சென்னை மருத்துவமனைகளில் உலகத்தர சிகிச்சை; சென்னை டே - 379| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை மருத்துவமனைகளில் உலகத்தர சிகிச்சை; சென்னை டே - 379

Updated : ஆக 21, 2018 | Added : ஆக 21, 2018 | கருத்துகள் (2)
Advertisement
சென்னை மருத்துவமனை,ல் உலகத்தர சிகிச்சை, சென்னை  டே - 379

இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு நோயாளிகளும் சிகிச்சைக்காக, நம்பிக்கையோடு வரும்இடமாக, சென்னை உள்ளது. இது, இந்தியாவின் மருத்துவ மையமாக செயல்படுகிறது. இதற்கு, உலகத்தரமான சிகிச்சை, அனுபவமுள்ள மருத்துவர்கள், குறைந்த செலவு, தங்கும் வசதி, 'விசா' கிடைப்பதில் எளிய நடைமுறை உள்ளிட்டவை, காரணங்களாக கூறப்படுகின்றன.'தனியார் மருத்துவமனைகளில் தான், சிறந்த சிகிச்சை கிடைக்கிறது' என, அதிக செலவு செய்ய தயாராகஇருக்கும் வெளிநாட்டினரும், செல்வந்தர்களும், அந்த மருத்துவமனைகளை நாடுகின்றனர்.அதேசமயம், தனியார் உயர் மருத்துவமனைகளை விட, எந்த விதத்திலும் குறைவில்லாத சிறந்த சிகிச்சையை, அரசு மருத்துவமனைகள், ஆரவாரமில்லாமல், ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு செய்து வருகின்றன.
ராஜிவ், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம், கஸ்துாரிபாய், ராயப்பேட்டை, எழும்பூர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, ஓமாந்துாரார் பல்நோக்கு மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனை, தாம்பரம் காசநோய் மருத்துவமனை போன்றவற்றின் சாதனைகள் அளப்பறியவை. சென்னையில் உள்ள, அனைத்து அரசு மருத்துவமனைகளும்,தினமும், விளம்பரமின்றி,நுாற்றுக்கணக்கான மருத்துவ சாதனைகளை செய்து கொண்டே இருக்கின்றன. அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை; தாம்பரம், தேசிய சித்தா மருத்துவமனைகள் ஆகியவை, அலோபதி மருத்துவத்திற்கு சவாலாக, மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.அதேபோன்று, அப்பல்லோ, ராமச்சந்திரா, அகர்வால்ஸ் கண் மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவமனைகளும், உலகத்தரமான சிகிச்சையை வழங்கி வருகின்றன. இங்கு சிகிச்சை பெற, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.


ராஜிவ் அரசு மருத்துவமனை

கடந்த, 1664 நவ., 16ல், கிழக்கிந்திய நிறுவனத்தாருக்கு, மருத்துவம் செய்வதற்காக, புனித ஜார்ஜ் கோட்டையில் துவங்கப்பட்டு, 1772ல், தரம் உயர்த்தப்பட்டு, சென்ட்ரலுக்கு மாற்றப்பட்டது.தற்போது, 3,500 படுக்கைகள், 800டாக்டர்கள், 890 நர்ஸ்கள், 750 உதவியாளர்களோடு, ஆசியாவிலேயே மிகப்பெரியமருத்துவமனையாக, ராஜிவ் அரசுமருத்துவமனை இயங்கி வருகிறது.இங்கு, தினமும், 12 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும்,3,000 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், 169 கோடி ரூபாய்செலவில், மருத்துவமனை தரம் உயர்த்தும்பணிகள் நடைபெறுகின்றன.


எழும்பூர் கண் மருத்துவமனை

உலகிேலயே, கண்களுக்கு என, லண்டனில், மார்பீல்டு மருத்துவமனை முதன் முதலில் துவங்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக, 1819ல், டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன் என்பவரால், சென்னை, ராயப்பேட்டையில், 'மெட்ராஸ் ஐ இன்பர்மரி' என்ற பெயரில், உலகின் இரண்டாவது கண் மருத்துவமனை துவங்கப்பட்டது. பின், இட பற்றாக்குறை காரணமாக, 1844ல், எழும்பூருக்கு மாற்றப்பட்டது. இந்த மருத்துவமனையின் பெயரை, 44 ஆண்டுகள் கழித்து, அரசு கண் மருத்துவமனை என, ஆங்கிலேய அரசு மாற்றியது.தற்போது, பேச்சு வழக்கில், எழும்பூர் கண் மருத்துவமனை என்றே அழைக்கப்படுகிறது. சென்னை மருத்துவ கல்லுாரியுடன் இணைக்கப்பட்டு, 1942ல் இருந்து, கண் மருத்துவபடிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.


ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை

தி.மு.க., ஆட்சியில், சென்னை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 479 கோடி ரூபாய் செலவில், புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டது. 2011ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அந்த கட்டடம், ஏழை மக்களுக்கு, உயர் சிகிச்சை அளிக்கும் வகையில், அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக, அ.தி.மு.க., அரசு மாற்றியது. இதற்காக, 143 கோடி ரூபாயில், வடிவமைப்புகள் மாற்றப்பட்டன. இதயம், நரம்பியல், புற்றுநோய், நரம்பியல், கை - முகம் சீரமைப்பு உட்பட, 10 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' துறைகள், 400 படுக்கை வசதிகளுடன், 2014ல் செயல்பட துவங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து, அரசு,தனியார் மருத்துவமனைகளில் இருந்து, பரிந்துரைக்கப்படுவோருக்கு, இங்கு உயர்சிகிச்சைகள் கிடைக்கின்றன. மேலும், காயமடையும் விளையாட்டு வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும், நவீன மருத்துவ சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்த, முழு உடற்பரிசோதனை மையம், முதன் முறையாக, ராஜிவ்அரசு மருத்துவமனையில், தமிழக அரசுசார்பில் துவங்கப்பட்டது. இதில், 1,000 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை, பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். அதை தொடர்ந்து, ஓமந்துாரார் அரசுபல்நோக்கு மருத்துவமனையிலும், முழு உடற்பரிசோதனை மையம் துவங்கப்பட்டது.


ஸ்டான்லி அரசு மருத்துவமனை

மைசூர் ஐதர் அலிக்கும், ஆங்கிலேயருக்கும் இடையே நடந்த போரில், சென்னை மக்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாயினர்.இதனால், 1782ல், மணியக்காரர்என்று அழைக்கப்பட்ட, அறச்சீலர்,ராயபுரத்தில் இருந்த, தன் தோட்டத்தில்,போரில் காயமடைந்தோருக்கு, கஞ்சிவழங்குவதற்காக, ஒரு சத்திரத்தைநிர்மாணித்தார். மணியக்காரர் என்பதுஆங்கிலேயர்களால், மோனிகர் என்றுஉச்சரிக்கப்பட்டதால்,மோனிகர் சத்திரம் என, அழைக்கப்பட்டது.அதன்பின், 1799ல், டாக்டர் ஜான்அண்டர்வுட் என்பவர், மண்டபத்தில்,மருத்துவமனையை துவங்கினார். அப்போது, 'கஞ்சித்தொட்டி மருத்துவமனை' என,மக்களால் அறியப்பட்டது.பின், 1808ல், மண்டபத்தின் நிர்வாகத்தையும்,மருத்துவமனையின் நிர்வாகத்தையும், சென்னை அரசு ஏற்றது. அதன்பின், ராயபுரம் மருத்துவமனை என்றானது.இந்நிலையில், ஜார்ஜ் ப்ரெட்ரிக் ஸ்டான்லி என்பவர், சென்னை மாகாண கவர்னராக இருந்தபோது, 1933ல், 72 பேருடன் மருத்துவ படிப்பு துவங்கப்பட்டது.அதனால், 1936ம் ஆண்டு, ஜூலை,2ல் ஸ்டான்லி மருத்துவமனை என,பெயர் மாற்றம் செய்யப்பட்டது.தற்போது, இங்கு, ஆண்டுக்கு, 250 மாணவர்கள்எம்.பி.பி.எஸ்., படித்து வருகின்றனர்.

உடல் உறுப்பு தானம்ராஜிவ் மருத்துவமனையில்,30 துறைகள் உள்ளன. இதில்,மேம்படுத்தப்பட்ட, 20 துறைகளில், நவீனசிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.தென்மாநிலங்களில் முதன் முறையாக, அரசு மருத்துவமனையில், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, இங்கு தான் நடந்தது. அவசர கால பிரிவு அதிநவீன வசதியுடன் செயல்படுவதால், ஜனவரி முதல் ஜூன் வரையான கணக்கின்படி,2.6 சதவீத இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்புகள் தானத்தில்,மாநிலத்திலேயே முதலிடத்தில் உள்ளது.
ஜெயந்தி,
ராஜிவ் அரசு மருத்துவ கல்லுாரிமருத்துவமனை டீன்


கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

நாட்டிலேயே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, முதன் முதலில், 1995ல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தான் நடந்தது. தமிழகத்தில், வேறு எந்த அரசு மருத்துவமனையிலும், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள்செய்யப்படுவதில்லை.நாட்டிலேயே, அரசு மருத்துவமனையில்முதன்முறையாகவும், தமிழகத்தில்,அனைத்து மருத்துவமனைகளிலும்முதன் முறையாக, கை மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இங்கு,அழகியல் துறை, தோல் வங்கி, ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம் போன்றவை உள்ளன.
பொன்னம்பல நமச்சிவாயம்
ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன்

தீக்காயங்களுக்கு என, சிறந்த மருத்துவமனையாக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை உள்ளது. தமிழகம்முழுவதும் மட்டுமில்லாமல், அண்டை மாநிலமான, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும், பரிந்துரைக்கப்படும் நோயாளிகளுக்கு, சிறந்த மருத்துவத்தை வழங்கி வருகிறோம்.மேலும், அதிநவீன தோல் வங்கியும், மருத்துவமனையில் சிறப்பாக செயல்படுகிறது.
வசந்தா மணி,
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன்
- நமது நிருபர் -

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s. raju - chennai,இந்தியா
21-ஆக-201811:31:42 IST Report Abuse
s. raju Many North Indian citizens do visit Chennai Hospitals. As said, Chennai is the best place for medical treatments at affordable cost. State of mind should change among the citizens. More often, those affordable citizens always want "special treatment" as soon as they enter into the hospital (without waiting). Otherwise, it is all fine. government may tap these as potential revenue segment as well.
Rate this:
Share this comment
Cancel
C.Elumalai - Chennai,இந்தியா
21-ஆக-201810:21:02 IST Report Abuse
C.Elumalai அரசியல் தலைவர்கள், முதல்வர் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து பொதுமக்கள்க்கு நம்பிக்கை ஊட்டவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X