குடும்பத்தை கவனிக்காத போலீசு...கூடி நடத்துறாங்க போலி ஆபீசு!

Added : ஆக 21, 2018
Advertisement
கேரள வெள்ள நிலவரத்தை 'டிவி'யில் பார்த்து கொண்டிருந்தாள் மித்ரா. அவளது வீட்டுக்கு வந்த சித்ரா, ''ஹாய்... மித்து. என்னடி பார்த்துட்டிருக்க. ஓ.. கேரள வெள்ளமா?,''என்றாள்''ஆமாக்கா. கடவுளின் தேசம், தண்ணீரில் மிதப்பதை பார்த்தால் பாவமாக இருக்கிறது,''''ம்..ம்.. என்ன பண்றது. இயற்கையை வெல்ல யாரால முடியும். இந்தியா முழுக்க கேரளாவுக்கு நிதியுதவி கொடுக்கறது ஆறுதலா இருக்கு.
 குடும்பத்தை கவனிக்காத போலீசு...கூடி நடத்துறாங்க போலி ஆபீசு!

கேரள வெள்ள நிலவரத்தை 'டிவி'யில் பார்த்து கொண்டிருந்தாள் மித்ரா. அவளது வீட்டுக்கு வந்த சித்ரா, ''ஹாய்... மித்து. என்னடி பார்த்துட்டிருக்க. ஓ.. கேரள வெள்ளமா?,''என்றாள்
''ஆமாக்கா. கடவுளின் தேசம், தண்ணீரில் மிதப்பதை பார்த்தால் பாவமாக இருக்கிறது,''''ம்..ம்.. என்ன பண்றது. இயற்கையை வெல்ல யாரால முடியும். இந்தியா முழுக்க கேரளாவுக்கு நிதியுதவி கொடுக்கறது ஆறுதலா இருக்கு. அதேமாதிரி தமிழகத்துலயும் பல இடங்களில், மக்கள் வசூல் பண்ணி, அனுப்புறாங்க,''
''அக்கா.. நீங்க வசூல்னு சொன்னதும், எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. சில 'டுபாக்கூர்' பிரஸ் மாசாமாசம், கவர்மென்ட் ஆபீசில், வசூல் பண்றாங்க. அதே மாதிரி, வடக்கு தாசில்தார்கிட்ட போய் கேட்டிருக்காங்க,''''அவர் கொடுத்தாரா?'' ஆர்வமாக கேட்டாள் சித்ரா. 'ம்ஹூம்னு கைய விரிச்சிட்டாராம். 'எனக்கு எங்கிருந்தும் வராது; நானும் யாருக்கும் கொடுக்க மாட்டேன். ஏதாவது சர்டிபிகேட் வேணும்னா சொல்லுங்க. தர்றேன்'னு 'கறாரா' சொல்லி அனுப்பிட்டாராம்''''அப்டினா, உங்களை பத்தி என்ன வந்தாலும் கேட்கக்
கூடாது'ன்னு மிரட்டியதற்கு, ''மடியில கனமில்ல; எனக்கு வழியில பயமும் இல்ல. என்ன வேணும்னாலும் எழுதிக்கோங்க'ன்னு, நெத்தியடியா சொல்லி அனுப்பிட்டாராம்,''''பரவாயில்லயே. அப்ப 'வெரிகுட்' தாசில்தாருன்னு சொல்லு. அதுசரி, தாலுகாவுக்குள்ளயே ஒரு 'குட்டி' தாலுகா ஆபீஸ் இயங்கிட்டு இருக்கு. கலெக்டர் அவங்களை பிடிச்சார்னா பரவாயில்லையே'' என்றாள் சித்ரா.
