தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்!

Added : ஆக 21, 2018
Advertisement
 தலைமைப்பண்பை வளர்த்துக்கொள்ளுங்கள்!


ன்றைய சமூக சூழ்நிலையில் இளைய சமூகம் பல்துறைகளில் வெற்றி பெற்று ஒளிமயமாக வாழ்வதற்கு தேவைப்படுகின்ற பண்புகளில் முக்கியமானதாக கருதப்பட வேண்டியது தலைமைப் பண்பு தான்.தலைவர் என்றால் அரசியல் தலைவர்களை மட்டும் குறிப்பிட முடியாது. பல தளங்களில் தலைவர்கள் உள்ளனர். இளைய சமூகம் தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இந்த தலைவர் என்கிற மதிப்புமிகு பொறுப்பை பெறுவதற்கு முக்கிய அடையாளமாக காட்டப்படுவது அவர்களுக்குள் இருக்கும் தலைமை பண்புதான்.


யார் தலைவர்?தலைவர்கள் ஆவதற்குஎந்தவொரு படிப்புமே காரணியாக அமைந்துவிடுவதில்லை. இந்தெந்தபாடதிட்டங்களை படித்தால் தான் தலைவர்கள் என்றும் இந்தெந்த துறைகளில் வேலை பார்த்தால் தான் தலைவர் என்ற அந்தஸ்து கிடைக்கும் என்ற விதியும் இல்லை. இதற்குமாறாக ஒவ்வொரு மனிதனும் தலைவர்களாக உருவாகிட முடியும். அதற்கு அவர்களுக்குள் இருக்கும் குணாதிசயங்களும், பண்புகளும், திறன்களும், அடிப்படையாக நம்பிக்கையுமே தான் அவர்களை தலைவர்களாக முன்நிறுத்துகிறது.ஒரு தலைவன் என்பவன் சமூகத்திலோ அல்லது அவர்கள் சார்ந்திருக்கின்ற தொழில் மற்றும் இதர சூழ்நிலைகளில் முன்மாதிரியான வாழ்க்கை முறையை பிரதிபலிக்க வேண்டும். உயரிய நெறிகளோடும், நல்ல பழக்கவழக்கங்களோடும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதமாக அவர்களது வாழ்க்கை முறை இருந்திட வேண்டும். மக்களை ஈர்க்கும் பேச்சாற்றலும் சுறுசுறுப்புமாக செயலாற்றும் திறன் கொண்டிருக்க வேண்டும்.மற்றவர்களை வழிநடத்திட கருணையும், அக்கறையும் இருந்திடல் வேண்டும். பொதுவாகவே ஒரு நல்ல தலைவன் என்பது தன்னை மீறி பொதுநலம் கலந்த வாழ்க்கை முறையை மேற்கொண்டு வாழ்பவர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.


வழிநடத்துவதுமனிதர்களை மனிதன் வழிநடத்துவது தலைமைப்பண்பு என எடுத்துக் கொண்டாலும், அவர்கள் செயலாற்றும் தளத்தில் இருக்கின்ற தனிச்சிறப்புகளையும் அதன் குறியீடுகளையும் கவனத்தில் கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது.ஆரம்பகாலத்தில் தொழில்துறையை எடுத்துக் கொண்டால் விவசாயம் சார்ந்த தொழில்கள் பிரதானமாக இருந்தது. பின்னர் தொழிற்சாலைகள் உருவாகி இயந்திரமயமான தொழில்கள் பெருகின. அதனையடுத்து கணிபொறி சார்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை முன்னிலை அடைந்துள்ளது. தொடர்ச்சியாக தலைமைப் பண்பும் ஒவ்வொரு தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றங்களை கண்டு இன்றைய அளவில் மிகவும் நுணுக்கமாக கவனம் பெற்று வருகின்றது. இளம்பருவத்தினர் எந்தளவில் தலைமை பண்பை வாழ்க்கையில் கையாளுகிறார்கள் என்பதை வைத்து தான் அவர்களது வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் தீர்மானிக்கப்பட இருக்கிறது.


