ராமநாதபுரம்:விபத்தில் முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட ஏழை தொழிலாளிக்கு கலெக்டர் விருப்ப நிதியில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.கடலாடி தாலுகா மேலக்கிடாரத்தை சேர்ந்தவர் சவுந்திரபாண்டியன்,40. ஏழை தொழிலாளி. கல்யாணி என்ற மனைவியும், தனராஜ்,13, உதயா,6, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.மூன்றாண்டுகளுக்கு முன் வயல்காட்டில் லாரியில் வைக்கோல் லோடு ஏற்றியபோது தவறி விழுந்து பின் கழுத்து எலும்பு முழுமையாக முறிந்தது. எழுந்து உட்கார முடியாத நிலையில் படுத்த படுக்கையானார்.துாத்துக்குடி, மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் பலனில்லை. சுய நினைவு இருந்தாலும் எழுந்திருக்க முடியாத நிலையில் முதுகுத்தண்டுவடத்தில் பாதிப்பு அதிகமானது. வறுமையால் வாடிய குடும்பத்தினர் உதவித்தொகை கேட்டு கடலாடி தாலுகா அலுவலகத்தில் கடந்த மார்ச் 20ல் விண்ணப்பித்தனர். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மனு கொடுக்க வந்த போது கலெக்டர் நடராஜன் நேரில் அவர்களிடம் வந்து குறைகளை கேட்டார். கலெக்டர் விருப்ப நிதியில் இருந்து 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை யை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE