காளையார்கோவில் வாரச்சந்தையில் முத்திரையிடாத தராசு, எடைக்கற்கள் பறிமுதல்

Added : ஆக 20, 2018 | |
Advertisement
காளையார்கோவில்:காளையார்கோவில் வாரச்சந்தையில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் எடை குறைவாக பழங்களை விற்பனை செய்த வியாபாரிக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. முத்திரையிடாத தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.காளையார்கோவிலில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகள் எடை குறைவாக உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாக

காளையார்கோவில்:காளையார்கோவில் வாரச்சந்தையில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் எடை குறைவாக பழங்களை விற்பனை செய்த வியாபாரிக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. முத்திரையிடாத தராசுகள், எடைக்கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.காளையார்கோவிலில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகள் எடை குறைவாக உணவுப்பொருட்களை விற்பனை செய்வதாக கலெக்டருக்கு தொடர்ந்து புகார் வந்தன.காளையார்கோவில் வாரச்சந்தையில் சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி தலைமையில் அனைத்து சார்நிலை அலுவலர்களும் இணைந்து திடீர் சோதனை நடத்தினர். அப்போது ஒரு கிலோவுக்கு 200 கிராம் எடை குறைவாக பழங்களை விற்பனை செய்த பழக்கடை வியாபாரி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முத்திரை இடப்படாத மின்னணு தராசுகள், மேஜை தராசுகள், விட்டத்தராசுகள், எடைக்கற்கள், தரமற்ற படிகள் என மொத்தம் 164 எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டன.சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் மைவிழிச்செல்வி கூறுகையில், ''வியாபாரிகள் முத்திரையிடப்படாத எடைக்கற்களை பயன்படுத்தி எடையளவு குறைத்து விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். முத்திரையிட்ட எடையளவுகளை அதற்கான சான்றிதழ்களுடன் வைத்திருக்க வேண்டும். ஆய்வின்போது அவற்றை காண்பிக்க வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X