சிறப்பம்சங்கள்*ஒரு நல்ல தலைவன் கேட்கும் திறனையும் அனுமானிக்கும் திறனையும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்கும் ஆற்றல் அவர்கள் பல்வேறு விஷயங்களை அனுமானித்து பரிசீலிக்கும் திறனையும் அளிக்கிறது. மனிதர்கள் சங்கமித்தால் பல்வேறு குணாதிசயங்களை வெளிப்படுத்துவார்கள். அத்தகைய தருணத்தில் ஒரு நல்ல தலைவன் அனைவரிடமும் கவனம் செலுத்திட வேண்டும். எவரையும் புண்படுத்தாமல் ஒவ்வொரு கருத்திற்கும் மரியாதை அளித்து அதை கையாள பக்குவப்பட வேண்டும்.* ஒரு நல்ல தலைவனுக்கு பேச்சாற்றல் சிறப்பாக இருந்திட வேண்டும். அவர்களின் கருத்துகள் அவர்களை சார்ந்திருக்கின்ற மற்றும் பொதுவான தளத்தில் இருக்கும் மக்களுக்கு மிகவும் தெளிவாக சென்றடைய வேண்டும். அவர்களது வார்த்தைகள் உணர்வுடன் உயிர் ஓட்டம் நிறைந்ததாக இருந்தால் தான் மக்களிடம் அதற்கு தக்கவாறு மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். நல்ல பேச்சாற்றலுக்குகருத்துக்களை தேவைப்படும் நேரத்தில் சுருக்கமாகவும், விளக்கமாகவும் எடுத்துரைக்கும் ஆற்றலோடு சிறந்த உடல்மொழி இருந்திடல் வேண்டும்.* ஒரு தலைவன் தெளிவான சிந்தனையுடன், உயரிய நெறிகளோடு வாழ்வியல் லட்சியங்களை கொண்டவராகதிகழவேண்டும். லட்சியங்களும் நெறிகளும் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட ஆளுமைகளாக இருக்கின்ற பொழுது அது மிக ஆழமாக மக்களை கவரக்கூடிய தலைமை பண்புக்கேற்ற அம்சமாகும்.* மனித வள சக்தியை முழுமையாக பயன்படுத்தி கொள்வதற்கு அவர்களுக்குள் நிர்வாகத்திறன் மேலோங்கி இருக்க வேண்டும்.* தலைவர்கள் எளிதில் அணுககூடியவர்களாகவும் நம்பகத்தன்மை உடையவராகவும் இருக்க வேண்டும். தலைமை என்பது ஏதோ சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை அடக்கி ஆளும் செயல்முறையல்ல. மாறாக தான் சார்ந்திருக்கிற குழுவின் மேம்பாட்டிற்காகவும், ஒற்றுமைக்காகவும் தேவையான செயல்களை விருப்பு வெறுப்பின்றி மேற்கொள்ளக்கூடிய பொறுப்பு. இதை முழுமையாக அடைவதற்கு நல்ல தலைவர்கள் என்றைக்குமே மற்றவர்களால் அணுகமுடிந்தவர்களாக இருத்தல் வேண்டும்.* தலைவர்கள் நேரத்தையும் நிகழ்வுகளையும் வெற்றிகரமாக கையாளும் ஆற்றல் படைத்தவர்களாக இருக்க வேண்டும். கால விரயம் என்றுமே தலைமை பண்பிற்கு எதிரானது. மிக குறைந்த நேரத்தில் எத்தகைய செயல்களை எல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்திட முடியும் என்பது தலைமை பண்பிற்கு சவால். அதே போன்று தான் அவர்கள் சார்ந்துள்ள சூழ்நிலைகளில் நடைபெறும் நிகழ்வுகளை கையில் எடுத்துக் கொண்டு தங்களின் தலைமை பண்பு ஆளுமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவதற்கு ஆயுதமாக இருக்க வேண்டும். ஒரு நல்ல தலைவனுக்கு பல்வேறு சக்திகளை ஒருங்கிணைக்கும் திறனும் அதன் மூலம் மகத்தான சாதனைகள் படைத்திடும் ஆற்றலும் இருந்திட வேண்டும்.


தேடுதல்


தலைமை பண்பு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளார்ந்து இருக்கின்ற ஆற்றல். இதை சிலர் வெகு எளிதாக கண்டுணர்ந்து விடுகிறார்கள். இன்னும் சிலர் அதை கண்டுபிடிக்காமலே ஏதோ வாழ்ந்துவிட்டு போவோம் என்று இருந்து விடுகின்றனர். எத்தனையோ விஞ்ஞான வளர்ச்சி அடைந்துவிட்ட நிலையில் மனிதவள ஆற்றலை சரியாக பயன்படுத்திக் கொள்ளாவிட்டால் எவருமே வாழ்க்கையில் வெற்றியடைவதில்லை.தலைமை பண்பினை வளர்த்துக் கொள்ள தேடுதல் இருந்திட வேண்டும். இதற்கு அடிப்படையாக ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கைக்கு முதலில் பொறுப்பேற்க வேண்டும். மற்றவர்கள் வழிநடத்துவதினால் தான் தங்களது வாழ்க்கை என்ற நிலையை தவிர்த்து தங்களது திறன்களும், எண்ணங்களும் தான் மூலதனம் என்று முழக்கமிட வேண்டும்.இவ்வாறு செய்கின்றவேளையில் வாழ்க்கையின் வெற்றி தன்னை மீறிய அளவிற்கு அவர்களை அழைத்துச் செல்லும். அது தான் தலைமை பண்பிற்கான தேடுதலின் முதல் படி. தேடலில் காலடி எடுத்து வைப்பவர்கள் எல்லாம் தங்களுக்குள் இருக்கின்ற ஆற்றலையும், திறனையும் தட்டி எழுப்பிவிட்டாலே தலைமுறையை கடந்து நிற்கும் வெற்றி அவர்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கும்.தலைமைப் பண்பை தட்டி எழுப்பி தடம் பதிக்க வா... இளைய சமூகமே!--நிக்கோலஸ் பிரான்சிஸ்தன்னம்பிக்கை எழுத்தாளர்மதுரை. 94433 04776

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X