பெரியாறில் தண்ணீர்: தேவை மற்றொரு சுரங்கப்பாதை; இடுக்கி செல்லும் நீரை இழுக்க நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறில் தண்ணீர்: தேவை மற்றொரு சுரங்கப்பாதை; இடுக்கி செல்லும் நீரை இழுக்க நடவடிக்கை எடுக்குமா தமிழகஅரசு?

Updated : ஆக 23, 2018 | Added : ஆக 23, 2018 | கருத்துகள் (25)
Advertisement
பெரியாறு அணை, தண்ணீர், சுரங்க பாதை, இடுக்கி, தமிழக அரசு

முல்லைப் பெரியாறு அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் துவங்கி மேற்கு நோக்கி கேரளாவில் பாயும் பெரியாற்றின் மீது கட்டப்பட்டது. இது தமிழக -கேரள எல்லையில் அமைந்துள்ளது. தமிழக பொதுப்பணித்துறை அணையை பராமரித்து வருகிறது.
கடந்த 1895ல் ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் பென்னிகுவிக் எடுத்த கடும் முயற்சி யால் கட்டப்பட்டது. இதன் கொள்ளளவு 15.5 டி.எம்.சி., உயரம் 155 அடி. நீர் மட்டம் 152 அடி. 1,200 அடி நீளம் கொண்டது. அணையின் நீர்ப் பிடிப் பகுதியான தேக்கடியில் வன சரணாலயம் உள்ளது.சுண்ணாம்பு, சுர்க்கி மற்றும் கருங்கல் கலவையில் கட்டப்பட்ட 'எடை ஈர்ப்பு' அணை என பெரியாறு அணை யின் உறுதித்தன்மைக்கு அடையாளமாக குறிப்பிடுவர். பொதுவாக எடை ஈர்ப்பு அணைகளின் எடை யும், ஈர்ப்பு விசையும் நீர்த்தேக்கப் பகுதியைத் தாங்கி, அவற்றை நிலைப்படுத்தும் வகையில் கட்டுமானம் அமைக்கப்படுகிறது. பெரியாறு திட்டத்தின் கீழ் அப்போதைய சென்னை மாகாணத்திற்கும் (மதுரை மாவட்டத்தை உள்ளடக்கிய தமிழ்நாடு), திருவிதாங்கூர் அரசருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
கடந்த 1886 ஜன., 1ல் கையொப்பமிடப்பட்ட பெரியாறு குத்தகை ஒப்பந்தத்தின்படி, ஒரு ஏக்கர் நிலத்திற்கு தமிழக அரசு சார்பில் ஐந்து ரூபாய் ஆண்டு வாடகை என்ற அடிப்படையில் 999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டதால் முதலில் பெரியாறு அணை என அழைக்கப் பட்டது.முல்லையாறு மற்றும் பெரியாறு 2-ம் சேருமிடத்தின் கீழ் அணை அமைந்துள்ளதால் இரு ஆறுகளின் பெயர்களையும் இணைத்து 'முல்லைப் பெரியாறு அணை'என்றானது.


'மழை மறைவு' மதுரை

பெரியாறு மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி மேற்குநோக்கி ஓடி அரபிக்கடலில் கலக்கிறது. இவ்வாற்றின் நீரை கிழக்கு நோக்கி திருப்பி, மழை மறைவுப் பகுதியான மதுரை மாவட்டம் பயன்பட வகை செய்வதற்காகவே, இவ்வணையை கட்ட பென்னிகுவிக் திட்ட மிட்டார். தேனி மாவட்டத்தில் வருஷ நாடு மேற்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து தரைத் தளம் நோக்கி பாயும் சிறிய ஆறான வைகை ஆற்றின் நீர் வளம் போதுமானதாக இல்லை என்பதே இதற்கு காரணம். அணை கட்டியதால் உருவான தேக்கடி நீர்த் தேக்கத்திலிருந்து, தண்ணீர் கிழக்கு நோக்கி சுரங்கம் வழியாக வைகை ஆற்றுடன் இணைக் கப்படுகிறது.அணையிலிருந்து குமுளிக்கு அருகிலுள்ள போர்பே அணைக்கு தண்ணீர் திருப்பிவிடபட்டு,அங்கிருந்து கீழ் பெரியாற்றில் உள்ள பெரியாறு மின்சக்தி நிலையத்திற்கு (லோயர் கேம்ப்) கொண்டு செல்லப்படுகிறது. பின் அங்கிருந்து சுருளி ஆற்றுக்கும், அதிலிருந்து வைகை ஆற்றையும் அடைகிறது. பெரியாறு அணை உபரி நீர் வைகையை நிரப்பும் பட்சத்தில் மதுரை உட்பட ஐந்து மாவட்ட குடிநீர் தேவை பூர்த்தியாகும்.