''என்னக்கா சொல்றீங்க, 'குட்டி' தாலுகா ஆபீசா?'' புரியாமல் கேட்டாள் மித்ரா.''மாஜி' துணை தாசில்தார்கள், வி.ஏ.ஓ.,க்கள் சிலர் சேர்ந்து, பி.என்., ரோடு, புஷ்பா தியேட்டர் பக்கத்துலதான், 'குட்டி' தாலுகா ஆபீசை நடத்திட்டு இருக்காங்களாம். எல்லா 'சீல்' கட்டையும், ஏன், அரசாங்க முத்திரையான கோபுர 'சீல்' கட்டையும் வெச்சிருக்காங்களாம்,''''இப்ப 'இ-சேவை' மையத்துல தானே சர்டிபிகேட் கொடுக்கறாங்க. அங்க வேலை இல்லையேக்கா''''போன மாசம் வரைக்கும், 'குட்டி' தாலுகா ஆபீஸ் நல்லாத்தான் இயங்கிட்டு இருந்துச்சாம். இப்ப, 'என்.ஓ.சி.,' கொடுக்கற வேலைய மட்டும் ஜரூரா செய்றாங்களாம். இதுபத்தி ரெவின்யூ டிபார்ட்மென்ட்டுக்கு நல்லா தெரிஞ்சும்கூட, 'சம்திங்' வாங்கிட்டு, கம்முன்னு இருக்காங்களாம்,''''கலெக்டர் பார்த்து, நடவடிக்கை எடுத்தால்தான் உண்டுன்னு, சிலர் வெளிப்படையாகவே பேசுறாங்க,'' என்றாள் சித்ரா. 'அக்கா... இந்த 'ரேஷன் கடையில நடக்கற வசூல் வேட்டை பத்தி கேள்விப்பட்டீங்களா?''''அடடே... இல்லயே. சொல்லு மித்து. அங்க யாரு வசூல் பண்றாங்க,''''வேற யார்? அதிகாரிகள்தான் போவாங்க. ரேஷன் கடையை, ரெவின்யூ, கூட்டுறவுத்துறை, உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவுன்னு, மூணு அரசுத்துறைகள் கண்காணிக்கின்றன. ஒவ்வொரு அதிகாரியும், வாராவாரம் போயிடறாங்க. 'ஆதார்' இணைக்கறதுக்கு முன்னாடி, கள்ள மார்க்கெட் விற்பனையில, கடைக்கு, 5,000 ரூபாய் வரைக்கும் கிடைக்குமாம்,''''இப்ப ஆதார் 'லிங்க்' ஆன பிறகு, எந்த 'கோல்மாலும்' செய்ய முடியாம போச்சு. இருந்தாலும், 'ஆடிட்' எழுதிடுவேன்'னு மிரட்டியே, ஒரு கடைக்கு 300 ரூபாய் கறந்திடறாங்களாம். ரேஷன் கடைக்கு வர்ற மூட்டை எல்லாமே எடை குறைவா இருக்கறதால, 'ஆடிட்' போட்டாலும், 'பைன்' கட்டியாகணுமேன்னு பயந்துட்டு, 'கப்பம்' கட்டிட்டு இருக்கோம்'னு ஊழியர்கள் கண்ணீர் விடறாங்க'' என்றாள் மித்ரா.''ஆக மொத்தம், என்னதான், 'இ-சேவை' வந்தாலும், அதிகாரிகளை ஒண்ணும் செய்ய முடியாது போல,'' என்று 'உச்' கொட்டினாள் சித்ரா.
''அக்கா.. இண்டஸ்ட்ரியில் ஒரு விஷயம் பரபரப்பா போயிட்டிருக்கு. திருப்பூரிலுள்ள பனியன் கம்பெனிகள், லட்சம் முதல், பல கோடி ரூபாய் முதலீட்டில் மெஷின்களை வாங்குறாங்க. மத்திய அரசு, 'ஏ- டப்' அப்டிங்கிற திட்டத்தில், மெஷின் வாங்கினால், அதன் மதிப்பில், 15 பர்சென்ட் மானியமாக தர்றாங்க,''''சரி... இதிலென்ன இருக்குடி''''சொல்றேன் கேளுங்க. டெக்ஸ்டைல் கமிட்டி ஆபீசர் ஓ.கே., சொன்னால் மட்டுமே, மானிய தொகை வருமாம். இதை சாதகமாக பயன்படுத்தி, சில ஆபீசர்கள், பேரம் பேசுறாங்களாம். மானிய தொகையில், பத்து பர்சென்ட் கொடுத்தால் மட்டும் ஓ.கே., பண்றாங்களாம்,''''இந்த டீலுக்கு ஒத்து வரலைன்னா, சின்னச்சின்ன மிஸ்டேக்ைஸ காரணம் காட்டி, நிறுவனத்தினருக்கு, மானிய தொகை கிடைக்கவிடாமல் தடுக்கின்றனர்; இழுத்தடிக்கின்றனர். ஒரு சிலர் 'உங்களுக்கு எதற்கு பங்கு தரணும்'ன்னு சீறுகின்றனர்.'' ''கவர்மென்ட் உங்களுக்கு சும்மாதானே கொடுக்குது. ஒருவேளை, மானியமே இல்லைன்னா, என்ன செய்வீங்கன்னு' அதிகாரிகள் கேட்டா, கிடைக்கறதும் போயிடும்,னு 'கப்பம்' கட்டுறாங்களாம்,'' என்றாள் மித்ரா.''எல்லா மட்டத்தில யும் 'லஞ்சம்' தலைவிரிச்சு ஆடுதுன்னு சொல்லு, மித்து,''அதற்குள், மித்ராவின் அம்மா கொடுத்த டீயை இருவரும் குடித்து முடித்தனர். ''இன்ஸ்பெக்டரை பத்தி, அவங்க மனைவியே, கமிஷனர்கிட்ட கம்ப்ளைன்ட் கொடுத்தாங்களாம். உங்களுக்கு தெரியுமா?'' மித்ரா கேட்டாள்.
