நீலகிரிக்கு 150வது ஆண்டு கொண்டாட்டம்| Dinamalar

நீலகிரிக்கு 150வது ஆண்டு கொண்டாட்டம்

Added : ஆக 20, 2018 | |
ஊட்டி:ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில், 1868ம் ஆண்டு, நீலகிரி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நீலகிரியின் முதல் ஆணையாளராக, ஜேம்ஸ் வில்கின்சன் பிரீக்ஸ் இருந்துள்ளார்.பிரீக்ஸ் மரணமடைந்திற்கு பின், பள்ளியின் பெயரில் ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. அதன்பின், ஊட்டியில் பிரீக்ஸ் மெமோரியல் பள்ளி கட்டப்பட்டது.இந்நிலையில், நீலகிரி உருவாகி, 150 ஆண்டை

ஊட்டி:ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில், 1868ம் ஆண்டு, நீலகிரி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. நீலகிரியின் முதல் ஆணையாளராக, ஜேம்ஸ் வில்கின்சன் பிரீக்ஸ் இருந்துள்ளார்.பிரீக்ஸ் மரணமடைந்திற்கு பின், பள்ளியின் பெயரில் ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது. அதன்பின், ஊட்டியில் பிரீக்ஸ் மெமோரியல் பள்ளி கட்டப்பட்டது.
இந்நிலையில், நீலகிரி உருவாகி, 150 ஆண்டை கொண்டாடும் வகையிலும், பிரீக்ஸ் நினைவு தினத்தை அனுஷ்டிக்கும் வகையிலும், ஊட்டி அரசு அருங்காட்சியகத்தில், பிரீக்ஸ் சேகரித்த பழங்கால பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால், தலைமை வகித்து, ஜேம்ஸ் வில்கின்சன் பிரீக்சின் வாழ்க்கை வரலாறு குறித்து பார்வையாளர்கள் மத்தியில் பேசினார். பின்பு, அங்குள்ள அரிய பொருட்கள்; 'பாடம்' செய்யப்பட் விலங்குகளின் உருவங்களை, சிறுவர்கள் உட்பட பலரும் பார்வையிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X