2,300 க.அ., நீர் மட்டுமே

பெரியாறு அணையின் மேடான பகுதியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 104 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே இதன் வழியாக தண்ணீர் திறப்பது சாத்தியம். அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் கூட சுரங்கம் வழியாக நான்கு குழாய்கள் மூலம் தலா 400 கன அடி வீதம் 1,600 க.அ., மற்றும் இறைச்சல் பாலம்வழியாக 700 க.அ., நீர் என மொத்தம் 2,300 க.அ., நீர் மட்டுமே கொண்டு வர முடியும். அணையின் உபரி நீர் முழுவதும் இடுக்கி அணைக்கு திருப்பி விடப்படுகிறது.1957 க்கு முன்பு வரை வைகை அணைக்கு1,700 க.அ., நீர் மட்டுமேதிறந்து விட முடிந்தது. சுரங்கத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நான்கு குழாய்கள் மற்றும் இறைச்சல் பாலம் வழியாக நீர் கொண்டுவர பொதுபணித்துறை ஏற்பாடு செய்தது. இதன் பயனாக 1958ம் ஆண்டு முதல் 2,300 க.அ., நீர் கிடைக்கிறது.உச்ச நீதிமன்றம் உத்தரவுபெரியாறு அணை நீர் பங்கீட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வு, 'பெரியாறு அணையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை வழியாக மற்றொரு ரங்கம் அமைத்து தண்ணீர் எடுத்து கொள்வது குறித்து ஆய்வு நடத்தி ஓராண்டுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
அணை பலகீனமாக இருப்பதாகவும், அணையில் கூடுதல் தண்ணீர் தேக்கக்கூடாது என ஆதாரமற்ற தகவல்களை கேரளா பரப்பக்கூடாது,' என 2014 மே 7 ல் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் கொண்டு வர ஏதுவாக மற்றொரு சுரங்க பாதை அமைக்க தமிழக அரசு எள் முனையளவு கூட முயற்சி எடுக்கவில்லை. ''அப்படி ஒரு தீர்ப்பு வந்ததாகவே தெரியவில்லை,'' என பல்லாண்டுகள் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், இப்போது துணை முதலமைச்சராகவும் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


வீணான 2.40 டி.எம்.சி.,


சில நாட்களுக்கு முன்பு பருவமழை தீவிரம் காரண மாக அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியைத் தாண்டியது. இதனால் அணையை ஒட்டி யுள்ள 13 ஷட்டர் வழியாக கேரள பகுதிக்கு வீணாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆக. 16 ல் இருந்து 20 ம் தேதி வரையுள்ள 5 நாட்களில் கேரள பகுதிக்கு 2.40 டி.எம்.சி., தண்ணீர் வீணாக வெளியேறியுள்ளது. ஏற்கனவே கேரளாவில் வெள்ளப்பெருக்கால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், பெரியாறு அணை யில் இருந்தும் தண்ணீர் இடுக்கி அணைக்கு சென்ற தால் பாதிப்பு மேலும் அதிகமானது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அணையில் 142 அடிக்கு மேல் தேக்க முடியாததால் கேரள பகுதிக்கு தண்ணீரை திறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தமிழகப்பகுதிக்கு மேலும் ஒரு சுரங்கப்பாதை அமைத்து இருந்தால் அந்த தண்ணீர் வைகைக்கு வந்து கண்மாய்கள் நிறைந்திருக்கும். கேரளாவிலும் பாதிப்பு குறைந்திருக்கும்.
இப்படி மற்றொரு சுரங்கப்பாதை அமைத்தால் அணையின் நீர்மட்டம் தொடர்பாக கேரளா விடம் அடிக்கடி பிரச்னை செய்ய வேண்டிய அவசியமும் வராது; அணையில் அபரிமிதமாக தண்ணீர் வரும் வேளையில் முடிந்த அளவு தண்ணீரை தமிழக பகுதிக்கு எடுக்க முடியும். அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் எடுத் தால் அணை பலகீனமாக இருப்பதாக ஒப்பு கொண்டதாகி விடும், என்ற தமிழக பொதுப் பணித்துறையின் சில பொறியாளர்களின் கருத்தை தமிழக அரசு பொருட்படுத்த கூடாது. எனவே, உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, மேற்கு தொடர்ச்சி மலையில் மற்றொரு சுரங்கம் அமைத்து பெரியாறு அணை நீரை கூடுதலாக பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கட்சியினர், விவசாயிகள் ஒன்றி ணைந்து அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும்.--
கா.சுப்பிரமணியன்
--டி.கணேசன்