''ஏன் தெரியாம இருக்குமா? 'சிட்டி' போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் வீட்டுக்கே போறதில்லையாம். இதனால, பொறுத்து பார்த்த அவரது மனைவி, கமிஷனர் அலுவலகத்துக்கு போய், 'என் வீட்டுக்காரர், வீட்டுக்கே வருவதில்லை. குடும்ப செலவுக்கு பணம் கொடுக்கறதும் இல்லை. பையன் படிப்பு செலவுக்காக வாங்கின கடனை கூட அடைக்க மாட்டேங்கறார்'ன்னு புகார்களை அடுக்கினாங்களாம்,''''ரெண்டு, மூணு மாசத்துக்கு முன், இதே பிரச்னையில் சிக்கிய இன்ஸ்பெக்டருக்கு, உயரதிகாரிகள் அட்வைஸ் செஞ்சதால், வீட்டுக்கு போயிட்டு வந்திட்டிருக்காரு. மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுன கதையா ஆயிட்டாரு போல தெரியுது,'' ''அக்கா... கஞ்சா வியாபாரி மேட்டர் தெரியுமா?''''இல்லையே... அது என்ன விஷயம் மித்து?''''சிட்டியில், மெயின் சப்ளையராக உள்ள ஒரு நபரை, ஐ.எஸ்., போலீசார், பொறி வைச்சு பிடிச்சு ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். ஆனால், அந்நபர் மீது பேருக்கு, கேஸ் போட்டு உள்ள தள்ளினாங்க. உள்ள போன அந்நபர், வெளியே வர்ற மாதிரிதான் செக்ஷன் போட்டிருக்காங்க,'' ''இந்த வியாபாரி, கே.வி.ஆர்., நகர், மண்ணரை, கருவம்பாளையம் உட்பட 'சிட்டி'யில் பல இடங்களில் சப்ளை செய்வது போலீசாருக்கு நல்லாவே தெரியும். இதை, கஞ்சா வியாபாரியே சொல்றாராம். உள்ளே போன நபருக்கு, சில போலீசார், தோழமையா இருப்பதால், 'மாயமான' வியாபாரி, நல்லாவே 'டிமிக்கி' கொடுக்கிறாராம்,''''இந்த மாதிரி கஞ்சா, லாட்டரி, 'தண்ணீ'' மேட்டரில், போலீசின் ஆசியில்லாம, எதுவும் நடக்காதுன்னு, சின்னப்புள்ளைய கேட்டா கூட சொல்லும். இந்த மாதிரி 'இல்லீகல்' மேட்டரை, கமிஷனர் கண்டுகிட்டா பரவாயில்ல தான். ஏங்க்கா.. நான் சொல்றது சரிதானே,''''யெஸ்... மித்து,'' என்ற சித்ரா, ''போலீஸ் கூட போட்டி போடற அளவுக்கு, ரெவின்யூ செயல்பாடுகளும் இருக்குது தெரியுமா?'' என்றாள்.''கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க''''தாரா.... தாலுகாவில், சட்டவிரோதமாக மணல் திருட்டு எக்கச்சக்கமாயிடுச்சாம். ராத்திரி 'புல்லா' மணல் திருடிட்டு இருப்பது குறித்து, யாராவது அதிகாரிக்கு போன் பண்ணினால், எந்த நடவடிக்கையுமே இல்லையாம். அதேநேரம், யார் புகார் சொன்னாங்களோ, அவங்க நம்பரை, மணல் மாபியாகிட்ட கொடுத்திடுவாராம். இப்டியே வண்டி ஓடுதாம்,''''இது என்னக்கா, கொடுமையா இருக்கு. இவருக்கு, அந்தம்மா பரவாயில்லையே,''''இதனால, நொந்து போன மக்கள், கிராம சபை கூட்டத்தில்,அவரை, 'டிரான்ஸ்பர்' செய்யுங்கன்னு, மனு கொடுத்திருக்காங்க. இதுக்கு அப்புறமாவது, அந்த 'சிவமைந்தன்' திருந்துவாரா?'' என்றாள் மித்ரா.''ஓ.கே. மித்து, நான் கெளம்பறேன்,'' என கூறிய சித்ரா புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X