் கெஞ்சுவது சரி இல்லை. அவர்கள் தேவையான நீரை வைத்து கொண்டு தற்போது நீரை திறந்துவிட்டார்கள். ஆனால் இங்குள்ள அரசியல் வியாதிகள் எங்கே மணலை எடுக்க முடியாமல் போய் விடுமோ என்ற பயத்தில் நீரை கடலில் கலந்து விடுகிறார்கள். இவ்வளவு வெள்ளம் வந்தும் ஏன் இன்னும் பல கிராமங்களில் குடிக்க நீர் இல்லாமல் தவிக்கிறார்கள். GST வரும் வரியில் என்ன செய்கிறார்கள். ஒரு அணை கூட கட்டவில்லை தி மு க மற்றும் அ தி மு க.

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஆக-201820:23:07 IST Report Abuse

Natarajan Ramanathanஇந்த பேச்செல்லாம் இன்னும் பத்து நாளில் மறந்துவிடும். மீண்டும் மார்ச்சில் காவிரிதண்ணீர் கேட்டு பிச்சை எடுப்போம்.

Rate this:
venkat -  ( Posted via: Dinamalar Android App )
21-ஆக-201819:45:50 IST Report Abuse

venkatKerala export to Tamilnadu 1. Hospital waste 2. cheken & meet waste 3. paper bord and plastics waste . Karnataka exporting to Tamilnadu 1. Darty waters 2. Paper and plastics waste above all are both state un official exporting Tamilnadu

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X