கூடுதல் தண்ணீர் சாத்தியம்

பெரியாறு அணையின் நீர் மட்டம் 50 அடியாக இருந்தால் கூட தமிழகத்துக்கு தண்ணீர் எடுக்க முடியும். இதற்காக லோயர் கேம்ப் அடுத்துள்ள பளியன்குடியிருப்பு மலையில் இருந்து சுரங்கம் அமைப்பது குறித்து 2015 ல் ஆய்வு நடத்தினேன். இவ்விடம் உட்பட சில இடங்களை ஆய்வு செய்ய வேண்டும். பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர சுரங்கம் அமைக்கும் வழித்தடத்தில் மின்சாரம், தகவல் தொழில் நுட்பம், வெடிபொருள் போன்ற வசதிகள் இல்லாத நேரத்தில் சாதாரண வெடிமருந்தை பயன்படுத்தி கிணறு வெட்டுவது போல் பென்னிகுவிக் சுரங்கம் அமைத்தார். தற்போது பொட்டிபுரம் அம்பரப்பர் மலையை 3,000 அடி வரை குடைந்து நியூட்ரினோ ஆய்வு அலுவலகம் அமைக்கும் அளவுக்கு தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் போது, பளியன்குடி யிருப்பில் சுரங்கம் அமைப்பது பெரிய வேலையே இல்லை. ஆய்வு நடத்த ஓராண்டு, பணிகளை முடிக்க ஐந்தாண்டு போதும்.
சுதந்திர அமல்ராஜ்,
முன்னாள் செயற்பொறியாளர்
பெரியாறு அணை மற்றும் பெரியாறு வடி நில கோட்டம்


அரசு கவனிக்க வேண்டும்

தமிழகப்பகுதிக்கு இரண்டாவது சுரங்கப்பாதை அமைத்து மேலும் கூடுதல் தண்ணீர் திறப்பதற் கான நடவடிக்கை எடுத்தால், அணையில் இருந்து 142 அடிக்கு மேல் வீணாக கேரள பகுதிக்கு வெளியேறும் தண்ணீரை, தமிழகம் பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்படும். பெரியாறு அணை நீரால் கேரளாவிற்கு எவ்வித பயனும் இல்லை. இந்த ஆண்டு வீணாக அங்கு சென்ற தண்ணீர் தமிழகப்பகுதிக்கு வந்திருந் தால் இரு போக விவசாயம் முழுமையாக செய்திருக்க முடியும். தமிழக அரசு விரைவில் மேலும் ஒரு சுரங்கப் பாதை அமைத்துதமிழகப்பகுதிக்கு கூடுதல் தண்ணீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பதிவாசன், தேனி மாவட்ட செயலாளர் , விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு

வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வீர சொம்பு கேசரி - New Delhi,இந்தியா
24-ஆக-201807:29:37 IST Report Abuse
வீர சொம்பு கேசரி இப்போ இருக்குற ஊழல் பெருச்சாளிகளை வெச்சி இந்த அணை கட்டுறது, குகை நோண்டுறதுன்னு பண்ணா அம்புட்டுத்தான், பூரா டேமையும் டேமேஜ் பண்ணி சர்வநாசத்துக்கு வழி பண்ணி விட்டுருவானுங்க. கோவிந்தா தான்..
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
23-ஆக-201820:46:17 IST Report Abuse
rajan.  நம்மூரு அம்மாவழி மவரசனுங்க இதை பற்றி சிந்திப்பாங்களோ இல்லையோ எத்தனை கட்டிங் வரும்னு இப்பவே கணக்கு போட்டிருப்பானுங்க. ஒரு நீதிமன்ற தீர்ப்பை பற்றி கூட முழுசா தெரிஞ்சுக்காம துணை முதல்வர் பதவியை வாங்க அலம்பல் பண்ணுவானுங்க. சரி அந்தாண்டை அய்யாவழி மவரசனுங்களை பார்த்தா அவனுங்க மொத்த வேலையும் முடிஞ்சதா கணக்கெழுதி ஆட்டைய போட்டு விட்டு பாதிச்ச குழாயை காணோம்னு போலீஸ்ல மனு கொடுத்து மக்களை விட்டு ஆத்துவானுங்க.. தமிழகம் இவிங்களை வச்சு திருந்துமாக்கும்.
Rate this:
Share this comment
Cancel
venu - Tirupur,இந்தியா
23-ஆக-201817:13:38 IST Report Abuse
venu super
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X