இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், மாணவர் சேர்க்கை சரிவால், தனியார் கல்லுாரிகள் கவலை அடைந்துள்ளன. 'மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்' என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, அண்ணா பல்கலை வழியாக, பொது கவுன்சிலிங் நடத்தப்பட்டது.
42 இடங்கள்
இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, மாணவர்களை சென்னைக்கு வரவழைக்காமல், 'ஆன்லைன்' முறையில், அவரவர் வீட்டில் இருந்தபடியே, இடங்களை தேர்வு செய்ய, வசதி செய்யப்பட்டது. இதற்காக, மாநிலம் முழுவதும், 42 இடங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.இந்த கவுன்சிலிங்கை, ஆன்லைனில் நடத்துவதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், பெரிய சர்ச்சையின்றி, ஆன்லை
ன் கவுன்சிலிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஜூலை, 27ல், துவங்கி, 25 நாட்கள் நடந்த கவுன்சிலிங் நடவடிக்கைகள் நேற்றுடன் முடிவடைந்தன.இந்த ஆண்டு, பொது கவுன்சிலிங்கில், 72 ஆயிரத்து, 648 இடங்கள் உள்பட, தொழிற்கல்வி, விளையாட்டு மற்றும் மாற்று திறனாளிகள் பிரிவுகளையும் சேர்த்து, 74 ஆயிரத்து, 601 இடங்களே நிரம்பியுள்ளன. 97 ஆயிரத்து, 980 இடங்கள்,மாணவர்கள் சேராமல் காலியாகியுள்ளன.மொத்தம், 136 கல்லுாரிகள் மட்டுமே, 50 சதவீத இடங்களை, கவுன்சிலிங் வழியாக நிரப்பியுள்ளன. மற்ற கல்லுாரிகளில் சேர்க்கை அளவு சரிந்துள்ளது.எனவே, இனி கல்லுாரிகளை நடத்த முடியுமா என, எதிர்கால திட்டம் குறித்து, கல்லுாரி நிர்வாகங்கள், ஆலோசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இன்ஜினியரிங் படிப்பில் மாற்றம் செய்வது குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயபிரகாஷ் காந்தி கூறியதாவது:ஒன்பது கல்லுாரிகளில், தலா, ஒரு இடம்; 27 கல்லுாரிகளில், தலா, 5 இடங்கள்; 47 கல்லுாரிகளில், தலா, 10 இடங்கள்; 150 கல்லுாரிகளில், தலா, 50 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. 268 கல்லுாரிகளில், 100 பேருக்கும் குறைவாகவே சேர்ந்துள்ளனர்.ஒரு தனியார் கல்லுாரி உள்பட, 10 கல்லுாரிகளில் மட்டுமே, 100 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. 81கல்லுாரிகளில், 10 சதவீத இடங்கள் கூட நிரம்பவில்லை.பாடவாரியான ஒதுக்கீட்டில், கணினி அறிவியல் மற்றும் தகவல்
தொழில்நுட்பத்தை, அதிக மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர்.
தரவரிசை
'சிவில் மற்றும் மெக்கானிக்கல்' பிரிவில், மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது. மாணவர்கள் பெரும்பாலும், தரவரிசையில் முன்னிலையில் உள்ள கல்லுாரிகளையே தேர்வு செய்துள்ளனர்.இந்த ஆண்டு, மிகவும் குறைவாக மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இதை, ஒரு முன்னெச்சரிக்கையாக, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கருத வேண்டும்.இன்ஜி., கல்லுாரிகளின் தரத்தை மேம்படுத்தவும், வேலைவாய்ப்பு கிடைக்கும் வழிகளை உருவாக்கவும், நடவடிக்கைகள் தேவை.இன்ஜினியரிங் பாடத்திட்ட மாற்றம், தேர்வு முறையில் சீர்திருத்தம், கற்பித்தல் முறை மாற்றம் போன்றவற்றை பரிசீலிக்க வேண்டும்.தனியார் கல்லுாரிகளை பொருத்தவரை, ஆராய்ச்சி மையங்கள் அமைப்பதுடன், நவீன கற்பித்தல் முறைகளை ஏற்படுத்துவது போன்றவற்றில், தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (23)
Reply
Reply
Reply