டெல்டாவில் வறண்டு கிடக்கும் 2,000 நீர் நிலைகள்: பொங்கி பாயும் காவிரியால் புண்ணியமில்லை Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
டெல்டாவில் வறண்டு கிடக்கும் 2,000 நீர் நிலைகள்
பொங்கி பாயும் காவிரியால் புண்ணியமில்லை

தஞ்சாவூர், டெல்டா மாவட்டங்களில், காவிரி கரைபுரண்டு ஓடும் நிலையில், மற்றொரு புறம், 2,000த்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகள், தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.

டெல்டா, வறண்டு   நீர் நிலைகள், பொங்கி பாயும் காவிரி, புண்ணியமில்லை


திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலுார் போன்ற டெல்டா மாவட்டங்களில், ஆறு ஆண்டுகளாக, காவிரி தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் பாதிக்கப் பட்டது. இந்த மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் வறண்டு போயின.இந்தாண்டு நிலைமை மாறி, கர்நாடகாவில் பெய்த கடும் மழை காரணமாக, மேட்டூர் அணை, 2முறை நிரம்பியது. அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு, ஜூலை, 19ல் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அடுத்து வந்த நாட்களில், தொடர் மழையால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உபரி நீர் திறக்கபட்டு, காவிரி, கொள்ளிடத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.டெல்டா பகுதியில், பொதுப்பணித் துறைகட்டுப்பாட்டில்,820 ஏரி, குளங்கள்

உள்ளன.தற்போது, கல்லணை கால்வாய்பகுதியில், 15 ஏரி, குளங்கள் மட்டும் தான்முற்றிலும் நிரம்பி உள்ளன. 100க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களுக்கு தற்போது தான் தண்ணீர் செல்கிறது. மற்ற ஏரி, குளங்களை இதுவரைதண்ணீர் எட்டி கூட பார்க்க வில்லை. அவை, வறண்டு கிடக்கின்றன.

தஞ்சை மாவட்டத்தில், கிராம பஞ்சாயத்திற்குசொந்தமான, 1,200 ஏரிகள், குளங்கள் உள்ளன.நாகை, திருவாரூர் மாவட்டங்களில், 480க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளன. இந்த ஏரி, குளங்கள் காவிரி தண்ணீர் கொண்டு நிரப்பப்படும்.


சங்கிலி தொடர் போல குளங்களுக்கு தண்ணீர் செல் லும் வகையில், வாய்க்கால்கள், மதகுகள் அமைக் கப்பட்டுள்ளன.ஆனால், அவற்றிலும் தண்ணீர் நிரம்பவில்லை. இவ்வாறு, டெல்டா மாவட்டங் களில், 2,000த்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.

பல இடங்களில் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதா லும், பொதுப்பணித் துறை அதிகாரிகள், முறையாக துார்வாராததாலும் தண்ணீர் செல்ல வில்லை.
குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில், கடைமடை பகுதி யான பேராவூரணி, சேதுபாவா சத்திரம், மதுக்கூர் போன்ற பகுதிகளில், ஆற்றுநீரை குளம், ஏரிகளில் தேக்கி வைத்து தான் பாசனம் மேற் கொள்கின்றனர். ஆனால், இது வரை இங்கு தண்ணீர் வரவில்லை. இதனால், சாகுபடி பணிகளை எப்படி தொடங்குவது

Advertisement

என தெரியாமல், விவசாயிகள் கவலையில் உள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டம், வீரக்குடி, சொர்ணக்காடு,மணக்காடு, ரெட்டவயல் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் விட கோரி பேராவூரணியை அடுத்த சொர்ணக் காடு கடை வீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கடைமடை அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் நடந்தது.


200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற னர். பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன் பேச்சு நடத்தினார்.பின் பாசன வாய்க்காலை நேரில் ஆய்வு செய்தார்.
வீரக்குடி, சொர்ணக்காடு கிளை வாய்க்காலை துார்வாரி சுத்தம் செய்து முழு கொள்ளளவான 50 க.அடி தண்ணீர் முறை வைக்காமல் வழங்க அதிகாரிகள் எழுத்துபூர்வ ஒப்புதல் அளித்தனர் 1மணிநேரம் நடந்த மறியல் விலக்கி கொள்ளப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
22-ஆக-201818:29:40 IST Report Abuse

RAMESHwhat is the task for 100 nal velaivaipu thitam? if we use them properly we will not face this issue..

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-ஆக-201818:06:13 IST Report Abuse

Pugazh Vஎன்ன சார் நடக்குது இங்க??? அரசியல் க்கு அப்பாற்பட்ட ஆதங்கம் இது :: இந்த லட்சணத்துல இருந்து கிட்டா , காவிரி தண்ணீருக்காக கர்நாடகா கிட்ட மல்லுக்கு நிக்கறாய்ங்க ?

Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
22-ஆக-201818:05:24 IST Report Abuse

mindum vasanthamநீர் செல்லும் பாதை முற்றிலும் ஆக்கிரமிக்க பட்டுள்ளன , மதுர வைகை நதியின் ஒரு கலை நதியான கிருதுமால் நதி முற்றிலுமாக சாக்கடையை மாறியுள்ளது

Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X