ரபேல் விவகாரத்தில் ராகுல் தவறான தகவல் : அனில் அம்பானி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரபேல் விவகாரத்தில் ராகுல் தவறான தகவல் : அனில் அம்பானி

Added : ஆக 21, 2018 | கருத்துகள் (63)
Advertisement
ராகுல், ரபேல், அனில் அம்பானி, ரிலையன்ஸ்,  ரபேல் போர் விமானம், காங்கிரஸ் தலைவர் ராகுல் ,  ரபேல் விவகாரம், டசால்ட் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், பிரான்ஸ் ரபேல் போர் விமானம், ராகுல் காந்தி, 
Rahul, Rafael, Anil Ambani, Reliance, Rafael fighter plane, Congress leader Rahul, Rafael affair, Dausault,France Rafael fighter plane, Rahul Gandhi,

மும்பை : ரபேல் போர் விமானம் கொள்முதல் விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் தவறான தகவல் அளித்து வருவதாக தொழிலதிபர் அனில் அம்பானி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக, ராகுலுக்கு, ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி கடிதம் எழுதியுள்ளார். அதில் அனில் அம்பானி குறிப்பிட்டுள்ளதாவது, ரபேல் போர்விமான தயாரிப்பில் ரிலையன்ஸ் நிறுவனமோ அல்லது ரிலையன்ஸ் நிறுவனம், டசால்ட் நிறுவனத்துடன் இணைந்தோ செயல்படவில்லை. ரபேல் விவகாரத்தில் நடைபெற்றதாக எழுந்த முறைகேட்டில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு தொடர்பில்லை.

இந்தியாவின் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட 36 ரபேல் விமானங்களும் பிரான்சிலேயே 100 சதவீதம் தயாரிக்கப்பட்டுள்ளன. விமானங்கள் தயாரிக்கப்பட்ட பின்னர் அவை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த போர் விமானங்கள் தயாரிப்புச் செலவில் ஓரு ரூபாய் கூட ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்களிப்பு இல்லை.

ஆனால், இவ்விவகாரத்தில்,ராகுல் தொடர்ந்து தவறான தகவல்களையே அளித்து வருகிறார். இதன்மூலம், அவரை சில பன்னாட்டு நிறுவனங்கள் அவரை தவறான பாதைக்கு வழிநடத்தி செல்வது புலனாவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா
21-ஆக-201822:48:51 IST Report Abuse
GB.ரிஸ்வான் அம்பானி நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அவனுக்கும் வாலாட்டுவாய் நீ
Rate this:
Share this comment
Cancel
Sahayam - cHENNAI,இந்தியா
21-ஆக-201822:05:12 IST Report Abuse
Sahayam அனில் அம்பானிக்கு என்ன ஆர்டர் கொடுக்க பட்டு உள்ளது ??
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
21-ஆக-201819:51:44 IST Report Abuse
madhavan rajan காங்கிரசுக்கு தரவேண்டிய கமிஷனை அவர்களுக்கு கொடுத்துவிட்டால் அவர்கள் ஏன் பேசப்போகிறார்கள்? அவர்களுக்கு கமிஷன் தராமல் மொத்த கமிஷனையும் வேறு யாரோ அபகரித்தால் அவர்களுக்கு கோபம் வராதா? அறுபது வருட ஆட்சியில் எவ்வளவு டீலிங் பார்த்திருப்பார்கள். அவர்களையே ஏமாற்றப்பார்க்கிறீர்களே. இது நியாயமா?
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
23-ஆக-201804:29:38 IST Report Abuse
Anandanஅப்போ பிஜேபி சென்ற ஆட்சியில் கமிஷன் வராத கோவம்தான் அவர்களை பேசவைத்ததா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X