கிர்கிஸ்தானில் தவிக்கும் இந்தியர்கள்: சிறப்பு விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு| Indian to take necessary steps for safety of Indians stranded in Kyrgyzstan | Dinamalar

கிர்கிஸ்தானில் தவிக்கும் இந்தியர்கள்: சிறப்பு விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு

Updated : ஜூன் 17, 2010 | Added : ஜூன் 17, 2010 | கருத்துகள் (6) | |
புதுடில்லி : கிர்கிஸ்தானில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்து வருகிறது. இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ்,டில்லியில் நிருபர் களிடம் கூறியதாவது:கிர்கிஸ்தானில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட பிரச்னைக்குரிய பகுதியிலிருந்து 105 இந்தியர்கள்,
India, safety, indians, kyrgyzstan, கிர்கிஸ்தான், இந்தியர்கள், சிறப்புவிமானம்

புதுடில்லி : கிர்கிஸ்தானில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் செய்து வருகிறது.

இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விஷ்ணு பிரகாஷ்,டில்லியில் நிருபர் களிடம் கூறியதாவது:கிர்கிஸ்தானில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட பிரச்னைக்குரிய பகுதியிலிருந்து 105 இந்தியர்கள், அந்நாட்டின் தலைநகரான பிஷ்கெக்கிற்கு பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.வர்த்தக மற்றும் சிறப்பு விமானங்கள் மூலம் அவர்கள் இந்தியாவிற்கு அழைத்து வரப்படுவர். நிதிப்பற்றாக்குறையால் டிக்கெட் வாங்க முடியாதவர்களுக்கு, டிக்கெட் எடுத்து தரவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.பிஷ்கெக் - டில்லி இடையே சிறப்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதால், இந்த விமானங்களில், அங்கிருந்து இந்தியா வர விரும்பும் மாணவர்களும் வரலாம். சில மாணவர்கள் கிர்கிஸ்தானிலேயே தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த மாணவர்களுக்கு, கிர்கிஸ்தான் சர்வதேச பல்கலைக் கழகத்தில் உள்ள விடுதிகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

கிர்கிஸ்தானில் இனக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட பகுதியில் இருந்து, கடந்த ஒரு வாரமாக வெளியே வர முடியாமல் தவித்த இந்தியர்கள், அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலம் ஓஷ் மற்றும் ஜலாலாபாத்திலிருந்து தலைநகர் பிஷ்கெக்குக்கு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டு பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் இந்தியா திரும்பவுள்ளனர்.அதுபோலவே, கோடை விடுமுறையையொட்டி, இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள், நிதிப் பற்றாக்குறையால் அவ்வாறு செல்ல முடியாத பட்சத்தில், அவர்களது பாஸ்போர்ட்டை இந்திய தூதரகத்தில் ஒப்படைக்க வேண்டும். அதன் பேரில், இந்தியா செல்வதற்கு மட்டும்டிக்கெட்தரப்படும்.

தனிப்பட்ட முறையில் டிக்கெட் தேவைப்படும் நபர்கள், தூதரக அலுவலகத்தில் தங்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு, டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம், பின், டிக்கெட் தொகைக்குரிய பணத்தை செலுத்தும் பட்சத்தில், அவர்களிடம் பாஸ்போர்ட் ஒப்படைக் கப்படும்.இவ்வாறு விஷ்ணு பிரகாஷ் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X